ஆறு ஆண்டுகளாக தன்னுடன் இருந்த மனைவியும், தன் குழந்தைகளின் தாயும் உண்மையில் தனது சகோதரி என்பதை அறிந்து அந்த நபர் பயங்கர அதிர்ச்சியடைந்தார். இந்த தகவலை Redditல் பகிர்ந்துள்ளார். அதாவது இத்தம்பதிக்கு மகன் பிறந்த பிறகு தான் சிக்கல் வந்துள்ளது. அவரது மனைவிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய முயன்றபோது சரியான சிறுநீரகங்கள் கிடைக்கவில்லையாம். இதனால் தன்னுடைய சிறுநீரகத்தை கொடுக்க கணவர் முன்வரவே, பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.