நாம் ஒரு உறவில் இருக்கும்போது பரஸ்பர நம்பிக்கை, அன்பு ஆகியவை முக்கியம். இவை தான் உறவை பலப்படுத்தும். ஆனால் காலப்போக்கில் அந்த புரிதல் குறைய தொடங்கி.. படிப்படியாக ஒருவருக்கு ஒருவர் சுமையாக மாறிவிடுகின்றனர். அதன் பின் ஒருவருக்கொருவர் குறைகளை மட்டும் கண்டறியத் தொடங்குகிறார்கள்.
உறவின் வலிமைக்குத் தேவையான பல விஷயங்களைப் பகிர்ந்து கொள்வதை நிறுத்துகிறார்கள். உங்கள் துணை எதை மறைக்கிறார் அல்லது உங்களிடம் சொல்ல விரும்பவில்லை என்று நீங்கள் உணரத் தொடங்கினால், அது உங்களுக்கு கவலையை ஏற்படுத்தும். இதற்கான அடிப்படை விஷயங்களை இங்கு தெரிந்து கொண்டு பயன்பெறுங்கள்.
கோபம் கொள்ளாதீர்கள்..!
துணை ஏதாவது சொன்னால், உடனே கோபப்படக் கூடாது என்பது முதல் விதி. பல நேரங்களில் தங்கள் துணைக்கு கோபம் வரும் என அவரிடமிருந்து விஷயங்களை மறைக்கிறார்கள். இதை மறைக்க, அவர்கள் மீண்டும் மீண்டும் ஒவ்வொரு பொய்யாக ஒன்றன் பின் ஒன்றாகச் சொல்கிறார்கள்.
சின்ன ப்ராமிஸ்..!
எல்லாவற்றையும் சொல்வதாக உறுதியளியுங்கள். இந்த பழக்கம் உங்களிடையே நம்பிக்கையை நிலையாக வைக்கிறது. எல்லா விஷயங்களையும் பக்குவமாக பகிர்ந்து கொள்ளுங்கள். எதையும் மறைக்கமாட்டீர்கள் என்ற நம்பிக்கை அளித்தால் அவர்களும் உங்களிடம் சொல்வார்கள்.
சப்போர்ட் பண்ணுங்க..!
நீங்கள் எப்போதும் அவரை சப்போர்ட் செய்வதை அவர்களுக்கு உணர்த்துங்கள். உலகில் யார் எதை சொன்னாலும் முதலில் உங்களுடைய துணையின் வார்த்தைகளை நம்புவீர்கள் என்பதை சொல்லுங்கள். இதைச் செய்தால், உங்கள் துணை ஒவ்வொரு சூழ்நிலையிலும் உங்களுடன் எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்வார். அவரது ரகசியத்தை உங்களிடம் நம்பி சொல்வார்.
இதையும் படிங்க: உடலுறவின்போது பெண்கள் இப்படியெல்லாம் கேட்குறாங்களா? ஆண்களின் பகீர் செக்ஸ் அனுபவங்கள்