கடுமையான மூட்டு வலி! என்னென்ன பழங்களை சாப்பிட்டால் பறந்து போகும் தெரியுமா?

First Published | May 4, 2023, 1:49 PM IST

Arthritis Pain relief fruits: கடுமையான மூட்டு வலியும் குறைய என்னென்ன பழங்களை உண்ண வேண்டும் என்பதை இந்த தொகுப்பில் காணலாம். 

மூட்டுவலி தாங்க முடியாதது. மனித உடலின் மூட்டுகளின் இயக்கத்தை, இயந்திரங்களோடு புரிந்து கொள்ளலாம். எப்படி ஒரு இயந்திரம் உராய்வால் தேயாமல் இருக்க அதில் உயவு பொருளை (லூப்ரிகண்ட்) சேர்க்கிறோமோ அப்படிதான் நம் மூட்டுகளிலும் தேய்மானம் வராமல் இருக்க ஒரு திரவம் இருக்கும். வயதாகும்போது அது குறைய தொடங்கும். இதனால் மூட்டுகளில் வலி உண்டாகும். 

மூட்டுகளில் உண்டாகும் நாள்பட்ட அழற்சியை ஆர்த்ரைட்டீஸ் என்கிறார்கள். இது  முடக்கு வாதம் என்றும் அழைக்கப்படுகிறது. மூட்டுகளில் வலி ஏற்படும்போது வீக்கம், விறைப்பு ஆகியவற்றை ஏற்படுத்துகிறது. இந்த நோய் பொதுவாக வயதானவர்களில் காணப்படுகிறது. இளம் வயதிலேயே தொடங்கலாம். நம் உடலில் உள்ள அதிகப்படியான யூரிக் அமிலத்தை வெளியேற்றுவதன் மூலம் மூட்டு வலியை கட்டுக்குள் வைக்க முடியும். இப்படிப்பட்ட வலியை வலியைப் போக்க 5 பழங்கள் உதவுகின்றன. 

Tap to resize

Image: Getty Images

ஆப்பிள் 

நம் உடலில் உள்ள யூரிக் அமில அளவைக் குறைக்க ஆப்பிள் உதவுகிறது. இந்த பழங்களில் நார்ச்சத்து நிறைந்துள்ளது. இது இரத்தத்தில் இருந்து அதிகப்படியான யூரிக் அமிலத்தை உறிஞ்சுகிறது. ஆப்பிள் அவ்வப்போது உண்பதால் மூட்டு வலி குறையும். 

செர்ரி 

செர்ரி பழங்களில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இது அதிகப்படியான யூரிக் அமில அளவுகளால் ஏற்படும் வீக்கத்தைக் குறைப்பதன் மூலம் மூட்டு வலியை குறைக்க உதவுகிறது. 

கிவி 

கிவியில் வைட்டமின் சி, ஆக்ஸிஜனேற்ற பண்புகள் உள்ளன. இது மூட்டுவலி மூட்டு வலியைக் குறைக்க உதவுகிறது. இது தவிர, உங்கள் மூட்டுகளை வலுப்படுத்தும் புரதமும் இதில் உள்ளது.

Image: Getty Images

ஆரஞ்சு 

ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி காணப்படுகிறது. இதனை மூட்டு வலி உள்ளவர்கள் உண்பதால் நல்ல பலன் கிடைக்கும். 

இதையும் படிங்க: கோடையில் ஃபுட் பாய்சன் ஆனால் எப்படி சமாளிக்க வேண்டும்? அறிகுறிகள் என்னென்ன!

கொய்யா 

மூட்டு வலியைக் குறைக்க கொய்யா மிகவும் நல்லது. இந்த பழத்தில் காணப்படும் வைட்டமின் சி, ஆன்டி-ஆக்ஸிடன்ட் போன்றவை உடலில் உள்ள வீக்கத்தைக் குறைக்கும். 

மாம்பழம் 

மூட்டு வலியைக் குறைக்க மாம்பழம் உதவுகிறது. இதில் வைட்டமின் சி, ஆக்ஸிஜனேற்ற பண்புகள், கரோட்டின் ஆகியவை உள்ளன. உங்களுக்கு ஏற்படும் மூட்டு வலியை குறைப்பதில் பங்காற்றும். 

இதையும் படிங்க: வெயிலில் சுற்றி சருமம் கருத்து போனால் அரிசி மாவு 1 போதும்! 10 நிமிடத்தில் முகம் பளிச் என்று மாற பேஸ் பேக் ரெடி

Latest Videos

click me!