Poo Vazhai Puttu : பூ வாழை புட்டு..வாழைப்பழம், ரவை, வெல்லம் இருந்தால் போதும்.. சுவையான பாரம்பரிய இனிப்பு ரெடி!

Published : Nov 12, 2026, 12:36 PM IST

Poo Vazhai Puttu : வீட்டில் வாழைப்பழம், ரவை, வெல்லம், தேங்காய் இருந்தால் போதும். சுவையான பூ வாழை புட்டை எளிதாகச் செய்துவிடலாம். ஆவியில் வேகவைக்கும் இந்தப் பாரம்பரிய இனிப்பை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பிச் சாப்பிடுவார்கள்.

PREV
19
பூ வாழை புட்டு

வாழைப்பழம் என்றாலே வழக்கமாக அப்படியே சாப்பிடுவது அல்லது மில்க் ஷேக், ஸ்மூத்தி செய்து குடிப்பதுதான் பலருக்கும் நினைவுக்கு வரும். ஆனால், அதே வாழைப்பழத்தை வைத்து நாவில் கரையும் சுவையான பாரம்பரிய இனிப்பு ஒன்றைச் செய்யலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா? வீட்டில் இருக்கும் வாழைப்பழம், ரவை, வெல்லம், தேங்காய் ஆகிய பொருட்களை வைத்தே அசத்தலான பூ வாழை புட்டு தயாரித்துவிடலாம்.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பிச் சாப்பிடும் இந்தப் புட்டு, வாழைப்பழத்தின் இயற்கையான இனிப்பும், வெல்லத்தின் மணமும், தேங்காயின் சுவையும் இணைந்து அருமையான ருசியைக் கொடுக்கும்.

குறிப்பாக, எண்ணெயில் பொரிக்காமல் ஆவியில் வேகவைப்பதால் எளிமையாகவும் தயாரிக்கலாம். மாலை நேரச் சிற்றுண்டியாகவும், குழந்தைகளுக்கான வீட்டுத் தயாரிப்பு இனிப்பாகவும் இதைச் செய்து கொடுக்கலாம். சரி, இப்போது சுவையான பூ வாழை புட்டு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

29
பூ வாழை புட்டு செய்ய தேவையான பொருட்கள்

இந்தப் புட்டைத் தயாரிக்க அதிகமான பொருட்கள் தேவையில்லை. வீட்டில் எளிதாகக் கிடைக்கும் சில பொருட்களே போதுமானது.

  • பூவன் பழம் அல்லது பழுத்த வாழைப்பழம் - 2
  • ரவை - 1 கப்
  • நாட்டு சர்க்கரை அல்லது வெல்லம் - 3\4 கப்
  • தேங்காய் துருவல் - 1\2 கப்
  • நெய் - 2–3 டேபிள் ஸ்பூன்
  • ஏலக்காய்த் தூள் - 1\2 டீஸ்பூன்
39
பூ வாழை புட்டு செய்முறை - படி1

ரவையை வறுத்து எடுத்துக்கொள்ளவும்

முதலில் அடுப்பில் ஒரு வாணலியை வைத்து ஒரு டேபிள் ஸ்பூன் நெய் சேர்க்கவும். நெய் உருகியதும் ரவையைச் சேர்த்து மிதமான தீயில் வறுக்கவும். ரவை லேசான பொன்னிறமாக மாறி நல்ல வாசனை வரும் வரை வறுத்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும். ரவை கருகிவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

49
படி 2

வாழைப்பழத்தை மசித்துக்கொள்ளவும்

இப்போது நன்றாகப் பழுத்த இரண்டு வாழைப்பழங்களை எடுத்துக்கொள்ளவும். அதன் தோலை நீக்கிவிட்டு ஒரு பாத்திரத்தில் போட்டு கட்டிகள் இல்லாமல் நன்றாக மசித்துக்கொள்ளவும். பழுத்த வாழைப்பழங்களைப் பயன்படுத்தினால் புட்டுக்கு இயற்கையான இனிப்பும் மென்மையான தன்மையும் கிடைக்கும்.

