World Most Expensive Milk : நாம தினமும் பசும்பால், எருமைப்பால் குடிப்போம். கழுதைப்பால் கூட கேள்விப்பட்டிருப்போம். ஆனா, உலகத்திலேயே ரொம்ப விலை உயர்ந்த பால் பத்தி உங்களுக்குத் தெரியுமா?
பசும்பால், ஆட்டுப்பால், சோயா பால்னு பல வகைகளைக் கேள்விப்பட்டிருப்போம். ஆனா, உலகத்திலேயே ரொம்ப விலை உயர்ந்த பால் எதுனு கேட்டா, கழுதைப்பால்னு சொல்லிடாதீங்க. அது எலிப்பால் தான். கேட்கவே ஷாக்கா இருக்கா? ஆனா இதுதான் உண்மை. எலியிடம் இருந்து பால் கறப்பது சாதாரண விஷயமில்ல. 30 நிமிடத்துல கொஞ்சூண்டு பால் தான் கிடைக்கும். 1 லிட்டர் பால் கிடைக்க 40,000 எலிகள் தேவை. இதோட விலை 23,000 யூரோக்கள். அதாவது நம்ம ஊரு மதிப்புக்கு 18 லட்சம் ரூபாய்.
ஆராய்ச்சியாளர்கள் எலிப்பாலை ஒரு முக்கிய கருவியா பயன்படுத்துறாங்க. மலேரியா பாக்டீரியாவை அழிக்கும் மருந்துகளைத் தயாரிக்க இது உதவுது. பசும்பாலுக்குப் பதிலா விஞ்ஞானிகள் எலிப்பாலைத் தான் தேர்ந்தெடுக்கிறாங்க. விஞ்ஞானிகளுக்கு எலிதான் ஃபேவரைட். மத்த விலங்குகளை விட எலியின் டிஎன்ஏ மனித உடலோடு ரொம்ப ஒத்துப்போகும். அதனால பரிசோதனை முடிவுகளை ஈஸியா கண்டுபிடிக்கலாம். ஆயிரக்கணக்கான பசுக்களை வளர்ப்பதை விட, ஆயிரக்கணக்கான எலிகளைப் பராமரிப்பது ரொம்ப சுலபம்.
34
எலிப்பால் ஏன் காஸ்ட்லி?
எலிப்பால் ஏன் இவ்வளவு காஸ்ட்லினு இப்போ உங்களுக்குப் புரிஞ்சிருக்கும். ஒரு லிட்டர் பால் தயாரிக்க ஆயிரக்கணக்கான எலிகள் தேவைப்படுது. அதனாலதான் இந்த பாலுக்கு இவ்ளோ டிமாண்ட், விலையும் அதிகம். அதிகமா பால் கொடுக்கும் விலங்குகள் பட்டியலைப் பார்க்கலாம். அதன்படி ஒரு பசு வருஷத்துக்கு 10,000 லிட்டர் பால் கொடுக்கும். இது அதோட எடையை விட 7 மடங்கு அதிகம். அதேபோல, ஆடுகள் தங்கள் எடையை விட 12 மடங்கு அதிக பாலை ஒரு வருஷத்துல கொடுக்குது.
நீலத்திமிங்கலம் தான் இந்த விஷயத்துல நம்பர் ஒன். ஒரு நாளைக்கு 600 லிட்டர் பாலை இது உற்பத்தி செய்யுது. இந்தப்பாலில் கொழுப்பு அதிகம். இதைக் குடிக்கும் குட்டித் திமிங்கலம் ஒரே நாள்ல எடை கூடிடும். மலேரியாவைக் குணப்படுத்தவும், ஆராய்ச்சிப் பொருட்களைத் தயாரிக்கவும் எலிப்பால் மரபணு மாற்றம் செய்யப்படுது. இந்த மருத்துவக் காரணங்களால தான் எலிப்பால் ரொம்ப விலை உயர்ந்ததா இருக்குனு ஆய்வுகள் சொல்லுது.