உடல் எடை குறைக்க டயட் வேண்டாம்… இதை மட்டும் சேர்த்தா போதும்!

Published : Apr 03, 2026, 10:34 AM IST

இந்த காய்கறியின் முக்கிய பலன்களில் ஒன்று உடல் எடையை குறைப்பதில் உதவுவது. அதிக நீர் உள்ளடக்கம் காரணமாக, இது வயிற்றை நிறைந்ததாக உணர வைக்கும். அது எந்த காய்கறி என்பதை தெரிந்து கொள்ளலாம்.

PREV
14
உடல் எடை குறைக்கும் காய்கறி

இன்றைய வேகமான வாழ்க்கை முறையில் பருமன், சர்க்கரை நோய், கொலஸ்ட்ரால் போன்ற பிரச்சனைகள் அதிகரித்து வருகின்றன. இத்தகைய சிக்கல்களுக்கு இயற்கையான தீர்வாக மருத்துவ நிபுணர்கள் பரிந்துரைக்கப்படும் காய்கறிகளில் ஒன்றாக சீமைச் சுரைக்காய் (Zucchini) மாறியுள்ளது. குறைந்த கலோரி மற்றும் குறைந்த கார்போஹைட்ரேட் கொண்ட இந்த காய்கறி, உடல் எடையை கட்டுப்படுத்த உதவும் “நண்பன் உணவு” என்று கூறப்படுகிறது. சீமைச் சுரைக்காய் பற்றி பலர் அதிகம் அறியாமல் இருப்பது உண்மை.

24
குறைந்த கலோரி உணவு

இது ஒரு சாதாரண காய்கறி அல்ல. பல்வேறு சத்துக்களை கொண்ட ஒரு ஆரோக்கிய பொக்கிஷம். 100 கிராம் சீமைச் சுரைக்காய்யில் சுமார் 96% நீர் உள்ளது. இதனால் உடலை ஈரப்பதமாக வைத்துக்கொள்ள உதவுவதுடன், தேவையான கனிமச்சத்துகளையும் வழங்குகிறது. குறைந்த கலோரி கொண்டதால், உடல் எடை குறைக்க முயற்சிப்பவர்களுக்கு இது சிறந்த தேர்வாக இருக்கும். இந்த காய்கறியின் முக்கிய பலன்களில் ஒன்று உடல் எடையை குறைப்பதில் உதவுவது. அதிக நீர் உள்ளடக்கம் காரணமாக, இது வயிற்றை நிறைந்ததாக உணர வைக்கும்.

34
சர்க்கரை நோய் கட்டுப்பாடு

அதனால் அதிகமாக சாப்பிட வேண்டிய அவசியம் குறையும். அதே நேரத்தில், உடலில் சேமிக்கப்பட்ட கொழுப்பை மெதுவாக கரைக்கவும் உதவுகிறது. தினசரி உணவில் சீமைச் சுரைக்காய்யை சேர்த்தால், உடல் பருமன் கட்டுப்பாட்டில் இருக்கும். மேலும், சீமைச் சுரைக்காய் சர்க்கரை நோயை கட்டுப்படுத்துவதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. இதன் குறைந்த குளுகோஸ் அளவு மற்றும் குறைந்த கார்போஹைட்ரேட் காரணமாக, இரத்த சர்க்கரை திடீர் உயர்வைத் தடுக்கிறது. கூடுதலாக, இது சிறுநீரை அதிகரிக்கும் தன்மை கொண்டது.

44
வயிற்றுக் கொழுப்பு குறைப்பு

இதனால் உடலில் தேவையற்ற நீர் மற்றும் நச்சுக்கள் வெளியேறி, சிறுநீரக ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. சீமைச் சுரைக்காயை உங்கள் தினசரி உணவில் சேர்ப்பது மிகவும் எளிது. கறி, சூப் அல்லது ஜூஸ் வடிவில் இதை பயன்படுத்தலாம். சிறிய வயதிலிருந்தே குழந்தைகளுக்கு பழக்கப்படுத்தினால், ஆரோக்கியமான உணவு பழக்கமாக மாறும். இரசாயனமில்லாமல் இயற்கையாக வளரக்கூடிய இந்த காய்கறியை அடிக்கடி உணவில் சேர்த்தால், முழுமையான ஆரோக்கியத்தை எளிதாகப் பெறலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories