வறுக்கும் முறை
முதலில் மல்லி, சீரகம், சோம்பு, கிராம்பு மற்றும் பட்டை ஆகியவற்றை வாணலியில் (பேன்) சேர்த்து மிதமான தீயில் லேசாக வறுத்துக் கொள்ளவும். அப்போது மசாலா கருகிவிடாமல் பார்த்துக்கொள்வது அவசியம்.
முதல் முறை அரைத்தல்
வறுத்த பொருட்களை நன்றாக ஆறவைத்த பின், மிக்ஸியில் சேர்த்து நைசாக (மென்மையாக) அரைத்துக் கொள்ளவும்.
மசாலா கலவை
இப்போது இதனுடன் வெங்காயப் பொடி, பூண்டுப் பொடி, ஆம்சூர் பொடி, சோள மாவு, உப்பு மற்றும் சர்க்கரை ஆகியவற்றைச் சேர்த்து மீண்டும் ஒருமுறை மிக்ஸியில் நன்றாக அரைக்கவும். அவ்வளவுதான், சுவையான மேகி மசாலா தயார்!
சேமிப்பு மற்றும் பயன்கள்
- இந்த மசாலாவை ஒரு காற்றுப்புகாத கண்ணாடி பாட்டிலில் போட்டுப் பாதுகாத்தால், பல மாதங்கள் வரை கெடாமல் பயன்படுத்தி வரலாம்.
- கடைகளில் வ வாங்குவதை விட இது மிகவும் சுவையானது மட்டுமல்லாமல், ஆரோக்கியமானதாகவும் இருக்கும்.
- காய்கறி அல்லது உருளைக்கிழங்கு வறுவல் (ஃப்ரை) செய்யும்போது இந்த மசாலாவைச் சிறிதளவு தூவி விட்டால், அதன் சுவை அட்டகாசமாக இருக்கும்!
ஒருமுறை உங்கள் வீட்டிலும் இதைத் தயாரித்து முயற்சித்துப் பாருங்கள்!
இதையும் படிங்க : Egg Puff : குக்கர்ல முட்டை பப்ஸ் செய்வது எப்படி? பேக்கரி டேஸ்ட்ல வீட்டிலேயே செய்யலாம்!