பைல்ஸ் பிரச்சனைக்கு 'குட் பை' சொல்ல வாழைப்பழத்தை எப்போது சாப்பிடணும் தெரியுமா?

First Published | May 6, 2023, 2:41 PM IST

Banana for Piles: பைல்ஸ் என்ற மூல நோய்க்கு நார்ச்சத்து குறைவான உணவுகளை சாப்பிடுவது தான் காரணம். முறையாக தண்ணீர் அருந்த வேண்டும்.  

கோடைக்காலத்தில் பலருக்கு மூலநோய் வர வாய்ப்புள்ளது. உடலில் அதிகமான சூடு இருந்தால் நீரிழப்பு ஏற்படும். வயிற்றில் செரிமானம் மந்தமாகும். இதனால் மலம் இறுகி மலச்சிக்கல் போன்ற பிரச்சனை வரும். ஒரு நபருக்கு வெகுகாலம் மலச்சிக்கல் இருந்தால் அது பைல்ஸ் நோயை வரவைக்கும்.  

Image: Getty Images

பைல்ஸ் பிரச்சனைக்கு மலச்சிக்கலே காரணமாக இருப்பதால், இந்த நோய் குணமாக மலச்சிக்கலை சரி செய்ய வேண்டும். இதற்கு வாழைப்பழங்கள் நல்ல தீர்வாக இருக்கும். வாழைப்பழம் மலமிளக்கியாக செயல்படும். உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க இயற்கை வழங்கிய கொடை. 

Latest Videos


மலச்சிக்கலால் அவதிப்படுபவர்கள் வாழைப்பழத்தை சாப்பிட்டால், காலையில் மலம் எளிதில் வெளியேறும். வாழைப்பழத்தில் இருக்கும் ஆன்டி-பயாடிக் பண்புகள், உடலில் உள்ள தீமை செய்யும் பாக்டீரியாக்களை மொத்தமாக அழிக்கும். பாதிப்புள்ள குடல் பகுதியை சரிசெய்யவும் உதவுகிறது. 

பைல்ஸ் பிரச்சனை இருப்பவர்கள் வாழைப்பழத்தை தினமும் சாப்பிடும் போது ஆசனவாயில் இருக்கும் வீக்கம், எரிச்சல், வலி ஆகியவை நீங்குகிறது. மூல நோய் இருப்பவர்களுக்கு ஆசனவாயில் புண்கள் காணப்படும். எனவே மலம் இறுகி வெளியேறும் போது அங்கு வலி ஏற்படும். வாழைப்பழம் உண்பதால் இந்த பிரச்சனை குறையும். 

இதையும் படிங்க: பீர்க்கங்காய் - சத்துக்களின் சூப்பர் ஸ்டார்! இத்தனை மருத்துவ குணங்களா!

மூல நோய் இருப்பவர்கள் அல்லது மலச்சிக்கல் நோயால் அவதிப்படுபவர்கள் வாழைப்பழத்தை கனிந்த நிலையில் தான் வாங்கி உட்கொள்ள வேண்டும். நன்கு பழுக்காத வாழைப்பழங்களை உண்பதால் மலச்சிக்கல் பிரச்சனையை சரி செய்ய முடியாது. 

பைல்ஸ் இருப்பவர்கள் நாள்தோறும் இரவில் உறங்குவதற்கு முன்பாக நன்கு கனிந்த வாழைப்பழங்கள் இரண்டு எண்ணம் உண்பதை பழக்கமாக வேண்டும். வாழைப்பழத்தை தவிர உணவிலும் நார்ச்சத்து அதிகம் உள்ள உணவை எடுத்துக் கொள்ள வேண்டும். நன்கு தண்ணீர் குடிக்க வேண்டும். விரைவில் குணமாகும். 

இதையும் படிங்க: முத்து போன்ற வெள்ளை பற்கள் கேரண்டி! கண்டிப்பா இந்த பழங்களை சாப்பிடுங்க!

click me!