ரத்த உற்பத்தியை அதிகரிக்கணுமா? அப்ப இந்த விஷயங்களை தெரிஞ்சிக்கோங்க!

First Published | May 6, 2023, 5:55 PM IST

உடலில் ரத்த உற்பத்தியை அதிகரிக்க என்னென்ன உணவு வகைகளை சாப்பிட வேண்டும்.. ஹூமோகுளோபின் அதிகரிக்க என்னென்ன வழிகள் என்பதை இங்கு காணலாம்.

நாம் உண்ணும் உணவில் உள்ள இரும்புச்சத்து தான் ரத்த உற்பத்தியை அதிகரிக்கும். இதனால் ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையும் அதிகமாக இருக்கும். நம்முடைய இரத்தத்தில் ஹீமோகுளோபின், இரத்த சிவப்பணுக்கள் இல்லாததால் ஏற்படும் பிரச்சனை தான் இரத்த சோகை. இந்த பாதிப்பு ஏற்படுவது உடலில் இரும்புச்சத்து குறைவாக இருப்பதால் தான்.

இரத்தசோகை ஏற்பட்டால் உடலில் சோர்வு, பலவீனம் ஆகிய பிரச்சனைகள் ஏற்படும். இதை தடுக்க இரும்புச்சத்து அதிகம் உள்ள உணவுகளை சாப்பிட வேண்டும். ஆண்களை விட பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் இரும்புச்சத்து குறைபாடு அதிகமாக ஏற்படுகிறது. தினமும் ஆரோக்கியமான உணவை உட்கொள்வதன் மூலம் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கலாம். 

பீட்ரூட் 

அற்புதமான பலன்களை கொடுக்கும் காய்கறிகளில் பீட்ரூட்டும் ஒன்று. இதில் இரும்புச்சத்து, தாமிரம், பாஸ்பரஸ், மெக்னீசியம், வைட்டமின் பி1, வைட்டமின் பி2, வைட்டமின் பி6, வைட்டமின் பி12, வைட்டமின் சி ஆகியவை நிறைந்துள்ளன. பீட்ரூட்டில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் நம் உடலில் உள்ள இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தியைத் தூண்டுவதில் நன்மை பயக்கும். இரத்த ஓட்டத்தை அதிகரிக்க பீட்ரூட்டை அப்படியே உண்ணலாம் அல்லது ஜூஸாக அருந்தலாம். 

Tap to resize

தர்பூசணி 

தர்பூசணியில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, மெக்னீசியம், இரும்புச்சத்து ஆகியவை உள்ளது. கோடையில் உடலின் ஆற்றல் மட்டத்தை அதிகரிக்கும். உடல் சோர்வு, பலவீனத்தை நீக்குகிறது. 

திராட்சை

திராட்சையில் இரும்புச்சத்து, மக்னீசியம், தாமிரம், வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி அதிகமாக உள்ளது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், இரும்புச்சத்தை உறிஞ்சுதலை ஊக்குவிக்கவும் உதவுகின்றன. 

எள் விதைகள் 

எள் விதைகளில் இரும்பு, தாமிரம், துத்தநாகம், செலினியம், வைட்டமின்கள் பி6, வைட்டமின் ஈ, ஃபோலேட் ஆகியவை காணப்படுகின்றன. கருப்பு எள்ளை தினமும் சாப்பிட்டு வந்தால் ஹீமோகுளோபின் அளவு கணிசமாக அதிகரிக்கிறது. இது இரும்புச்சத்து உறிஞ்சுதலை ஊக்குவிக்கிறது என ஆய்வுகள் காட்டுகின்றன.

உலர் பழங்கள் 

பிஸ்தா, முந்திரி, பாதாம் ஆகியவற்றில் இரும்புச்சத்து நிறையவே உள்ளன. 100 கிராம் பிஸ்தாவில் 3.9 மில்லிகிராம் இரும்புச்சத்தும், முந்திரியில் 6.7 மில்லிகிராம் இரும்புச்சத்தும் உள்ளது. 100 கிராம் பாதாமில் 5.4 மில்லி கிராம் இரும்புச்சத்து காணப்படுகிறது. இது தவிர புற்றுநோய், இதய நோய் அபாயத்தையும் குறைக்கிறது. உடல் எடையை குறைக்கவும் உதவும். 

Latest Videos

click me!