Madurai famous food: கறி தோசை, பன் பரோட்டா, ஜிகர்தண்டா, பருத்திப்பால் என மதுரையின் உணவுகளுக்குத் தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்நிலையில், மதுரையின் பிரபலமான தெருவோர உணவுகளைத் தேடி வந்து சுவைத்த உணவுப் பயணியின் அனுபவம் குறித்து பகிர்ந்துள்ளார்.
'Food N Travel by Ebbin Jose' என்ற யூடியூப் சேனலில் கடந்த 2026 மே 7ஆம் தேதி 'Madurai Street Food Heaven! Bun Parotta, Kari Dosai & Jigarthanda Food Tour' என்ற தலைப்பில் இந்த வீடியோ வெளியிடப்பட்டது. இதில் மதுரையின் பிரபலமான உணவகங்கள் மற்றும் தெருவோரக் கடைகளுக்குச் சென்று அங்குள்ள உணவு வகைகளைச் சுவைத்துக் காட்டியுள்ளார்.
25
முதலில் பன் பரோட்டா... அடுத்து ஜிகர்தண்டா!
இந்த உணவுப் பயணம் மதுரையின் புகழ்பெற்ற முத்துக்குமார் பன் பரோட்டா கடையில் தொடங்குகிறது. காமராஜர் சாலையில் அமைந்துள்ள இந்தக் கடையில் பன் பரோட்டா, கொத்து பரோட்டா, பிரியாணி உள்ளிட்ட உணவு வகைகளைச் சுவைத்துள்ளார். குறிப்பாக, கிரேவியுடன் பரிமாறப்படும் பன் பரோட்டாவின் தோற்றமும் தயாரிப்பு முறையும் வீடியோவில் இடம்பெற்றுள்ளன.
தொடர்ந்து, விளக்குத்தூண் அருகே உள்ள 1977ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருவதாகக் குறிப்பிடப்படும் மதுரை ஃபேமஸ் ஜிகர்தண்டா கடைக்குச் செல்கிறார். மதுரையின் அடையாள இனிப்பு பானமான ஜிகர்தண்டாவைச் சுவைத்துக் காட்டும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.
35
மதுரையின் பாரம்பரியப் பானம் பருத்திப்பால்!
அடுத்ததாக, மதுரையின் பாரம்பரிய பானங்களில் ஒன்றான பருத்திப்பாலைத் தேடிச் செல்கிறார். திரைப்படத்திலும் இடம்பெற்றதாகக் குறிப்பிடப்படும் பருத்திப்பால் கடையில் இந்தப் பானத்தைச் சுவைத்துப் பார்க்கிறார். பருத்தி விதைகளிலிருந்து தயாரிக்கப்படும் இந்தப் பானம் மதுரையின் தனித்துவமான உணவுப் பாரம்பரியத்தை வெளிப்படுத்துகிறது.
உணவுப் பயணத்தின் மற்றொரு முக்கியமான பகுதியாக வடக்கு மாசி வீதியில் உள்ள கோனார் சூப் கடைக்குச் செல்கிறார். அங்கு மதுரையின் பிரபலமான கறி தோசை, மட்டன் சூப் மற்றும் மட்டன் கறியுடன் தயாரிக்கப்படும் கொத்து இடியாப்பம் ஆகியவற்றைச் சுவைக்கிறார். குறிப்பாக, மசாலா சேர்க்கப்பட்ட மட்டன் கறியுடன் தயாரிக்கப்படும் கறி தோசையின் தோற்றமும், கொத்து இடியாப்பத்தின் தயாரிப்பும் உணவு ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இடம்பெற்றுள்ளன.
55
மதுரையின் உணவுகளுக்கு ஏன் இவ்வளவு வரவேற்பு?
உணவுகளை மட்டும் மையமாகக் கொள்ளாமல், மதுரைக்கு அருகிலுள்ள சமணர் மலையின் அழகான மாலை நேரக் காட்சியையும் இந்த வீடியோவில் பதிவு செய்துள்ளார். மதுரையின் உணவு, உள்ளூர் கடைகள், பாரம்பரியப் பானங்கள் மற்றும் சுற்றுலாத் தலங்கள் என ஒரே வீடியோவில் பல்வேறு அனுபவங்களைப் பகிர்ந்துள்ளார். பன் பரோட்டா, கறி தோசை, ஜிகர்தண்டா, பருத்திப்பால், கொத்து இடியாப்பம் போன்ற உணவு வகைகள் மதுரையின் தனித்துவமான உணவுக் கலாசாரத்தை வெளிப்படுத்துகின்றன.
பெரிய உணவகங்கள் மட்டுமின்றி, பல ஆண்டுகளாகச் செயல்பட்டு வரும் உள்ளூர் உணவுக் கடைகளும் மதுரையின் உணவுப் புகழுக்குப் பங்களித்து வருகின்றன. வெளியூரிலிருந்து வரும் உணவுப் பயணிகள் மதுரையின் உணவுகளைத் தேடிச் சுவைத்து, அவற்றைச் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருவது இந்த உணவுகளின் மீதான ஆர்வத்தை மேலும் அதிகரிக்கிறது.