இப்படி ஒரு முறை சட்னி செய்து தான் பாருங்களேன்! எத்தனை இட்லி கொடுத்தாலும் சாப்பிட்டுக் கொண்டே இருப்பார்கள்.

First Published | Apr 3, 2023, 9:52 PM IST

வாருங்கள்! ஹெல்த்தி அண்ட் டேஸ்ட் கொண்டக்கடலை சட்னியை வீட்டில் எப்படி எளிமையாக செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்

தென்னிந்தியாவில் இட்லியும்,தோசையும் தவிர்க்கப்பட முடியாத உணவுகளில் ஒன்றாக இருக்கிறது. இந்த இட்லிக்கு எப்போது ஒரே மாதிரி தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, மல்லி சட்னி என்று சாப்பிட கொடுத்தால் வீட்டில் உள்ளவர்கள் மட்டுமல்லாமல் சமைத்த நீங்களும் அலுத்து போய் தான் சாப்பிடுவீர்கள்.

கொஞ்சம் டிபிரெண்ட் அதே நேரத்தில் ருசியான சட்னியை செய்து தான் பாருங்க! சும்மா எத்தனை இட்லி கொடுத்தாலும் சாப்பிட்டுக் கொண்டே இருப்பார்கள். என்ன சட்னியாக இருக்கும் என்று யோசிக்கிறீர்களா?

கொண்டக்கடலை சட்னி தான் இன்று நாம் பார்க்க உள்ளோம். பொதுவாக கொண்டக்கடலை வைத்து சுண்டல், கிரேவி, மசாலா என்று தான் செய்து சாப்பிட்டு இருப்பீர்கள். ஆனால் இன்று கொண்டக்கடலை வைத்து சூப்பரான சுவையில் சட்னி செய்ய உள்ளோம். கொண்டைக்கடலையில் ஏராளமான சத்துகள் காணப்படுகின்றன.

வாருங்கள்! ஹெல்த்தி அண்ட் டேஸ்ட் கொண்டக்கடலை சட்னியை வீட்டில் எப்படி எளிமையாக செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்

தேவையான பொருட்கள்:

கொண்டைக் கடலை - 1/2 கப்
வர மிளகாய் — 4
இஞ்சி — 1 இன்ச்
தேங்காய்த் துருவல் — 2 ஸ்பூன்
தயிர் — 1 கப்
கடுகு-1/2 ஸ்பூன்
சீரகம்-1/2 ஸ்பூன்
கறிவேப்பிலை- 1 கொத்து
மல்லித்தழை-கையளவு
புதினா-கையளவு
பெருங்காயத்தூள்-1 சிட்டிகை
உப்பு-தேவையான அளவு
எண்ணெய் -தேவையான அளவு

Tap to resize

செய்முறை:

கொண்டைக்கடலையை ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி 8 மணி நேரம் வரை கொள்ள வேண்டும். ஒரு கிண்ணத்தில் தயிரைக் கடைந்து வைத்துக் கொள்ள வேண்டும். ஊற வைத்த கொண்டைக்கடலையை தண்ணீர் இல்லாமல் வடிக்கட்டி பின் அதனை ஒரு மிக்சி ஜாரில் சேர்த்து அதனுடன் 2 வர மிளகாய், இஞ்சி, தேங்காய், மல்லித்தழை, புதினா ஆகியவற்றை சேர்த்து கொஞ்சம் தண்ணீர் விட்டு கெட்டியாக அரைத்துக் கொண்டு ஒரு கிண்ணத்தில் எடுப்பித்துக் கொள்ள வேண்டும்.

இந்த சட்னியில் தயிர் சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும். அடுப்பில் ஒரு சின்ன பான் வைத்து அதில் சிறிது எண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடான பின் அதில் கடுகு, பெருங்காயத்தூள்,2 வர மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து சட்னியில் ஊற்றி பரிமாறினால் சூப்பரான கொண்டக்கடலை சட்னி ரெடி!

நோய்,திருஷ்டி,தோஷம் என பலவற்றை நீக்கும் கருங்காலியின் பயன்கள் என்னென்ன?யார் அணியலாம்?என்ன பலன்கள் பார்க்கலாம்

Latest Videos

click me!