Published : Mar 12, 2025, 07:17 PM ISTUpdated : Mar 12, 2025, 07:19 PM IST
நெல்லை என்றதுமே அல்வா தான் அனைவருக்கும் நினைவிற்கு வரும். ஆனால் அல்வாவை விட எளிதாக செய்யும் சிறப்பான உணவுகள் இங்கு உள்ளன. அதில் வீட்டிலேயே சட்டென தயார் செய்யக் கூடிய ஒரு சூப்பரான இனிப்பு வகை தான் பால் கொழுக்கட்டை. இதை சீக்கிரமாக, சுவையாக எப்படி செய்வது என தெரிந்து கொள்ளலாம்.
தமிழ்நாட்டின் உணவு வகைகளில் ஒவ்வொரு பகுதியும் தனித்துவமான சுவைகளை கொண்டுள்ளது. அப்படி, நெல்லை மாவட்டத்தில் சிறப்பு வாய்ந்த பல இனிப்புகள் உள்ளன. அதில் முக்கியமான ஒன்று பால் கொழுக்கட்டை. இது சாதாரண பால் கொழுக்கட்டையை விட நெல்லை மண்ணின் அசல் சுவையுடன் தயாரிக்கப்படும் ஒரு சிறப்பான இனிப்பு வகையாகும்.
24
பால் கொழுக்கட்டை செய்முறை
- முதலில், ஒரு பாத்திரத்தில் தண்ணீரை காய்ச்சி அதில் ஒரு சிட்டிகை உப்பு சேர்க்கவும்.
- அரிசி மாவை மெதுவாக சேர்த்துக் கிளறி, கட்டி படாமல் நன்கு கிளறி கெட்டியான மாவாக தயாரிக்க வேண்டும்.
- இந்தக் கலவையை வெப்பம் சூடு குறைந்ததும் சிறிய உருண்டைகள் போல செய்ய வேண்டும்.
- மற்றொரு பாத்திரத்தில் பசும் பால் மற்றும் தேங்காய் பாலை சேர்த்து மிதமான தீயில் கொதிக்க விடவும்.
34
சுவையை அதிகரிக்க
- கொதிக்கும் போது தயார் செய்த உருண்டைகளை கரைந்து, உடைந்து விடாமல் சேர்க்க வேண்டும்.
- வெல்லத்தை சிறிதளவு நீருடன் கரைத்து வடிகட்டி, பால் கலவையில் ஊற்றவும்.
- ஏலக்காய் பொடியை சேர்த்து இறுதியாக ஒரு டீஸ்பூன் நெய்யை சேர்த்து கலக்கவும்.
- பால் கொழுக்கட்டை நன்றாக கொதித்ததும் அடுப்பில் இருந்து இறக்கி, சிறிது நேரம் மூடி வைத்து பரிமாறலாம்.
44
சிறப்பு குறிப்புகள்
- நெல்லையில் பால் கொழுக்கட்டைக்கு அதிகமாக தேங்காய் பால் சேர்ப்பது ஒரு முக்கிய சிறப்பு.
- வெல்லம் ஊட்டச்சத்து மிகுந்ததாக இருப்பதால், இதன் சுவை மேலும் உன்னதமாகும்.
- குங்குமப்பூ சேர்ப்பது கூடுதல் ருசியளிக்க உதவும்.