Dates Washing: பேரீச்சம்பழத்தை சாப்பிடும் முன் கழுவணுமா? பாக்கெட்டில் இருக்கும் இந்த தகவலை கவனிச்சீங்களா?

Published : Sep 10, 2026, 03:27 PM IST

Dates Washing: பேரீச்சம்பழத்தை சாப்பிடுவதற்கு முன்பு கழுவ வேண்டுமா, பாக்கெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள “Washed” போன்ற தகவல்களை கவனிக்க வேண்டுமா? என்பது குறித்த FSSAI-யின் உணவு பாதுகாப்பு வழிகாட்டுதல்கள் என்ன சொல்கின்றன என்பதை பார்க்கலாம்.

PREV
13
பேரிச்சம்பழத்தை கழுவ வேண்டுமா?

பேரீச்சம்பழத்தை பாக்கெட்டில் இருந்து எடுத்ததும் அப்படியே சாப்பிடுவதுதான் பலரது வழக்கம். அப்படி சாப்பிடும்போது பேரிச்சம்பழத்தை கழுவ வேண்டும் என்ற எண்ணமே பெரும்பாலும் நமக்கு வருவதில்லை. ஆனால், தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோ, பேரிச்சைப் பழத்தை கழுவிதான் சப்பிடனுமா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

பேரீச்சம்பழம் சுத்தமான முறையில் உலர்த்தப்பட்ட பழம் என்று FSSAI விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், கடைகளில் கிடைக்கும் எல்லா பேரீச்சம்பழங்களும் ஒரே மாதிரி இருக்காது. சில பேரீச்சம்பழங்கள் ஏற்கனவே கழுவப்பட்டு (Washed), சிலவற்றில் கொட்டை நீக்கப்பட்டிருக்கும் (Pitted). இன்னும் சில பேரீச்சம்பழங்கள் கொட்டையுடன் (Unpitted) விற்கப்படும்.

அதாவது, அனைத்து பேரீச்சம்பழத்தை சாப்பிடுவதற்கு முன்பு கட்டாயம் கழுவ வேண்டும் என்றும், பாக்கெட்டில் இருப்பவை அனைத்தும் ஏற்கனவே கழுவப்பட்டவை என்றும் பொதுவாகக் கூற முடியாது. நீங்கள் வாங்கும் பேரீச்சம்பழத்தின் பாக்கெட்டில் கொடுக்கப்பட்டுள்ள தகவலைப் பார்த்து பயன்படுத்துவது முக்கியம்.

23
பாக்கெட்டில் இருக்கும் தகவல் என்ன சொல்கிறது?

பேரீச்சம்பழ பாக்கெட்டை வாங்கும்போது சில முக்கிய தகவல்களை கவனிப்பது அவசியம். முக்கியமாக, “Washed”, “Ready to Eat”, “Pitted/Unpitted”, எப்படி பதப்படுத்தப்பட்டுள்ளது? பேக்கிங் தேதி என்ன? காலாவதி தேதி (expiry/best before) என்ன? என்பதை பார்க்க வேண்டும். மேலும், பாக்கெட் கிழிந்தோ, ஓட்டை விழுந்தோ அல்லது சேதமடைந்தோ இருக்கிறதா? என்பதையும் சரிபார்க்க வேண்டும்.

FSSAI-யின் Food Products Standards and Food Additives Regulations-ல் “Dates” (பேரீச்சம்பழம்) குறித்து தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

அதன்படி தரமான பேரிச்சம்பழத்தில்,

  • வெளிப்புறப் பொருட்கள் (foreign matter) இல்லாமல் இருக்க வேண்டும்.
  • உயிருள்ள பூச்சிகள் இருக்கக் கூடாது.
  • பூஞ்சை (mould) இருக்கக் கூடாது.
  • இறந்த பூச்சிகள் இருக்கக் கூடாது.
  • பூச்சிகளின் துணுக்குகள் (insect fragments) இருக்கக் கூடாது.
  • எலி உள்ளிட்ட கொறித்துண்ணிகளின் மாசுபாடு (rodent contamination) இருக்கக் கூடாது.

எனவே, பேரீச்சம்பழத்தை வாங்கும்போது அதன் தோற்றத்தை மட்டும் பார்த்து வாங்காமல், பாக்கெட்டில் உள்ள தகவல்களையும் ஒருமுறை சரிபார்ப்பது நல்லது.

33
அப்படியானால் கழுவாமல் சாப்பிட்டது தவறா?

இதில்தான் முக்கியமான விஷயம் இருக்கிறது. “இதுவரை கழுவாமல் சாப்பிட்டதால் ஆபத்து ஏற்பட்டுவிட்டது” என்று கூறுவது சரியல்ல. பாக்கெட்டில் தயாரிப்பு எவ்வாறு பதப்படுத்தப்பட்டுள்ளது என்பதையும், அதன் லேபிள் வழிமுறைகளையும் பார்த்துதான் முடிவு செய்ய வேண்டும்.

அதே நேரத்தில், பாக்கெட்டில் ‘Washed’ அல்லது ‘Ready to Eat’ என்று தெளிவாகக் குறிப்பிடப்படாத பேரீச்சம்பழங்களை சாப்பிடுவதற்கு முன்பு தண்ணீரில் கழுவுவது கூடுதல் சுகாதார முன்னெச்சரிக்கையாக இருக்கலாம். FSSAI-யின் பொதுவான உணவுப் பாதுகாப்பு வழிகாட்டுதலிலும், பழங்கள் மற்றும் காய்கறிகளை பயன்படுத்துவதற்கு முன்பு நன்றாக ஓடும் தண்ணீரிலும் கழுவுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஏன் இப்போது மீண்டும் டிரெண்டாகிறது?

சமூக வலைதளங்களில் உணவு பாதுகாப்பு தொடர்பான சிறிய விஷயங்கள்கூட வீடியோக்கள் மூலம் வேகமாகப் பரவுகின்றன. அதனால், நாம் பல ஆண்டுகளாக வழக்கமாகச் செய்து வந்த உணவு பழக்கங்கள் மீண்டும் கேள்விக்குள்ளாகின்றன.

எனவே, பேரீச்சம்பழத்தை கண்டிப்பாக கழுவித்தான் சாப்பிட வேண்டும் அல்லது கழுவவே தேவையில்லை என்று ஒரே வரியில் முடிவு செய்வதைவிட, பாக்கெட்டில் உள்ள லேபிளை பார்த்து, தயாரிப்பு எவ்வாறு பதப்படுத்தப்பட்டுள்ளது என்பதை அறிந்து சாப்பிடுவது சிறந்த நடைமுறை.

Read more Photos on
click me!

Recommended Stories