தாய்ப்பால் குடித்த மணமகன்
நாம் சிறுவயதில் தாய்ப்பால் குடித்து வளர்ந்திருப்போம். ஆனால் இங்கு மணமகன் கல்யாணத்தன்று கூட தாயிடம் பசியாறியிருக்கிறார். இந்தத் தகவலை, தொழில்ரீதியாக திருமண நிகழ்வில் ஏற்பாடுகளை செய்து வரும் ஜோர்ஜி மிட்செல் என்பவர் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். இவர் இங்கிலாந்தில் இருக்கும் தொழில்முறை திருமண திட்டமிடுபவர். இவர் தனது சக ஊழியர் ஜென்னி பகிர்ந்து கொண்ட அனுபவத்தை பொதுவெளியில் பகிர்ந்து கொண்டார். இந்த விவகாரம் மணப்பெண்ணை மட்டுமின்றி குடும்பத்தினர், உறவினர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது என்பதை விளக்கியுள்ளார்.
உண்மையை அறிந்த மணமகள்
திருமணத்திற்கு சில நிமிடங்களுக்கு முன்பு மணமகன், தனது தாயின் தாய்ப்பாலை குடித்து கொண்டிருந்ததை மேக்கப் ஆர்டிஸ்ட் ஜென்னி தான் கண்டிருக்கிறார். இவர் மணமகளுக்கு மேக்கப் செய்துவிட்டு கழிவறைக்கு போகும் வழியில் இதை கவனித்துள்ளார். மணமகன் தன் தாயிடம் இருப்பதை கண்ட அவருக்கு ஏதோ வினோதமாகபடவே, ஒரு நிமிடம் நின்று கவனித்துள்ளார். அப்போதுதான் மணமகன் தாய்ப்பால் அருந்திக் கொண்டிருந்தது தெரிய வந்துள்ளது. இதை அவர் மணமகளிடம் தெரிவிக்கவே அவர் அதிர்ச்சியில் உறைந்தே போனாராம்.