Murungai Keerai Wheat Dosa: இட்லி, தோசைக்கு பை சொல்லுங்க: சத்துக்கள் நிறைந்த பச்சை பசேல் முருங்கைக்கீரை கோதுமை தோசை & வேர்க்கடலை சட்னி ரெசிபி!

Published : Nov 05, 2026, 01:02 PM IST

Murungai Keerai Wheat Dosa: இரும்புச்சத்து நிறைந்த முருங்கைக்கீரை கோதுமை தோசையும் காரசாரமான வேர்க்கடலை சட்னியும்! சுலபமாகச் செய்யக்கூடிய ஆரோக்கிய காலை டிபன் செய்முறை விளக்கம் பற்றி பார்ப்போம்.

PREV
15
முருங்கைக்கீரை கோதுமை தோசை & காரசார வேர்க்கடலை சட்னி

தினமும் ஒரே மாதிரியான இட்லி, தோசை சாப்பிட்டு அலுத்துப்போனவர்களுக்குச் சத்துக்கள் நிறைந்த அதேநேரம் நாவில் எச்சில் ஊறவைக்கும் அருமையான காலை உணவு முருங்கைக்கீரை கோதுமை தோசை. இரும்புச்சத்து, வைட்டமின்கள் நிறைந்த முருங்கைக் கீரையையும், நார்சத்து மிக்க கோதுமை மாவையும் சேர்த்துச் செய்யப்படும் தோசைக்குத் தொட்டுக்கொள்ள காரசாரமான வேர்க்கடலை சட்னி மிகச்சிறந்த காம்பினேஷனாக அமையும். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பிச் சாப்பிடும் ஆரோக்கிய காலை உணவை எளிய முறையில் எப்படித் தயாரிப்பது என்பதைப் பார்ப்போம்.

25
தேவையான பொருட்கள் - 1

தோசை மாவு தயாரிக்க:

கோதுமை மாவு – 1 1/2 கப்

அரிசி மாவு – 1/2 கப்

புளிப்பில்லாத தயிர் – 1/2 கப்

தண்ணீர் – 2 கப்

உப்பு – தேவையான அளவு

முருங்கைக்கீரை வதக்க:

எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்

சீரகம் – 1/2 டீஸ்பூன்

பூண்டு – 2 பல்

பச்சை மிளகாய் – 2

முருங்கைக்கீரை – 3 கப்

35
தேவையான பொருட்கள் - 2

வேர்க்கடலை சட்னிக்கு:

எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்

உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்

கடலைப் பருப்பு – 1 டீஸ்பூன்

சீரகம் – 1/2 டீஸ்பூன்

வேர்க்கடலை – 1 கப்

பொட்டுக்கடலை – 1 கப்

இஞ்சி – சிறிய துண்டு

பச்சை மிளகாய் – 4

பூண்டு – 3 பல்

புளி – சிறிய துண்டு

தண்ணீர் – தேவையான அளவு

உப்பு – சுவைக்கேற்ப

சட்னி தாளிக்க:

எண்ணெய் – 1 டீஸ்பூன்

கடுகு – 1/2 டீஸ்பூன்

உளுத்தம் பருப்பு – 1/2 டீஸ்பூன்

கறிவேப்பிலை – 1 கொத்து

வரமிளகாய் – 1

45
செய்முறை விளக்கம் - 1

அகலமான பாத்திரத்தில் கோதுமை மாவு, அரிசி மாவு, புளிப்பில்லாத தயிர், 2 கப் தண்ணீர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கட்டிகள் எதுவும் இல்லாதவாறு நன்கு கரைத்துக்கொள்ள வேண்டும். இந்தக் கலவையை மூடி வைத்து 10 முதல் 15 நிமிடங்கள் வரை ஊற வைக்கவும். அடுப்பில் வாணலியை வைத்து 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றிச் சூடானதும், கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, சீரகம், வேர்க்கடலை, இஞ்சி மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

அதனுடன் பொட்டுக்கடலை மற்றும் பூண்டு சேர்த்து நன்கு வதக்கிவிட்டு அடுப்பிலிருந்து இறக்கி ஆற வைக்கவும். ஆறிய கலவையை மிக்ஸி ஜாரில் சேர்த்து, அதனுடன் சிறிய துண்டு புளி, தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து நைஸாக அரைத்து ஒரு கிண்ணத்தில் மாற்றிக்கொள்ள வேண்டும். பின்னர் ஒரு சிறிய தாளிப்பு கரண்டியில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு, வரமிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்துத் தாளித்துச் சட்னியுடன் கலந்தால் சுவையான வேர்க்கடலை சட்னி தயார்.

55
முருங்கைக்கீரை தோசை தயாரித்தல்

மற்றொரு வாணலியில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றிச் சூடானதும் சீரகம், பூண்டு மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். அதனுடன் 3 கப் முருங்கைக்கீரையைச் சேர்த்துச் சுருள வதக்கி, அடுப்பிலிருந்து இறக்கி நன்றாக ஆற வைக்க வேண்டும். ஆறிய கீரைக் கலவையை மிக்ஸி ஜாரில் சேர்த்து, ஏற்கெனவே கரைத்து வைத்துள்ள மாவிலிருந்து 3 முதல் 4 கரண்டி மாவை அதனுடன் சேர்த்து மென்மையாக அரைத்துக் கொள்ளவும்.

அரைத்த இந்தக் கீரை விழுதை மீதமுள்ள தோசை மாவுடன் சேர்த்து ஒன்றாகக் கலந்து கொண்டால் பச்சை பசேல் முருங்கைக்கீரை தோசை மாவு தயார். அடுப்பில் தோசைக் கல்லை வைத்துச் சூடானதும், தயாரித்து வைத்துள்ள மாவை தோசையாக வார்த்து, இருபுறமும் வேக வைத்து எடுத்தால் மொறுமொறுப்பான, சத்து நிறைந்த முருங்கைக்கீரை கோதுமை தோசை தயார். சுடச்சுட முருங்கைக்கீரை கோதுமை தோசையுடன், காரசாரமான வேர்க்கடலை சட்னியைச் சேர்த்துப் பரிமாறினால் அருமையான காலை உணவு தயார்!

Read more Photos on
click me!

Recommended Stories