வெறும் 10 நிமிடங்கள்! தொண்டை வலி முதல் மண்டை வலி வரை.. நிவாரணம் தரும் அற்புத பொருள்!!

First Published | Apr 3, 2023, 12:33 PM IST

தலைவலி தொடங்கி தொண்டை வலி வரையிலும் பல நோய்களுக்கு தீர்வு தரும் அற்புத பொருள் குறித்து இந்த பதிவில் காணலாம். 

உடலில் ஏதேனும் வலி ஏற்பட்டால் எந்த வேலையிலும் கவனம் செலுத்த முடியாது. அதிலும் தலை வலி வந்தால் சொல்லவே வேண்டாம். நமக்கு எந்த வேலையும் ஓடாது. ஏதேனும் நோய் தொற்றினால் ஏற்படும் தொண்டை வலிக்கு இஞ்சியை பயன்படுத்தலாம். இஞ்சி ஆயுர்வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அற்புதமான மூலிகை பொருள். 

இஞ்சியை தினமும் உணவில் சேர்த்து கொண்டால் நமக்கு உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும். சளி தொந்தரவு குறையும். சளியால் ஏற்படும் தொண்டை வலி கூட குணமாகும். தலைவலியும் பூரணமாக குணமாகிவிடும். எப்படி உணவை தவிர்த்தும் இஞ்சியை நாம் பயன்படுத்த வேண்டும் என இந்த பதிவில் காணலாம். 

இஞ்சி பானத்தில் கொழுப்புச் சத்து கிடையாது. இஞ்சி சாப்பிட்டால் வயிற்று பிரச்சனைகள் குணமாகும். குமட்டல், வாந்தி, செரிமான கோளாறு, வயிற்று போக்கு ஆகியவை குறையும். செரிமான அமிலம் உற்பத்தியாக இஞ்சி உதவும். 

Tap to resize

உங்களுக்கு தொண்டை புண் அறிகுறிகள் இருந்தால் உணவில் துருவிய இஞ்சியை சேர்த்து கொள்ளுங்கள். வெந்நீரில் துருவிய இஞ்சியை போட்டு நன்கு கொதிக்க வைக்க வேண்டும். இஞ்சி சாறு வெந்நீரில் நன்கு இறங்கிவிடும். இந்த தண்ணீரை மிதமான சூட்டில் அருந்துங்கள். நாள் முழுவதும் இப்படி சூடுநீரில் இஞ்சி சாறு (தேவைப்பட்டால் தேன் சேர்க்கலாம்) குடித்தால் தொண்டைக்கு இதமாக இருக்கும். 

நீரை கொதிக்க வைத்து கொள்ளுங்கள். அதை இறக்கி அதனுள் கொஞ்சம் இஞ்சியை போட்டு சாறு இறங்க விடுங்கள். இதனை வடிகட்டி வாயை கொப்பளித்து வந்தால், தொண்டையில் இருக்கும் நோய் தொற்று கிருமிகள் நீங்கும். தொண்டை வலி படிப்படியாக குறையும். 

இதையும் படிங்க: குடும்ப தோஷம் நீங்க!! குலதெய்வத்துக்கு இந்த 1 காரியம் செய்யுங்க! வீட்டில் சந்தோஷம் பால் போல பொங்கி வழியும்!

உங்களுக்கு சளி தொந்தரவு இருக்கும் சமயங்களில் கண்டிப்பாக வெந்நீரை தான் அருந்த வேண்டும். அந்த நீரில் ஒரு துண்டு இஞ்சி போட்டு கொதிக்க வைத்துக் கொள்ளுங்கள். இதனால் தொண்டையில் இருக்கும் கிருமிகள் குறையும். நோய்த்தொற்றும் ஏற்படாது. 

இதையும் படிங்க: பேரழகு பெற! முகம் கழுவும்போது இந்த தப்பு பண்ணாதீங்க, இத சரி பண்ணினா எல்லா சரும பிரச்சனையும் 1 வழியில் தீரும்!

Latest Videos

click me!