உடல் சூட்டுக்கு மட்டுமல்ல.. கோடையில் முலாம் பழம் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள் ஏராளம்! கண்டா விடாதீங்க!

Published : Apr 02, 2023, 07:45 AM IST

health benefits of muskmelon tamil: முலாம் பழத்தை சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும், தூக்கக் கோளாறுகள் கூட நீங்கும், ஆரோக்கியமான முறையில் உடல் எடையை குறைக்கலாம். இன்னும் பல நன்மைகள் உள்ளன. 

PREV
16
உடல் சூட்டுக்கு மட்டுமல்ல.. கோடையில் முலாம் பழம்  சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள் ஏராளம்! கண்டா விடாதீங்க!

முலாம் பழத்தில் (Muskmelon) ஏராளமான சத்துக்கள் உள்ளன. நீரில் கரையும் வைட்டமின் சி இதில் உள்ளது. இதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. இந்த பழத்தில் கண் பார்வை, சருமத்திற்கு ஏற்ற வைட்டமின் ஏ இருக்கிறது. முலாம் பழத்தில் உள்ள கேலிக் அமிலம், எலாஜிக் அமிலம், காஃபிக் அமிலம் போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள் செல்களை சிதைவிலிருந்து பாதுகாக்கிறது. கோடைகாலத்தில் இந்த பழத்தை உண்பதால் உடல் நீரேற்றமாக இருக்கும். உடலில் உள்ள கழிவுகள் வெளியேறும். இரத்த நாளங்களை தளர்த்தவும், இரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும் உதவுகிறது. இதை உண்பதால் கிடைக்கும் மற்ற நன்மைகளை இங்கு காணலாம். 

26

எடை குறைக்க உதவுகிறது

முலாம் பழத்தில் கலோரிகள், கொழுப்புச் சத்து மிகவும் குறைவு. அதனால்தான் இந்த பழம் எடை இழப்புக்கு பயனுள்ளதாக இருக்கும். இந்த பழம் வயிற்றின் வழியாக உங்கள் செரிமான அமைப்புக்குள் செல்ல சிறிது நேரம் ஆகும். இதனால் உங்கள் வயிறு நீண்ட நேரம் நிரம்பி இருக்கும். பசி எடுக்காது. 

36

கண்பார்வை மேம்படும் 

முலாம் பழத்தில் வைட்டமின் ஏ நிறைந்துள்ளது. இது கண் தசைகளை பாதுகாத்து கண் தொடர்பான பிரச்சனைகளில் இருந்து நம்மை காக்கிறது. முலாம் பழத்தில் கரோட்டின் உள்ளது. இது கண்புரை வராமல் தடுக்க உதவுகிறது. இந்த பழம் பார்வையை மேம்படுத்துகிறது. 

46

தூக்கமின்மை குணமாகும் 

முலாம்பழம் மன அழுத்தத்தைக் குறைத்து மனதை அமைதிப்படுத்த உதவுகிறது. இந்த பழத்தில் உள்ள பொட்டாசியம் போன்ற தாதுக்கள் நன்றாக தூங்க உதவுகிறது. பொட்டாசியம் என்ற தாது ரத்த அழுத்தம் சீராக இருக்க உதவும். 

56

இதய ஆரோக்கியம் மேம்படும் 

முலாம் பழத்தில் பொட்டாசியம் நிறைந்துள்ளது. இது இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்கும். ஆகவே இதயமும் ஆரோக்கியமாக இருக்கும். இந்தப் பழத்தில் அடினோசின் என்ற கலவையும் உள்ளது. இது இதயத்திற்கு நன்மை பயக்கும். இந்த பழம் இதய அமைப்பில் இரத்தம் உறைவதைத் தடுக்கிறது.

இதையும் படிங்க: வீட்டிலே மருந்து.. இந்த 3 செடிகளை வளர்த்துங்க போதும்!! ஒவ்வொரு செடியும் எத்தனை நோய்களை விரட்டும் தெரியுமா?

66

மாதவிடாய் வலி 

வைட்டமின் சி நிறைந்துள்ள முலாம் பழம் மாதவிடாய் வலியைக் குறைக்கிறது. இரத்தம் உறைதல் மற்றும் தசை பிடிப்பைக் குறைக்கவும் உதவுகின்றன. ரத்தப்போக்கு சீராக இருக்க உதவுகிறது. மாதவிடாய் தொடங்கிய முதல் இரண்டு நாட்களுக்கு இந்தப் பழத்தை சாப்பிட வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். 

இந்த பலன்களை முழுவதும் பெற கோடைகாலத்தில் முலாம் பழத்தை தவறாமல் எடுத்து கொள்ளுங்கள். 

இதையும் படிங்க: பிரெட் சாப்பிடுறவங்களா நீங்க! வாங்கும் முன் இந்த 1 விஷயத்தை பாக்கெட் மேல தவறாமல் பாருங்க! உங்க நல்லதுக்குதான்!

Read more Photos on
click me!

Recommended Stories