
காலை உணவு ரொம்பவே முக்கியமானது. ஏனெனில் அதுதான் நாம் எடுத்துக் கொள்ளும் முதல் உணவு. காலை உணவு ஆரோக்கியமானதாகவும், ஊட்டச்சத்து நிறைந்ததாகவும் தான் இருக்க வேண்டும். எனவே காலை உணவில் புரதம் மற்றும் அத்தியாவசிய வைட்டமின்கள் நிறைந்த உணவுகளை சேர்த்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும். புரதம் நம்முடைய உணவில் ஒரு முக்கிய பகுதியாகும். புரதம் நிறைந்த உணவுகளை சாப்பிட்டால் உடலுக்கு ஏராளமான நன்மைகள் கிடைப்பது மட்டுமின்றி, எடையும் கட்டுக்குள் வைத்திருக்க உதவும். புரத உணவை சாப்பிடுவதன் மூலம் வயிறு நீண்ட நேரம் நிரம்பி இருக்கும். இதனால் பசி எடுக்காது மற்றும் ரத்த சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருக்கும்.
நம்முடைய உடலுக்கு தேவையான அத்தியாவசியமான ஒரு ஊட்டுச்சத்து ஆகும். இது தசை பிரச்சனை மற்றும் வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிக்கிறது. காலையில் புரதம் நிறைந்த உணவை சாப்பிட்டால் நாள் முழுவதும் உடலுக்கு தேவையான ஆற்றல் கிடைக்கும். இத்தகைய சூழ்நிலையில், உடலில் புரத குறைபாட்டை பூர்த்தி செய்ய பெரும்பாலானோர் காலை உணவில் முட்டை சாப்பிடுவார்கள். ஆனால் சைவ உணவு சாப்பிடுபவர்கள் முட்டைக்கு பதிலாக புரத குறைபாட்டை எளிதில் பூர்த்தி செய்யக்கூடிய சில உணவுகள் உள்ளன. அவை என்னென்ன என்று இப்போது தெரிந்து கொள்ளலாம்.
புரதம் நம்முடைய உடலில் செயல்பாடுகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் எலும்புகள் செல்கள், தோல், தசைகள், முடி மற்றும் திசுக்கள் உருவாக்குவதற்கும், நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவதற்கும் புரதம் முக்கிய பங்கு வகிக்கின்றது. இதை சாப்பிடுவதன் மூலம் வளர்ச்சிதை மாற்றம் சமநிலைப்படுத்தப்படுகிறது. ஊட்டச்சத்துக்களை சேமிப்பதற்கும் புரதம் ரொம்பவே அவசியம்.
உங்கள் காலை உணவை நீங்கள் ஆரோக்கியமாக மாற்றி விரும்பினால் கொண்டைக்கடலை சாப்பிடுங்கள். இதில் புரதம் நிறைந்துள்ளன. நீங்கள் காலை உணவில் இதை எடுத்துக் கொண்டால் உங்கள் உடலுக்கு தேவையான புரதம் கிடைக்கும். இதில் 9 கிராம் புரதம் உள்ளன. அதே சமயம் முட்டையில் 6 கிராம் மட்டுமே புரதம் உள்ளது. எனவே தினமும் காலை உணவில் புரதத்திற்கு முட்டையை விட இது சிறந்த வழி.
குயினோவா தெய்வ உணவு சாப்பிடுபவர்களுக்கு இது சிறந்த தேர்வாகும் ஏனெனில் இதில் ஒன்பது அமினோ அமிலங்கள் உள்ளது. மேலும் இது முழுமையான புரதச்சத்து ஆகும். இது தவிர இதில் செரிமானத்தை பயன்படுத்தும். மேலும் பசை இல்லாத இரும்புச்சத்து ,மெக்னீசியம் மற்றும் ஆக்சிஜனேசிகள் இதில் நிறைந்துள்ளன. உடலுக்கு ஏராளமான நன்மைகளை வழங்குகிறது. இதை சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தி பெறப்படும்.
இதையும் படிங்க: ஆந்திரா ஸ்பெஷல் பெசரட்டு; காலை டிபனுக்கு ஹெல்தியான பெஸ்ட் சாய்ஸ் ரெசிபி இதோ!!
முட்டைக்கு பதிலாக புரத குறைபாட்டை போக்க உங்களது உணவில் நட்ஸ்கள் மற்றும் விதைகளை சேர்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில் இவற்றில் புரதம், ஆரோக்கியமான கொழுப்பு அமிலங்கள் மற்றும் பல வைட்டமின்கள் நிறைந்துள்ளன. எனவே வால்நட், பாதாம், சியா விதைகள், ஆளி விதைகள், பூசணி விதைகள், சூரியகாந்தி விதைகள் போன்றவற்றை காலை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். இவை உடலில் புரத குறைபாட்டை பூர்த்தி செய்து போதுமான ஊட்டச்சத்துக்களை வழங்கும்.
இதையும் படிங்க: சுகர் இருக்கா? உங்களுக்கான பெஸ்ட் காலை உணவுகள் இதுதான்!!
உங்களது காலை உணவு புரதம் மற்றும் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்ததாக இருக்க வேண்டும் என்றால், பாலில் சமைத்த கஞ்சியை சாப்பிடுங்கள். தினமும் கஞ்சி சாப்பிட்டு வந்தால் செரிமானம் ஆரோக்கியமாக இருக்கும் மற்றும் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களும் கிடைக்கும்.