Life Problem : அப்படியானல் உங்களுடைய மணவாழ்க்கையில் ஏதோ பிரச்னை உள்ளது என்று அர்த்தம்.!!

First Published Mar 15, 2023, 4:20 PM IST

திருமணங்கள் முறிவதற்கு பல காரணங்கள் உள்ளன. சில சமயங்களில் நம் தவறுகளால் நம் உறவை அழித்து விடுகிறோம். சில நேரம் புறவழியில் ஏற்படக் கூடிய பிரச்னைகளால் தம்பதிகள் பிரிந்துவிடுகின்றனர். ஒருசில தவறை உணர்ந்து, அதை மாற்றிக்கொண்டே சுகமான இல்லறத்தை பெறலாம்.
 

கணவன்-மனைவி உறவில் உள்ள பெரும்பாலான பிரச்சனைகள் ஏற்படுவதற்கான முக்கியமான காரணம் சுயநலன். வாழ்க்கையில் முன்னேற்றம், வேலையில் முன்னேற்றம், ஊதிய முன்னேற்றம் உள்ளிட்ட தேவைகளை கருதி பலரும் ஓடிக்கொண்டே உள்ளனர். அப்படி ஒரு நிலைக்கு அவர்கள் மாறும் போது தான் பிரச்னையை துவங்குகிறது. இது தவிர மாமியார், மருமகள் இடையே சண்டை ஏற்படும் போது பல குடும்பங்கள் உடைந்துபோய் விடுகின்றன. ஆனால் சில திருமணங்கள் முறிவதற்கும் சம்மந்தப்பட்ட தம்பதிகளே காரணமாக இருப்பார்கள். கணவனும் மனைவியும் தங்கள் உறவில் மூன்றாவது நபர் நுழைந்தால் மட்டுமே பிரிந்து செல்ல வேண்டியதில்லை.  தங்களுடைய தவறு காரணமாகவே திருமண வாழ்க்கையை இழந்தவர்கள் பலர் உள்ளனர்.
 

நெருக்கம் இல்லாமை

கணவன்-மனைவி இடையே உணர்ச்சிப்பூர்வமான இணைப்பு இல்லாதபோது, ​​அவர்களுக்கிடையேயான உறவு மோசமடைகிறது. இங்கே உணர்ச்சி நெருக்கம் என்பது உங்கள் தனிப்பட்ட விஷயங்களை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்வது உள்ளிட்ட விஷயங்களை கொண்டதாகும். அப்போது தாம் தாம்பத்தியம் சிறக்கும். அதே நேரத்தில், தங்கள் தனிப்பட்ட விஷயங்களை அல்லது இடத்தை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ளும் தம்பதிகளுக்கு இடையேக் கூட பிரச்னைகள் வருகின்றன. ஆனால் அவர்களிடையே இருக்கும் நெருக்கம் பிரச்னையை கடந்துவிடுகிறது. இதனால் அவர்களுடைய இல்லறம் சிறக்கிறது.
 

உடலுறவு குறைதல்

திருமணமான ஆரம்ப நாட்களில் கணவன்-மனைவி இடையே காதல் அதிகமாக இருக்கும், ஆனால் திருமணமாகி 2 வருடங்கள் ஆனவுடனேயே அவர்களுக்குள் எதுவும் ஒரே மாதிரியாக இருக்காது. கணவன் கைகளைப் பிடித்தல் - முத்தமிடுதல், அரவணைத்தல் மற்றும் உடலுறவு அனைத்துக்குமான முன்னுரிமை மாறிவிடும். ஒரு உறவில் காதலை பராமரிக்க செக்ஸ் அவசியமில்லை. நீங்கள் விரும்பினால், உங்கள் துணையை கட்டிப்பிடித்தன் மூலமாக அன்பை உணர்த்தலாம். உங்கள் திருமண வாழ்க்கை நீண்ட காலம் தொடர வேண்டுமெனில், உங்களுக்கிடையேயான காதல் உறவை வெற்றிடமாக வைத்திருக்கக் கூடாது.

திருமணமான ஆண்கள் “பிறர் மனை நோக்குவது” ஏன்..??

நிதி சிக்கல்கள்

திருமண வாழ்க்கையை சிறப்பாக நடத்துவதில் பணம் பெரும் பங்கு வகிக்கிறது என்பதில் சந்தேகமில்லை. உங்கள் திருமண வாழ்க்கையில் நீங்கள் நிதி நெருக்கடிகளை எதிர்கொண்டால், அது தம்பதியினரிடையே பெரும் பதற்றத்தை உருவாக்கும். குறிப்பாக ஒருவர் மற்றவரை விட அதிகமாக செலவு செய்யும் போது சண்டை சச்சரவுகள் ஏற்படும். நீங்கள் இருவரும் பணத்திற்காக சண்டையிட்டால், நீங்கள் இருவரும் ஒன்றாக உட்கார்ந்து பட்ஜெட் செய்ய வேண்டும். இப்படிச் செய்வதன் மூலம் உங்கள் இருவருக்குள்ளும் உள்ள பிரச்சனைகள் முடிவுக்கு வருவதோடு மட்டுமல்லாமல் காரியங்களும் சுமுகமாக நடக்கும். பணத்தை சேமிப்பதற்கான வழிகளையும் நீங்கள் தெரிந்துவைத்துக் கொள்வது அவசியம்.
 

ஒருவரையொருவர் கவனிப்பதில்லை

உங்கள் மீது உங்களுடைய துணை அக்கறையை வெளிப்படுத்தும் போது, நீங்களும் அதே அளவுக்கான அக்கறையை பார்டனர் மீது காட்ட வேண்டும். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் இருவரும் ஒருவரையொருவர் கவனித்துக்கொள்வதை நிறுத்தினால், அது உங்கள் உறவை பெரியளவில் பாதிக்கும். எந்தவொரு ஆரோக்கியமான உறவுக்கும், தம்பதிகளுக்கு இடையேயான கவனிப்பு நிறுத்தப்படக்கூடாது. அப்போது தான் அது ஆரோக்கியமான உறவாக இருக்கும். நீங்கள் ஒருவரையொருவர் எவ்வளவு அதிகமாக புரிந்துகொள்கிறீர்களோ, அவ்வளவு அதிகமாக நீங்கள் ஒருவரையொருவர் கவனித்துக்கொள்வீர்கள். இதன்மூலம் உங்களுக்கு இடையேயான நெருக்கம் அதிகரித்து, இல்லறம் சிறக்கும். 

click me!