Drumstick Soup: முருங்கைக்காய் சூப் செய்வது எப்படி? ஈஸியான சுவையான ரெசிபி இதோ!

Published : Sep 22, 2026, 12:54 PM IST

Drumstick Soup: முருங்கைக்காயை வைத்து சுவையான சூப் செய்வது எப்படி? மிளகு, சீரகம், பூண்டு சேர்த்து மணமணக்கும் முருங்கைக்காய் சூப் தயாரிக்க தேவையான பொருட்கள் மற்றும் எளிய செய்முறையை தெரிந்துகொள்ளுங்கள்.

PREV
14
முருங்கைக்காய் சூப் செய்வது எப்படி?

முருங்கைக்காய் என்றாலே சாம்பார், காரக்குழம்பு, பொரியல் என ஒரே மாதிரியான உணவுகள்தான் நினைவுக்கு வருகிறதா? இனி கொஞ்சம் வித்தியாசமாக சூடாக, மணமணக்க முருங்கைக்காய் சூப் செய்து பாருங்க. மிளகு, சீரகம், பூண்டு மணத்துடன் முருங்கைக்காயின் சுவையும் சேர்ந்தால் ஒவ்வொரு ஸ்பூனும் செம டேஸ்டாக இருக்கும். மாலை நேரத்திலோ, மழை நேரத்திலோ சூடாக குடிக்க ஏற்ற இந்த முருங்கைக்காய் சூப்பை வீட்டிலேயே எளிதாகச் செய்யலாம்.

24
தேவையான பொருட்கள்

முருங்கைக்காய் - 2

சின்ன வெங்காயம் - 6 முதல் 8

தக்காளி - 1 சிறியது

பூண்டு - 4 பல்

மிளகு - 1 டீஸ்பூன்

சீரகம் - 1/2 டீஸ்பூன்

மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்

வெண்ணெய் அல்லது எண்ணெய் - 1 டீஸ்பூன்

தண்ணீர் - 3 முதல் 4 கப்

உப்பு - தேவையான அளவு

கொத்தமல்லித்தழை - சிறிதளவு

34
முருங்கைக்காய் சூப் செய்வது எப்படி?
  • முருங்கைக்காயை நன்றாகக் கழுவி சிறிய துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும். குக்கரில் முருங்கைக்காய், சிறிதளவு மஞ்சள் தூள், தண்ணீர் சேர்த்து 3 விசில் வரும் வரை வேகவைக்கவும்.
  • ஆவி அடங்கியதும் முருங்கைக்காய் துண்டுகளை வெளியே எடுத்து ஆறவிடவும். பின்னர் அதன் உள்ளே இருக்கும் சதைப்பகுதியை கரண்டியால் வழித்து தனியாக எடுத்துக்கொள்ளுங்கள். முருங்கைக்காய் வேகவைத்த தண்ணீரை வீணாக்காமல் சூப்பிற்காக வைத்துக்கொள்ளவும்.
  • பின்னர் வேகவைத்த முருங்கைக்காய் சதையை வேகவைத்த தண்ணீர் சேர்த்து அரைத்துக்கொள்ளலாம். இன்னும் மென்மையான சூப் வேண்டுமென்றால் இதை வடிகட்டிக் கொள்ளலாம்.
  • அதன் பின்னர் ஒரு கடாயில் 1 டீஸ்பூன் வெண்ணெய் அல்லது எண்ணெய் சேர்த்து சூடாக்கவும். அதில் ஒன்றிரண்டாக இடித்த மிளகு, சீரகம் சேர்த்து மணம் வரும் வரை வதக்குங்கள்.
  • பின்னர் பொடியாக நறுக்கிய பூண்டு மற்றும் சின்ன வெங்காயத்தைச் சேர்த்து வெங்காயம் லேசாக பொன்னிறமாகும் வரை வதக்கவும். அதன்பிறகு நறுக்கிய தக்காளியைச் சேர்த்து நன்றாக மென்மையாகும் வரை வதக்கிக்கொள்ளுங்கள்.
  • அதனுடன் அரைத்த முருங்கைக்காய் கலவையையும் மீதமுள்ள வேகவைத்த தண்ணீரையும் சேர்க்கவும். தேவையான அளவு உப்பு சேர்த்து மிதமான தீயில் சுமார் 5–7 நிமிடங்கள் கொதிக்க விடுங்கள். இறுதியாக கொத்தமல்லித்தழையைத் தூவி இறக்கினால், மணமணக்கும் முருங்கைக்காய் சூப் ரெடி.
44
சுவை இன்னும் சூப்பராக இருக்க

காரசாரமான சுவை பிடித்தவர்கள் மிளகின் அளவைச் சற்று அதிகரிக்கலாம். கிரீமியான பதம் வேண்டும் என்றால் சிறிதளவு பால் அல்லது தேங்காய்ப்பால் சேர்க்கலாம். ஆனால் சேர்த்த பிறகு அதிக நேரம் கொதிக்கவிடாமல் சூடாக்கி இறக்குவது நல்லது.

சாம்பார், குழம்பில் மட்டும் முருங்கைக்காயைப் பார்த்துப் பழகியிருந்தால், ஒருமுறை இந்த சூப்பை டிரை பண்ணிப் பாருங்க. வெங்காயம், தக்காளியின் வதக்கிய மணம், மிளகு சீரகத்தின் காரசாரமான சுவையுடன் சூடான குடிக்கும்போது முருங்கைக்காய்க்கு இப்படியும் ஒரு டேஸ்டா என்று தோன்றலாம். நிச்சயம் ட்ரை பண்ணுங்க.

Read more Photos on
click me!

Recommended Stories