உறவுகளிடம் மறைக்கக் கூடாத 3 உணர்ச்சிகள் இவைதான்!!

Published : Jun 02, 2025, 05:13 PM IST

நெருக்கமான உறவுகளிடம் மறைக்காமல் வெளிப்படுத்த வேண்டிய 3 உணர்ச்சிகளை இங்கு காணலாம்.

PREV
16

Three Emotional Values You Should Not Suppress : உறவுகள் பலப்பட சில விஷயங்களில் வெளிப்படையாகவும், சில விஷயங்களில் சூசகமாகவும், சில விஷயங்களை பட்டும்படாமலும் சொல்ல வேண்டும். இப்படியிருக்க மனிதர்கள் 3 உணர்ச்சிகளை அதிகம் அடக்குவதாக உளவியலாளர்கள் கூறுகின்றனர். இப்படி உணர்வுகளை அடக்குவதால் மனச்சோர்வு, மன அழுத்தம் ஏற்படுகிறது. இந்தப் பதிவில் நெருங்கிய உறவுகளிடம் எந்தெந்த உணர்ச்சிகளை மறைக்காமல் வெளிப்படுத்த வேண்டும் என்பதை காணலாம்.

26

உணர்ச்சிகளை அடக்குதல்

எண்ணங்கள் தான் நம்முடைய வாழ்க்கையில் பெரிய பங்கு வகிக்கிறது. நாம் எதை சிந்திக்கிறோமோ அதை வாழ்க்கையில் பெறுகிறோம். உதாரணமாக நீங்கள் பிரச்சனைகளையே சிந்தித்தால் பிரச்சனைகள் இன்னும் அதிகமாகவும், பிரச்சனைக்கான தீர்வுகளை யோசிக்கும்போது அதற்கான தீர்வுகளை அதிகமாகவும் ஈர்ப்பீர்கள். ஆனால் அதற்காக நேர்மையான சிந்தனைகளை மட்டும் தான் சிந்திக்க வேண்டும் என உங்களை நீங்களே கட்டுப்படுத்தக்கூடாது. மேகங்கள் போல எண்ணங்கள் உங்களை கடந்து போக அனுமதிக்க வேண்டும். நேர்மறையான சிந்தனைகளை மட்டுமே சிந்திக்க வேண்டுமென உங்களுக்குள் இயல்பாக எழும் எதிர்மறை சிந்தனைகளை அடக்கி வைப்பதால் உளவியல் ரீதியாக பிரச்சனைகளை சந்திப்பீர்கள்.

36

கோபம்! கோபம்!

கோபப்படுவதே தவறு. கோபம் ஒருவரை அளிக்கக் கூடியது என சொல்வார்கள். ஆனால் கோபத்தை எப்போதுமே அடக்குவதன் மூலமாக உங்களுடைய மன ஆரோக்கியம் மோசமாக மாறிவிடுகிறது. சில நேரங்களில் நீங்கள் கோபத்தை வெளிப்படுத்துவது அவசியம். அது மாதிரி தவிர்க்க முடியாத நேரத்தில் கோபத்தை வெளிப்படுத்தலாம்.

46

பொறாமை

யார் மீதாவது உங்களுக்கு பொறாமை ஏற்படும்போது அதை அடக்கி வைக்கக் கூடாது. இந்த மாதிரி பொறாமை ஏற்படும்போது அதை அடக்கி வைப்பதால் நாளடைவில் அது வன்மமாக மாறிவிடும். உங்களுக்கு பொறாமை ஏற்படும்போது நீங்கள் உங்களை மேம்படுத்திக் கொள்ள முயற்சி செய்ய வேண்டும். அதுதான் சரியான தீர்வாக இருக்கும். யார் மீது உங்களுக்கு பொறாமை வருகிறதோ அதுவே உங்களுக்குள் தேங்கியிருக்கும் ஆசையாக இருக்கலாம். அதை அடைய உழைப்பை செலுத்துங்கள்.

56

வருத்தம்

கடந்த காலத்தில் செய்த தவறுகளுக்காக நிகழ்காலத்தில் உங்களை நீங்களே வருத்தி கொள்வது நல்லதல்ல. ஈகோவை விடுத்து தவறை உணரும்போது அந்த நபரிடம் மன்னிப்பு கேட்டு சமாதானம் ஆகிவிட வேண்டும். அந்த உறவை இழப்பதோடு வருத்தத்தில் உங்களையும் இழப்பீர்கள். இதற்கு பதிலாக அவர்களிடம் மன்னிப்பு கேட்டுவிட்டால் அன்பு பெருகும்.

66

உங்களுக்கு நெருக்கமானவர்களிடம் உங்களுடைய பொறாமை, கோபம், வருத்தம் போன்றவற்றை வெளிப்படுத்துவதில் எந்த தவறும் இல்லை. அதனால் நீங்கள் பலவீனவராகவும் ஆகிவிடமாட்டீர்கள். அதனால் இவற்றை தவிர்க்காமல் வெளிப்படுத்துவது நல்லது.

Read more Photos on
click me!

Recommended Stories