Bell pepper
சிவப்பு குடை மிளகாய்
சிவப்பு குடை மிளகாயில் வைட்டமின்கள் A, C, E, கரோட்டினாய்டுகள், ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இவை நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகின்றன. கண்கள், தோல், இதயப் பகுதிகளில் புற்றுநோய் வராமல் தடுக்கின்றன.
தக்காளி
தக்காளியில் லைகோபீன் என்ற பொருள் உள்ளது. இது பல்வேறு வகையான புற்றுநோய்களின் அபாயத்தைக் குறைக்கிறது. குறிப்பாக புரோஸ்டேட் புற்றுநோய் வராமல் தடுக்கிறது.
ஆப்பிள்
ஆப்பிள்கள் மிகவும் நல்லது. குறிப்பாக அவற்றின் மேல் தோலில் உள்ள குர்செடின், ஃபிளவனாய்டுகள், பாலிபினால்கள் எந்த வகையான புற்றுநோய் வராமல் தடுக்கிறது. புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பையும் குறைக்கிறது.
Beetroot
பீட்ரூட்
பீட்ரூட்டில் சக்திவாய்ந்த ஆன்டிஆக்ஸிடன்ட்கள், அழற்சி எதிர்ப்பு சேர்மங்கள் உள்ளன. பீட்டலைன்கள் அதிக அளவில் உள்ளன. இவை இரத்தத்தைப் பாதுகாக்கின்றன. எனவே இரத்தத்துடன் தொடர்புடைய புற்றுநோய் வராமல் தடுக்க உதவுகின்றன.
Cherry
செர்ரி
செர்ரிகளில் ஆந்தோசயினின்கள், சயனைடின், ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிக அளவில் உள்ளன. இவை புற்றுநோயைத் தடுக்கவும் உதவுகின்றன.
Strawberry
ஸ்ட்ராபெர்ரி
ஸ்ட்ராபெர்ரிகளில் எந்த வகையான புற்றுநோயையும் எதிர்த்துப் போராடும் ஊட்டச்சத்துக்கள் உள்ளன. மேலும் வைட்டமின் சி, மாங்கனீசு, எலகிக் அமிலம் ஆகியவை ஸ்ட்ராபெர்ரிகளில் அதிக அளவில் உள்ளன. இவை உடலுக்கு நிறைய சக்தியைத் தருகின்றன.