பீர்க்கங்காய் - சத்துக்களின் சூப்பர் ஸ்டார்! இத்தனை மருத்துவ குணங்களா!

First Published | May 6, 2023, 11:54 AM IST

பீர்க்கங்காயில் குறைந்த கலோரியும், அதிக நார்ச்சத்தும் உள்ளது. இதை உண்பதால் கிடைக்கும் ஏராளமான நன்மைகளை இங்கு காணலாம். 

பீர்க்கங்காய் வெப்ப மண்டல பகுதியில் விளையும் காய். இதில் ஆன்டிஆக்ஸிடண்ட், வைட்டமின், தாதுக்கள் அதிகம் காணப்படுகின்றன. இந்த சத்துக்கள் நம் உடலுக்கு பல நன்மைகளை செய்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது முதல் சரும ஆரோக்கியம் வரை பீர்க்கங்காய் பல ஆரோக்கிய நன்மைகளை நமக்கு வழங்குகிறது. 

பீர்க்கங்காயில் சாரண்டின் (Charantin) என்ற பொருள் உள்ளது. இதனால் நம் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கிறது. நீரிழிவு நோயால் அவதிப்படுபவர்கள் அல்லது அந்த நோய் தாக்கும் அபாயத்தில் இருப்பவர்கள் பீர்க்கங்காயை உண்பது மிகவும் நல்லது. ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாவதை தடுப்பதில் இந்த காய்க்கு முக்கிய பங்கு உள்ளது. 

Tap to resize

பீர்க்கங்காயில் வைட்டமின் சி காணப்படுகிறது. இதனால் நம்முடைய நோய் எதிர்ப்பு மண்டலம் வலுவாகி நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. பீர்க்கங்காயில் உள்ள துத்தநாகம், இரும்பு, பொட்டாசியம், மற்ற வைட்டமின்கள், தாதுக்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தை பாதுகாக்க தேவையானவை. 

பீர்க்கங்காயில் காணப்படும் வைட்டமின் சி, பீட்டா கரோட்டின், ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் ஆகிய்வை ஃப்ரீ ரேடிக்கல்ஸ்களால் சருமம் பாதிப்படையாமல் இருக்க உதவும். இதில் சருமம் மட்டுமல்ல, முடி, நகங்களை கூட பராமரிக்க தேவையான முக்கிய தாது சிலிக்கா இருக்கிறது. தொடர்ந்து பீர்க்கங்காயை உண்பதால் இந்த நன்மைகளை பெற முடியும். 

Latest Videos

click me!