Mayonnaise
உணவு பிரியர்களின் விருப்பமான உணவு வகையில் ஒன்றாக இருக்கும் மயோனஸ் பல்வேறு பர்கர் தொடங்கி சிக்கன் வரை பல உணவுகளுக்கும் துணை உணவாக இருந்து வருகிறது. இதனிடையே கடந்த சில நாட்களாக மயோனஸ்ன் தரம் மற்றும் சுகாதாரம் மீது தொடர்ந்து அடுக்கடுக்கான புகார்கள் எழுந்தன.
Mayonnaise
இந்நிலையில் உணவுப் பாதுகாப்பு ஆணையர் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி ஒரு வருடத்திற்கு பச்சை முட்டையில் இருந்து தயாரிக்கப்படும் மயோனைஸ் உற்பத்தி, சேமிப்பு மற்றும் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களிடம் இருந்து தொடர்ந்து வந்த குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து புகார்களுக்கு மதிப்பளிக்கும் விதமாக தற்போது மயோனஸ்க்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Mayonnaise
கடந்த சில மாதங்களாக இடம்பெற்ற பல சம்பவங்களில், பச்சை முட்டையில் இருந்து தயாரிக்கப்படும் மயோனைசே உணவு கெட்டுப்போக காரணமாக இருந்ததாக சந்தேகிக்கப்படுவதாக ஆணையாளர் தெரிவித்தார். குறிப்பாக, முட்டையை பிரதானமாகக் கொண்ட மயோனைஸுடன் தொடர்புடைய உணவு நச்சுத்தன்மையின் குறைந்தது 10 வழக்குகள் பதிவாகியுள்ளன, இது நுகர்வோரைப் பாதுகாக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்ட அவசர நடவடிக்கை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Mayonnaise
உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலைச் சட்டம், 2006, பிரிவு 30ன் உட்பிரிவு (2) இன் உட்பிரிவு (2) இன் ஷரத்து (a) மூலம் வழங்கப்பட்ட அதிகாரத்தின் கீழ் தடை விதிக்கப்பட்டது. பொது சுகாதார நலன் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Mayonnaise
கிரேட்டர் ஹைதராபாத் முனிசிபல் கார்ப்பரேஷன் (ஜிஹெச்எம்சி) பரிந்துரையின் அடிப்படையில் தெலங்கானா மாநிலம் முழுவதும் இந்த தடை அமல்படுத்தப்பட்டுள்ளது. ஹைதராபாத் மற்றும் செகந்திராபாத் முழுவதும் உள்ள ஹோட்டல்களில் வழங்கப்படும் பல்வேறு உணவுகளில் பயன்படுத்தப்படும் மயோனைஸின் தரம் குறித்து நகராட்சி அமைப்புக்கு ஏராளமான புகார்கள் வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.