நீங்களும் பிசைந்த கோதுமை மாவை ஃபிரிட்ஜில் வைக்கிறீங்களா? பல பக்கவிளைவுகள் ஏற்படுமாம்..

First Published | Nov 22, 2023, 9:07 AM IST

பிசைந்த கோதுமை மாவை ஃப்ரிட்ஜில் வைப்பதால் ஏற்படும் உடல்நல பிரச்சனைகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

அதிகரித்து வரும் உட்கார்ந்த வாழ்க்கை முறை, உணவுப் பழக்கம் ஆகியவை காரணமாக பல்வேறு உடல்நல பிரச்சனைகள் ஏற்படுகின்றன. எனவே தினமும் ஆரோக்கியமான சமச்சீரான உணவை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர். மேலும் தினமும் குறைந்தபட்சம் 30 நிமிடம் உடற்பயிற்சி அல்லது நடைபயிற்சி செய்யவும் அறிவுறுத்துகின்றனர்.

குறிப்பாக இந்த மழை சீசனில் ஏற்படும் மாற்றங்களால் உடலின் மெட்டபாலிசம் மந்தமாகி, இதனால் நோய் எதிர்ப்பு சக்தியும் பலவீனமடைகிறது. இதுபோன்ற சூழ்நிலையில், பல நோய்களின் ஆபத்து அதிகரிக்கிறது. எனவே, இந்த பருவத்தில் சில உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

Latest Videos


இது தவிர இந்த சீசனில் பலரும் பிசைந்த மாவை குளிர்சாதனப்பெட்டியில் வைத்து பின்னர் பயன்படுத்துவார்கள். ஆனால், இதைச் செய்யவே கூடாது. இது ஆரோக்கியத்திற்கு ஆபத்தானது. அத்தகைய தவறு செய்வது உங்கள் ஆரோக்கியத்தை கெடுப்பதுடன் நோய்களின் அபாயத்தை அதிகரிக்கும். 

Fridge Clean

பிசைந்த மாவு கெட்டுப் போகாமல் இருக்க வேண்டும் என்பதற்காக சிலர் ஃப்ரிட்ஜில் சேமிப்பார்கள். ஆனால் மழையில் பிசைந்த மாவில் பாக்டீரியா வளரும். இது மட்டுமின்றி, சில பாக்டீரியாக்களும் உணவு விஷம் போன்ற கடுமையான பிரச்சனைகளை உண்டாக்கும்.

இது தவிர, இந்த மாவில் செய்யப்பட்ட சப்பாத்தியை சாப்பிடுவதால் நெஞ்செரிச்சல் மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளும் ஏற்படும். எனவே பிசைந்த மாவை ஃப்ரிட்ஜில் வைத்து பயன்படுத்தும் பழக்கம் இருந்தால் உடனே அதை மாற்றிவிடுங்கள். குறிப்பாக மழைக்காலத்தில் தவறுதலாக கூட இதுபோன்ற தவறை செய்யாதீர்கள்.

உண்மையில், சில பாக்டீரியாக்கள் குறைந்த வெப்பநிலையில் வளர்கின்றன, இது உங்கள் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்று பல ஆராய்ச்சிகள் வெளிப்படுத்தியுள்ளன. மழைக்காலத்தில், லிஸ்டீரியா மோனோசைட்டோஜென்ஸ் என்ற பாக்டீரியா பல கடுமையான நோய்களை ஏற்படுத்துகிறது. மேலும் குளிர்சாதன பெட்டியின் குறைந்த வெப்பநிலையில் எளிதாக வளரும். எனவே, குளிர்சாதனப் பெட்டியில் வைக்கும் உணவு பொருட்களில் அதிக கவனம் தேவை.

மழைக்காலத்தில் ஃபிரிட்ஜில் வைக்காமல் புதிதாக பிசைந்த மாவை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று சுகாதார நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.. ஆனால் நேரமின்மை காரணமாக ஃபிரிட்ஜில் தான் பிசைந்த மாவை வைத்து பயன்படுத்த வேண்டும் என்றால், பிசையும் போது அதில் அதிக தண்ணீர் சேர்க்க வேண்டாம். ஏனெனில் அதிகப்படியான நீர் காரணமாக விரைவிலேயே அந்த மாவு கெட்டுப்போகும். இது தவிர, பிசைந்த மாவை குளிர்சாதன பெட்டியில் வைக்க, ஜிப் லாக் பையைப் பயன்படுத்தலாம். இவற்றையெல்லாம் கவனத்தில் கொண்டால் பல கடுமையான நோய்களைத் தவிர்க்கலாம் என்று உணவியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

click me!