விறைப்புத்தன்மை பிரச்னையால் அவதிபடும் ஆண்கள்- மனைவிமார்கள் என்ன செய்ய வேண்டும் தெரியுமா?

First Published | Feb 23, 2023, 8:13 PM IST

ஆண்களுக்கு எழுச்சியில் பிரச்னைகளை சந்திக்கும் போது, பெரும்பாலானோர் மன அழுத்தத்தால் பாதிக்கப்படுகின்றனர். அந்த நேரத்தில் அவருடைய மனைவி அல்லது துணை உறுதுணையாக இருந்து கவனித்துக்கொள்வது முக்கியம்.
 

Image: Getty Images

தற்போதைய காலத்தில் ஆண்கள் பலரிடையே விறைப்புத்தன்மை குறைபாடு நிலவுகிறது. இந்த பிரச்சனை ஆண்களை அதிக அளவில் பலவீனப்படுத்துகிறது. அப்படிப்பட்ட நேரத்தில், அவர்கள் மனைவி அல்லது காதலிகள் உறுதுணையாக நிற்க வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகின்றன. ஏனெனில் ஆண்களுக்கு எழுச்சி தொடர்பான பிரச்னை ஏற்படுகையில், அவர்களில் பெரும்பாலானோர் மனம் நொந்து போகின்றனர். எனவே, அந்த நேரத்தில் அவர்களுக்கு ஒரு உறுதுணை கிடைப்பது முக்கியமாக உள்ளது. பாலியல் பிரச்னை சார்ந்த விஷயங்களில் துணையின் உறுதுணை கிடைப்பதைக் காட்டிலும் வேறு எந்த நம்பிக்கையும் பெரிதாக தோன்றாது.

ஆதரவை வெளிப்படுத்துவது

நீங்கள் அவர்களுக்காக இருக்கிறீர்கள் என்பதையும் அவர்கள் மீது உங்களுக்கு அக்கறை இருப்பதையும், உங்களது கணவர் அல்லது காதலருக்கு தெரியப்படுத்துவது முக்கியம். விறைப்புத்தன்மை பல ஆண்களுக்கு அவமானம் மற்றும் சங்கடத்தை உறவில் ஏற்படுத்துகிறது. எனவே பெண்கள் இந்த விவகாரத்தில் மென்மையாக இருப்பதை கடைப்பிடிக்க வேண்டும். புரிந்து கொண்டு அவர்களை அணுகுவது முக்கியம். மொட்டையான வார்த்தைகளால் அவர்களை காயப்படுத்தாமல், நீங்கள் புரிந்துகொண்டு நடப்பது மிகவும் முக்கியம்.
 

Tap to resize

தொழில்முறை உதவியை நாட வேண்டும்

உடல் மற்றும் உளவியல் பிரச்சனைகள் உட்பட பல காரணங்களால் விறைப்புத்தன்மை இழப்பு ஏற்படுகிறது. பிரச்சனைக்கான காரணத்தை கண்டறிந்து தகுந்த சிகிச்சையை துவங்க வேண்டும். இதற்கு தகுந்த சிகிச்சை முறைகளை பெறுவது அவசியம். மருத்துவர் அல்லது சிகிச்சையாளரிடம் பேச உங்கள் துணையை ஊக்குவிக்கவும்.
 

நெருங்கி வர வேண்டும்

இருவருக்குள்ளும் நெருக்கத்தை அதிகரிக்க முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். உடல் நெருக்கம் என்பது உடலுறவு மட்டுமல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள். உங்கள் பார்டனர் விறைப்புத்தன்மை பிரச்னை அனுபவித்தாலும், அவருடன் நீங்கள் மிகவும் திருப்திகரமான, நெருக்கமான உறவை வைத்திருக்க முடியும்.கட்டிப்பிடிப்பது, முத்தமிடுவது மற்றும் கைகளைப் பிடிப்பது போன்ற உடல் ரீதியாக நெருக்கமாக இருக்க மற்ற வழிகளில் கவனம் செலுத்துங்கள்.

அன்பிற்குரியவரை தவிர மற்றவர்கள் நம் உதட்டையே பார்த்தால் என்ன அர்த்தம் தெரியுமா..??

பொறுமையாக இருங்கள்

விறைப்புச் செயலிழப்பைக் கடக்க நேரம் ஆகலாம். இது வெவ்வேறு சிகிச்சைகள் அல்லது நடைமுறைகளை முயற்சிப்பதன் மூலம் சாத்தியமாகிறது. அதற்குரிய செயல்முறை முழுவதும் பொறுமையாகவும் ஆதரவாகவும் இருப்பது முக்கியம். வாய்வழி உடலுறவு அல்லது பரஸ்பர சுயஇன்பம் போன்ற விறைப்புத்தன்மை தேவையில்லாத வெவ்வேறு பாலியல் செயல்பாடுகளில் நீங்கள் ஈடுபடலாம். இது உங்கள் துணையின் மன அழுத்தத்தை குறைக்க உதவும். நீங்கள் இருவரும் இன்பத்தை அனுபவிக்க புதிய வழிகளை உருவாக்கலாம்.
 

Latest Videos

click me!