Murungakkai Rasam: மணக்க மணக்க முருங்கைக்காய் ரசம்..சூடான சாதத்துக்கு செம காம்பினேஷன்!

Published : Sep 23, 2026, 01:44 PM IST

Murungakkai Rasam: முருங்கைக்காய் ரசம் செய்வது எப்படி? முருங்கைக்காய், புளி, தக்காளி, மிளகு, சீரகம் உள்ளிட்ட பொருட்களை வைத்து மணமணக்கும் முருங்கைக்காய் ரசம் செய்ய தேவையான பொருட்கள் மற்றும் எளிய செய்முறை இதோ.

PREV
15
முருங்கைக்காய் ரசம் செய்வது எப்படி?

முருங்கைக்காயை சாம்பார், குழம்புல மட்டும் போட்டு சாப்பிடுறீங்களா? ஒருமுறை இப்படி ரசம் வச்சுப் பாருங்க வாசனையே பசியைத் தூண்டும். புளியின் லேசான புளிப்பு, தக்காளியின் சுவை, மிளகு - சீரகத்தின் மணம், நன்றாக வெந்த முருங்கைக்காயின் தனிச்சுவை எல்லாம் ஒன்றாக சேர்ந்தால் சூடான சாதத்துக்கு செம காம்பினேஷன். வழக்கமான ரசத்திலிருந்து கொஞ்சம் வித்தியாசமாகவும், வீட்டில் எளிதாகவும் செய்யக்கூடிய முருங்கைக்காய் ரசம் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

25
தேவையான பொருட்கள்
  • முருங்கைக்காய் - 2
  • தக்காளி - 2
  • புளி - சிறிய எலுமிச்சை அளவு
  • வேகவைத்த துவரம் பருப்பு தண்ணீர் - 1\2 முதல் 1 கப்
  • பூண்டு - 4 முதல் 5 பல்
  • மிளகு - 1 டீஸ்பூன்
  • சீரகம் - 1 டீஸ்பூன்
  • மஞ்சள் தூள் - 1\4 டீஸ்பூன்
  • பெருங்காயத்தூள் - சிறிதளவு
  • உப்பு - தேவையான அளவு
  • கொத்தமல்லித்தழை - சிறிதளவு
  • தண்ணீர் - தேவையான அளவு

தாளிக்க:

  • எண்ணெய் அல்லது நெய் - 1 டீஸ்பூன்
  • கடுகு - 1\2 டீஸ்பூன்
  • காய்ந்த மிளகாய் - 1
  • கறிவேப்பிலை - சிறிதளவு
35
செய்முறை
  • முதலில் முருங்கைக்காயை கழுவி சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளுங்கள். புளியை வெதுவெதுப்பான தண்ணீரில் ஊறவைத்து கரைத்து புளித்தண்ணீரைத் தயாராக வைத்துக்கொள்ளவும். மிளகு, சீரகம், பூண்டு ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து கொரகொரப்பாக இடித்துக் கொள்ளுங்கள்.
  • ஒரு பாத்திரத்தில் முருங்கைக்காய் துண்டுகளைப் போட்டு, சிறிதளவு தண்ணீர் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து வேகவிடுங்கள். முருங்கைக்காய் மென்மையாக வெந்ததும் அதில் நசுக்கிய தக்காளி, புளித்தண்ணீர், உப்பு மற்றும் இடித்து வைத்துள்ள மிளகு சீரகம் பூண்டு கலவையைச் சேர்க்கவும்.
45
மணமணக்கும் முருங்கைக்காய் ரசம் தயார்
  • புளியின் பச்சை வாசனை போகும் வரை சில நிமிடங்கள் மிதமான தீயில் கொதிக்க விடுங்கள். பின்னர் வேகவைத்த துவரம் பருப்பு தண்ணீரைச் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றவும். ரசத்தின் மேல் நுரை எழுந்து கொதிக்கத் தொடங்கும் நிலையில் அடுப்பை குறைத்து விடுங்கள். ரசத்தை நீண்ட நேரம் கொதிக்க விட வேண்டாம். அது மணத்தையும் சுவையையும் பாதிக்கலாம்.
  • கடைசியாக ஒரு சிறிய கடாயில் நெய் அல்லது எண்ணெயை சூடாக்கி கடுகு போடுங்கள். அது வெடித்ததும் காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் சேர்த்து தாளித்து ரசத்தில் ஊற்றுங்கள். மேலே கொத்தமல்லித்தழையைத் தூவினால் மணமணக்கும் முருங்கைக்காய் ரசம் தயார்.
55
சின்ன டிப்ஸ்

முருங்கைக்காயை அதிகமாக வேகவைத்து உடையவிடாமல் பார்த்துக்கொள்ளுங்கள். ரசத்தில் கொஞ்சம் நெய் சேர்த்தால் மணம் கூடும். சூடான சாதத்தில் முருங்கைக்காய் ரசம் ஊற்றி, அப்பளம் அல்லது உருளைக்கிழங்கு வறுவலுடன் பரிமாறினால் சுவையான மதிய உணவு ரெடி.

Read more Photos on
click me!

Recommended Stories