59
படி 3

புட்டுக்கான கலவையைத் தயாரிக்கவும்

மசித்து வைத்துள்ள வாழைப்பழத்துடன் நாட்டு சர்க்கரை அல்லது வெல்லம் சேர்க்கவும். பின்னர் தேங்காய் துருவல், ஏலக்காய்த் தூள் மற்றும் வறுத்த ரவையைச் சேர்த்து நன்றாகக் கலக்கவும். மீதமுள்ள நெய்யையும் சேர்த்து அனைத்துப் பொருட்களும் ஒன்றோடொன்று சேரும் வகையில் பிசையவும்.

இந்தக் கலவை மிகவும் தளர்வாக இல்லாமல், அதே நேரத்தில் மிகவும் இறுக்கமாகவும் இல்லாமல் இருக்க வேண்டும். தேவைப்பட்டால் சிறிது ரவையைச் சேர்த்துச் சரிசெய்யலாம்.

69
படி 4

இலை அல்லது இட்லித் தட்டில் வைக்கவும்

தயாரித்த கலவையைச் சிறிய உருண்டைகளாகப் பிடித்து பூவரசு இலை அல்லது வாழை இலையில் வைத்து மடித்துக்கொள்ளலாம். இலை கிடைக்காவிட்டால் இட்லித் தட்டிலும் கலவையைப் பரப்பி வைக்கலாம்.

79
படி 5

புட்டு நன்றாக வெந்ததும் அடுப்பை அணைத்து சிறிது நேரம் ஆறவிடவும். பின்னர் மெதுவாக எடுத்து பரிமாறவும்.

இப்போது இட்லிப் பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைக்கவும். தண்ணீர் நன்றாகக் கொதித்ததும் இட்லித் தட்டில் வைத்துள்ள கலவையை உள்ளே வைத்து மூடி வேகவிடவும். மிதமான தீயில் சுமார் 10 முதல் 15 நிமிடங்கள் வரை ஆவியில் வேகவைத்தால் போதும்.

89
படி 6

புட்டு நன்றாக வெந்ததும் அடுப்பை அணைத்து சிறிது நேரம் ஆறவிடவும். பின்னர் மெதுவாக எடுத்து பரிமாறவும்.

99
பூ வாழை புட்டு செய்வதற்கான முக்கிய குறிப்புகள்
  • நன்றாகப் பழுத்த பூவம்பழம் அல்லது வேறு இனிப்பான வாழைப்பழங்களைப் பயன்படுத்துவது நல்லது.
  • ரவையை நெய்யில் வறுப்பதால் புட்டுக்கு நல்ல மணமும் சுவையும் கிடைக்கும்.
  • வெல்லத்தைப் பயன்படுத்தினால் தூய்மையான வெல்லத்தைத் தேர்ந்தெடுத்து, தேவையெனில் கரைத்து வடிகட்டி சேர்க்கலாம்.
  • வாழைப்பழத்திலேயே ஈரப்பதம் இருப்பதால் முதலில் தண்ணீர் சேர்க்க வேண்டிய அவசியமில்லை.
  • கலவை மிகவும் தளர்வாக இருந்தால் சிறிது வறுத்த ரவை சேர்க்கலாம்.
  • அதிக நேரம் ஆவியில் வேகவைத்தால் புட்டு உலர்ந்து போகலாம். எனவே 10 நிமிடங்களுக்குப் பிறகு வெந்த தன்மையைச் சரிபார்க்கவும்.


எப்போது சாப்பிடலாம்?

பூ வாழை புட்டை காலை உணவுக்குப் பிறகு சிறிய இனிப்பாகவோ, மாலை நேரத்தில் தேநீருடன் சிற்றுண்டியாகவோ பரிமாறலாம். குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் வீட்டிலேயே செய்து கொடுக்க ஏற்றது.

குறைந்த பொருட்கள், எளிய செய்முறை, நிறைவான சுவை! ஒருமுறை இந்தப் பூ வாழை புட்டை வீட்டில் செய்து பாருங்கள். வாழைப்பழத்தை வழக்கமாகச் சாப்பிடாமல் வித்தியாசமாகச் சுவைக்க விரும்புபவர்களுக்கு இந்த ரெசிபி நிச்சயம் பிடிக்கும்.

Read more Photos on
click me!

Recommended Stories