சந்தையில் பல வகையான குளிர்பான பிராண்டுகள் உள்ளன. கோடைக்காலம் வந்துவிட்டால், இந்த குளிர்பானங்களின் தேவை அதிகமாகும். கொளுத்தும் வெயிலில் அவை குளிர்ச்சியான உணர்வைத் தருகின்றன. அதனால் தான் இந்த சீசனில் மக்கள் அதை விரும்பி குடிப்பது உண்டு. ஆனால் இவற்றை அதிகமாக குடிப்பது உங்கள் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். குறிப்பாக கல்லீரல், சிறுநீரகம், பற்கள், ஆஸ்டியோபோரோசிஸ், மன அழுத்தம், இதயம் தொடர்பான நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும், இதை அதிகமாக குடிப்பதால் உடலில் சர்க்கரை அளவு அதிகரிக்கிறது. நோயையும் உண்டாக்கும். எனவே இவற்றை குடிப்பதை நிறுத்துங்கள்.