Oil Free Ulundu Vadai : வடை செய்ய முக்கியமானதே எண்ணெய் தான், ஆனால் அந்த எண்ணெய்யே இல்லாமல் ஹெல்தியான முறையில் எப்படி வடை செய்வது என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
தமிழர்களின் பாரம்பரிய உணவுகளில் வடையும் ஒன்று. டீ குடிக்க டீ கடைக்கு செல்பவர்களை அங்கு சுடச் சுட குவிந்திருக்கும் வடைகள் சுண்டி இழுக்கும். டீயோடு இரண்டு வடை சாப்பிட்டால் தான் பசி அடங்கும். கடையில் போடும் வடைக்கும் வீட்டில் போடும் வடைக்கும் நிறைய வித்தியாசம் இருக்கும். சில நேரங்கள்ல வடை வெளிய மொறுமொறுப்பா இருந்தாலும், உள்ள சாஃப்டா இருக்காது. இல்லனா சரியா உப்பாது. உங்களுக்கும் இப்படி நடக்குதா? மாவுல ஒரு சின்ன பொருளை சேர்க்கிறதால, வடையோட டேஸ்ட், கிரிஸ்பினஸ் ரெண்டையும் சூப்பரா மாத்தலாம். மாவை சரியான பதத்துல ரெடி பண்ணா, வெளிய கிரிஸ்பியாவும் உள்ள சாஃப்டாவும் வடை சுடலாம். ஹோட்டல் ஸ்டைல்ல ஈஸியா மெது வடை செய்யலாம். அதோடு ஒரு துளி எண்ணெய் இல்லாமல் வடை செய்வது எப்படின்னு பார்க்கலாம்.
ஒரு மிக்ஸி ஜார்ல ஊறவெச்ச உளுத்தம் பருப்பை போட்டு நல்லா நைசா அரைச்சுக்கோங்க. அரைக்கும்போது தேவைப்பட்டா மட்டும் கொஞ்சமா தண்ணி சேர்த்துக்கோங்க (மாவு கெட்டியா இருக்கணும்). இந்த மாவை ஒரு பெரிய பாத்திரத்துல மாத்திக்கோங்க. இதுல பொடியா நறுக்கின பச்சை மிளகாய், கொத்தமல்லி, இஞ்சி, கறிவேப்பிலை சேர்த்து நல்லா மிக்ஸ் பண்ணுங்க. வடை மொறுமொறுப்பா வர, இதுல ரெண்டு ஸ்பூன் அரிசி மாவு (இதுதான் அந்த சீக்ரெட்!) சேர்த்துக்கோங்க.
இப்போ தட்டின மிளகு, தேவையான அளவு உப்பு சேர்த்து எல்லாத்தையும் நல்லா கலந்துக்கோங்க. இந்த மாவை குறைஞ்சது 10 நிமிஷமாவது கையால நல்லா அடிச்சு பிசையணும். இப்படி செய்யறதால மாவுல காத்து புகுந்து, வடை நல்லா உப்பி வரும். ஒரு கிண்ணத்துல தண்ணி வெச்சுக்கோங்க. ரெண்டு கையிலயும் கொஞ்சம் தண்ணி தடவிக்கோங்க. கொஞ்சமா மாவை எடுத்து உருட்டி, கட்டை விரலால நடுவுல ஓட்டை போட்டு வடை ஷேப் கொண்டு வாங்க. (வடை ஷேப் கொண்டு வர டீ வடிகட்டியையும் நீங்க யூஸ் பண்ணலாம்).
வடையை பொதுவாக எண்ணெய்யில் பொறிப்பதால் அது உடலுக்கு ஹெல்தியானது இல்லை என கூறுவார்கள். தற்போது ஒரு துளி எண்ணெய் இல்லாமலேயே உழுந்த வடையை செய்து அசத்தலாம். ஏர் ஃபிரையர் மூலம் தான் இந்த ஆயில் ஃப்ரீ வடையை செய்ய முடியும். வடையை எண்ணெய்யில் பொறிப்பதற்கு பதிலாக ஏர் ஃபிரையரில் செய்தால், ஒரு துளி எண்ணெய் கூட தேவைப்படாது. அதுமட்டுமின்றி எத்தனை வடை வேண்டுமானாலும் சாப்பிடலாம். குறிப்பாக ஹிம் செல்பவர்கள் இந்த டெக்னிக்கை முயற்சித்துப் பார்க்கலாம். அவர்களுக்கு டயட்டில் வடையையும் சேர்த்துக் கொள்ள இந்த டெக்னிக் உதவும். ஏர் ஃபிரையரில் 205 டிகிரி செல்சியசில் 16 முதல் 18 நிமிடங்கள் வைத்து எடுத்தால் சுடச்சுட டேஸ்டான உளுந்த வடை ரெடி. மிஸ் பண்ணாம டிரை பண்ணி பாருங்க.