ச்சீ..!இந்த பிரச்சனை இருக்க ஆண்கள் கூட.. அவங்க மனைவி செக்ஸ் வச்சிக்காம விலகிடுவாங்க..!

First Published | Mar 14, 2023, 5:30 PM IST

உங்களுடன் செக்ஸ் வைத்து கொள்ள தயங்கவும் தவிர்க்கவும் உள்ள காரணங்களை இந்த பதிவில் காணலாம். 

உடலுறவு சுவாரஸ்யமானது. வித்தியாசமாக செய்தால் ஆர்வம் கூடும். ரசிக்கும்படியாக இல்லாமல், காதல் குறைந்து காணப்ப்டால் பெண்கள் எளிதில் உடலுறவில் ஆர்வம் காட்டமாட்டார்கள். செக்ஸ் உறவு வைப்பதில் சிலருக்கு சலிப்பு வரும். பெண்கள் உடலுறவு கொள்ள தயங்கும் காரணங்களை இங்கு காணலாம். 

ச்சீ..கெட்ட வாசனை!

கெட்ட வாசனை எல்லோருக்கும் வெறுப்பை தான் ஏற்படுத்தும். சிலருக்கு தங்களுடைய துணையின் வியர்வை வாசனை பிடிக்கும். ஆனால் எல்லோருக்கும் அப்படி பிடிப்பதில்லை. சிலர் அதிகமாக சுத்தத்தை விரும்புபவர்களாக இருப்பார்கள். வாய் துர்நாற்றம், அதிகமான வியர்வை சுரத்தல் போன்ற பிரச்சனைகள் இருந்தால் செக்ஸ் வைத்துக் கொள்வதற்கு முன்பாக குளித்துவிட்டு செல்வது துணையை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். 

Tap to resize

அய்ய..உடலுறவில் வரும் வெறுப்பு 

உடலுறவு வைத்துக் கொள்ள வேண்டும் என்ற உங்களுடைய விருப்பம் உங்கள் துணையுடன் சில நேரங்களில் ஒத்துப் போகாமல் காணப்படலாம். அந்த மாதிரி சமயங்களில் கட்டாயப்படுத்தி அவர்களுடன் செக்ஸ் வைத்துக் கொள்வது அதிருப்தியை ஏற்படுத்தும். பெண்கள் உடலுறவை தவிர்ப்பதற்கு பல காரணங்கள் இருக்கும். அது உடல் அல்லது உணர்ச்சி ரீதியான காரணங்களாக இருப்பின் நீங்கள் அதற்கு மதிப்பு கொடுக்க வேண்டும். 

ம்ஹும்ம்..பாலுணர்வு 

பாலுணர்வு குறைவதற்கு மன அழுத்தமும் ஒரு காரணம். உணர்வு ரீதியாக நீங்கள் அதிகமாக காயப்பட்டிருந்தால் அந்த சமயங்களில் உங்களுக்கு உடலுறவு மீது ஆர்வம் இல்லாமல் போகலாம். உங்களுடைய துணை மன அழுத்தத்தில் இருந்தால் அந்த சமயங்களில் அவருடைய விருப்பத்தை கேட்டு உடலுறவு கொள்வது நல்லது. உங்களுக்கு இருக்கும் பாலியல் ஆர்வத்தை கண்டறிய விடுமுறை அன்று உறவு கொள்ளுங்கள். அப்போது உங்கள் துணையுடன் உறவு நன்றாக இருந்தால் மன அழுத்தத்தை போக்க முயற்சி செய்யுங்கள். துணைக்கும் ஓய்வு தேவை என்பதை மனதில் வையுங்கள். வாரம் முழுக்க அவர்கள் வேலை செய்கிறார்கள். வீட்டு வேலைகளை ஓயாமல் செய்வது கடுமையான சோர்வை அளிக்கலாம். 

கிர்ர்ர்..கொடூரமான செக்ஸ் 

சில நேரங்களில் ஆண்களால் உடலுறவில் நன்கு இயங்க முடியாமல் போகலாம். அந்த சமயங்களில் பெண்களும் பாலியல் ஆர்வத்தை இழக்கிறார்கள். ஆண்கள் இந்த பிரச்சனையை ஏற்றுக் கொள்ள முடியாமல் திணறுகிறார்கள். முன்கூட்டியே விந்து தள்ளுதல், விரைப்புத்தன்மை பிரச்சனை போன்ற ஆண்கள் சார்ந்த பிரச்சனைகள் பெண்களுக்கும் உடலுறவில் தயக்கத்தை ஏற்படுத்தலாம். இருவரும் புரிதலோடு செயல்பட்டால் ரொனாண்டிக்காக அந்த உறவை கொண்டு செல்லலாம். 

இதையும் படிங்க: வெள்ளி மோதிரம் இந்த விரலில் அணிந்து கொண்டால் போதும்.. உங்களுக்கு புகழும் அதிர்ஷடமும் தேடி வரும்..

ஆ... வலிக்குதே..! 

உடலுறவின் போது வலி வந்தால் அங்கு பிரச்சனை உள்ளது என பொருள். வலியுடன் செக்ஸ் வைத்து கொள்ள இடுப்புத் தளச் செயலிழப்பும் ஒரு காரணமாக இருக்கும். இடுப்பின் கீழ்பகுதியில் இருக்கும் தசைகள் ஓய்வு கொள்ளாவிட்டால் வரும். டெஸ்டோஸ்டிரோன், ஈஸ்ட்ரோஜன் அளவுகள் சீராக இல்லாவிட்டால் செக்ஸ் வைக்கும் போது வலி உண்டாகும். உடலுறவின் போது உங்களுக்கு வலி வந்தால் மருத்துவரிடம் போங்கள். தயங்க வேண்டாம். 

இதையும் படிங்க: நீங்கள் அறிந்திராத சில செக்ஸ் உண்மைகள்.. இப்படியுமா நடக்குது? இந்த கில்லாடி விந்தணுக்களோட வேலைய பாருங்களேன்

Latest Videos

click me!