சமூக ஊடகங்கள், சாட்டிங் தளங்கள், டேட்டிங் தளங்களில், உறவுகளை உருவாக்குவது ஒரு விளையாட்டாகிவிட்டது. நட்பு மற்றும் காதல் போன்ற உறவுகள் ஒரு நபரின் சமூக அந்தஸ்தின் ஒரு பகுதியாக உள்ளன. எனவே, படத்தில் காண்பது போல் ரொமாண்டிக்காக தோற்றமளிக்க மக்கள் தங்கள் நேரத்தையும் பணத்தையும் முதலீடு செய்யத் தயங்குவதில்லை. இது மட்டுமின்றி பல சமயங்களில் ஈர்ப்பையும் காதலாக கருதுகின்றனர். இதனாலேயே பல சமயங்களில் காதல் திருமணத்திற்குப் பிறகும் ஒருவரையொருவர் மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள முடியாமல் போய்விடுகிறது.
டேட்டிங்கிற்குச் செல்வது, வெறித்தனமாக ஒருவரை காதலிப்பது போன்றவை மிகவும் முக்கியமாக தெரியலாம். ஆனால் டேட்டிங் மூலம் நமக்கேற்ற நபரை தேர்வு செய்வதற்கு பெரும் புரிதல் தேவைப்படுகிறது. உறவைப் பேணுவது மிகவும் கடினம். ஒரு உறவைப் பேணுவதற்கு, நீண்ட கால புரிதல், மரியாதை மற்றும் நம்பிக்கை உள்ளிட்டவை மிகவும் முக்கியமானதாகும்.
உறவுகள் வாழ்க்கையில் நாம் செய்யும் முதலீடு போன்றவை. ஒரு சிறிய தவறு உங்களுடைய மகிழ்ச்சியை மூழ்கடித்துவிடக் கூடும். அத்தகைய சூழ்நிலையில், உங்கள் மனைவியுடன் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க விரும்பினால், சில வழிமுறைகள் உள்ளன. அதை பின்பற்றுவது நிச்சயமாக நல்ல பலனை அளிக்கும்.