உறவு கொள்ளும் முன் ஆண் உறுப்பின் முன்தோலை நீக்கனுமா? ஆணுறை அணியுறப்ப இதையுமா பண்ணனும்...
ஆணுறை அணியும் நபர்கள் உறவு கொள்ளும் முன் முழுமையாக படிக்க வேண்டிய பதிவு...
தாம்பத்திய சுகம் முழுமையாக கிடைக்க உறவு கொள்ளும் முன் சில விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். கருத்தரிக்காமல் இருக்க கூடுதல் கவனம் வேண்டும். கருத்தரிக்காமல் இருக்க பெரும்பாலான ஆண்கள் ஆணுறை எனும் காண்டம் அணிந்து கொள்கிறார்கள். சிலர் ஆணுறை அணிவதற்காக ஆண் உறுப்பின் முன் தோலை நீக்கும் நடவடிக்கையில் ஈடுபடுகிறார்கள். அதாவது அந்த தோலை பின்னுக்கு தள்ளிவிடுகிறார்கள். இது அவசியமா? முழுமையாக இங்கு காணலாம்.
ஆணுறை அணிவதில் ரொம்ப குழம்ப வேண்டிய அவசியமே இல்லை. அதை வாங்கும்போது அதில் கொடுக்கப்பட்டிருக்கும் விளக்கங்களை படித்தால் ஓரளவு புரிதல் கிடைக்கும். முக்கியமாக ஆணுறையை முறையாக பயன்படுத்தாவிட்டால், உங்கள் துணைக்கும் பிரச்சனையை ஏற்படுத்தலாம். ஆணுறைகள் ஆண்குறியின் முனை, தண்டு ஆகியவற்றை மூடி கொள்ளும். இதனால் உச்சமடையும்போது வெளியேறும் விந்து பெண் உறுப்புக்குள் செல்லாது.
ஆணுறை தற்காலிக கருத்தடை மட்டுமில்லை, பரவும் பாலியல் நோய், சில பாக்டீரியா நோய்களை கூட இவை அண்டவிடுவதில்லை. உறவு கொள்ளும் முன் ஆணுறையின் தரம், நிறம், காலாவதி தேதியை கவனியுங்கள். தேதி கடந்த ஆணுறைகள், நிறம் மாறிய ஆணுறைகள் கிழியும் வாய்ப்பு உள்ளது. இவற்றை தவிருங்கள். பிசுபிசுப்பாக ஒட்டும் தன்மை கொண்ட ஆணுறைகளை பயன்படுத்த வேண்டாம்.
ஆணுறையை அணியும்போது ஆண் குறியின் முன் தோலை பின்புறம் கொஞ்சம் தள்ளி விட்டு அணிவதும் பலன் தரும். அப்படியே அணிவதும் அதே பலனை தருகிறது. கண்டிப்பாக முன் தோலை பின்னுக்கு தள்ள வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.
இதையும் படிங்க: ஒருவர் மீது பாலியல் ஈர்ப்பு வர இப்படி கூட காரணம் இருக்குமா?
உறவு கொண்டு உச்சமடைந்த பிறகு விந்து வெளியேறிய நிலையில் ஆணுறுப்பு நிமிர்ந்து இருக்கும்போதே வெளியே எடுங்கள். அந்த சமயத்தில் ஆணுறையை ஒரு கையால் பிடித்து வைத்து கொள்வதால் விந்து உள்செல்வதை தடுக்கலாம். இன்னும் ஆணுறை குறித்த சந்தேகம் இருந்தால் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுங்கள்.
இதையும் படிங்க: கணவரோடு உறவு கொள்வதை விட சுயஇன்பம் மேல தான் ஆர்வமா இருக்கு, அப்ப கருத்தரிக்க முடியாதா? வாசகிக்கு நிபுணர் பதில்