விந்தணுவால் அலர்ஜி வருமா? இதன் அறிகுறிகள் என்ன? எப்படி கண்டறிய வேண்டும்?

First Published | Feb 1, 2023, 3:30 PM IST

உடலுறவு, சுயஇன்பம் ஆகியவற்றில் ஈடுபடும்போது வெளியேறும் விந்தணுக்கள் அலர்ஜியை உண்டாக்க வாய்ப்புள்ளது. 
 

தாம்பத்தியத்தில் ஈடுபட்டு உச்சக்கட்டத்தை அடையும்போது விந்தணுக்கள் நீர்ம வடிவில் வெளியேறும். இவை ஆண், அல்லது பெண்ணின் உடலில் பட்டால் சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்துகிறது. இந்த நோய்க்கு போஸ்ட் ஆர்கஸ்மிக் இல்னஸ் (Post-orgasmic illness) என்று பெயர். 
 

புரங்களால் நிரம்பியுள்ள ஆண்களின் விந்தணுக்கள் வெளியேறும்போது, உடலின் சில பகுதிகளில் அந்த புரதம் ஒவ்வாமையை ஏற்படுத்தும். வாய் வழி புணர்ச்சி செய்பவர்களுக்கு வாயில் இதற்கான அறிகுறிகள் தென்படும். 

அறிகுறிகள்

அரிப்பு ஏற்பட்டு சருமம் சிவப்பு நிறமாக மாறும். எரிச்சலும் வலியும் இருக்கும். உயிர் குறிகள் மீதும், அதன் அருகிலும் பெரிய தடிப்புகளுடன் வலி ஏற்படும். பெண்களில் சிலருக்கு பெண்ணுறுப்பை சுற்றியோ அதனுள்ளோ இந்த நோய் அறிகுறி தென்படும். சிலருக்கு மட்டும் மயக்கம், மூச்சிறைப்பு, வேகமான இதயத்துடிப்பு, பதற்றம், குறைந்த இரத்த அழுத்தம் போன்ற அறிகுறிகள் ஏற்படலாம். 


ஒருவேளை மேலே சொன்ன அறிகுறிகள் இருந்தால், அந்த இடத்தை சுத்தம் செய்வதை கடைபிடியுங்கள். மருத்துவரின் பரிந்துரையின் கீழ், அலர்ஜிக்கான மாத்திரையை வாங்கி பயன்படுத்தலாம். சிலருக்கு உடனடி தீர்வு கிடைக்கலாம். கிடைக்காதபட்சத்தில் முறையாக மருத்துவரிடம் சிகிச்சை எடுத்துகொள்ளுங்கள். 

இதையும் படிங்க: பொட்டுக்கடலையில் பொதிந்துள்ள நன்மைகள் தெரியுமா? தினமும் ஒரு கைப்பிடி சாப்பிட்டால் போதும்..!

பெண்களுக்கு இந்த நோய் உங்கள் துணையிடம் இருந்து பரவும் வாய்ப்புள்ளது. அதனால் உங்களுடைய பாலியல் உறவு, அலர்ஜி குறித்து தெளிவாக அனைத்து தகவலையும் மருத்துவரிடம் தெரிவியுங்கள். உங்கள் துணையின் விந்தணு மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, உங்கள் தோலில் செலுத்தப்பட்டு சோதிக்கப்படும். அவசியம் ஏற்பட்டால் ரத்த மாதிரிகளும் சோதனைக்கு உட்படுத்தப்படும். 

எப்போதும் பாதுகாப்பான உடலுறவில் ஈடுபடுவது அவசியமாகும். ஆணுறையை உபயோகம் செய்யுங்கள். ஆண்களே, நீங்கள் சுய இன்பம் செய்தால் விந்தணுக்கள் உடலில் படாமல் கவனமாக இருங்கள். உடலில் பட்டாலும் உடனடியாக சுத்தம் செய்து கொள்ளுங்கள். 

இதையும் படிங்க: நம்பவே முடியாத பெண்களின் செக்ஸ் கற்பனைகள்... எப்படிலாம் யோசிக்குறாங்க பாருங்க..

Latest Videos

click me!