karuveppilai kuzhambu: மணமணக்கும் கருவேப்பிலை குழம்பு..ஒரு முறை செய்து பாருங்க!

Published : Sep 29, 2026, 05:09 PM IST

karuveppilai kuzhambu: மணமணக்கும் கருவேப்பிலை குழம்பை வீட்டிலேயே செய்வது எப்படி? தேவையான பொருட்கள், புளிப்பு கார சுவையை சரியாக பெறும் செய்முறை, கருவேப்பிலையின் ஊட்டச்சத்து மற்றும் உணவில் சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து தெரிந்துகொள்ளலாம்.

PREV
15
கருவேப்பிலை குழம்பு

சாதத்துக்கு என்ன குழம்பு செய்வது என்று யோசிக்கிறீர்களா? வீட்டில் இருக்கும் சில எளிய பொருட்களை வைத்து, கமகமக்கும் மணத்துடன் ஒரு சூப்பரான கருவேப்பிலை குழம்பு செய்து பாருங்கள். கருவேப்பிலையின் தனித்துவமான வாசனை, வறுத்த மசாலாவின் சுவை, புளியின் புளிப்பு என அனைத்தும் சேர்ந்து சாதத்துடன் சாப்பிட அசத்தலான சுவையை கொடுக்கும்.

குறிப்பாக சுடச்சுட சாதத்தில் சிறிது நல்லெண்ணெய் விட்டு இந்தக் குழம்பை சேர்த்து பிசைந்து சாப்பிட்டால், வீட்டுச் சாப்பாட்டின் ருசியே தனிதான்.

25
தேவையான பொருட்கள்

வறுத்து அரைக்க:

  • கருவேப்பிலை - 2 கப்
  • நல்லெண்ணெய் -1 டீஸ்பூன்
  • உளுத்தம் பருப்பு -1 டேபிள்ஸ்பூன்
  • கடலைப் பருப்பு -1 டேபிள்ஸ்பூன்
  • தனியா -1 1\2 டேபிள்ஸ்பூன்
  • காய்ந்த மிளகாய் -5 முதல் 7
  • மிளகு - 1\2 டீஸ்பூன்
  • வெந்தயம் - 1\4 டீஸ்பூன்
  • தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்

குழம்புக்கு:

  • புளி - சிறிய எலுமிச்சை அளவு
  • சின்ன வெங்காயம் - 10 முதல் 15
  • பூண்டு - 5 முதல் 6 பல்
  • மஞ்சள் தூள் - 1\4 டீஸ்பூன்
  • உப்பு - தேவையான அளவு
  • நல்லெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
  • கடுகு - 1\2 டீஸ்பூன்
  • வெந்தயம் - சிறிதளவு
  • பெருங்காயம் - சிறிதளவு
  • கறிவேப்பிலை - சிறிதளவு
35
கருவேப்பிலை குழம்பு செய்வது எப்படி?
  • கருவேப்பிலையை நன்றாகத் தண்ணீரில் அலசி, தண்ணீர் இல்லாமல் வடித்து வைக்கவும். கடாயில் சிறிது நல்லெண்ணெய் ஊற்றி கருவேப்பிலையை சேர்த்து நன்றாக வதக்கவும். இலைகள் சுருங்கி நல்ல மணம் வரும் வரை வதக்கினால் போதும்.
  • அதே கடாயில் சிறிது எண்ணெய் விட்டு உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, தனியா, காய்ந்த மிளகாய், மிளகு, வெந்தயம் ஆகியவற்றை சேர்த்து மிதமான தீயில் வறுக்கவும். இறுதியில் தேங்காய் துருவலை சேர்த்து லேசாக வறுக்கவும்.

மசாலா நன்றாக ஆறியதும், வதக்கிய கருவேப்பிலையுடன் சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

குழம்பைத் தயாரிக்கவும்

  • கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு போட்டு தாளிக்கவும். கடுகு வெடித்ததும் சிறிதளவு வெந்தயம், பெருங்காயம், சின்ன வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து வதக்கவும். வெங்காயம் பொன்னிறமாக மாறியதும் மஞ்சள் தூள் சேர்க்கவும்.
  • புளியை ஊற வைத்து கரைத்து வடிகட்டி, கடாயில் ஊற்றவும். தேவையான அளவு உப்பு சேர்த்து சில நிமிடங்கள் கொதிக்க விடவும்.
  • புளிக்கரைசல் நன்றாகக் கொதித்ததும் அரைத்து வைத்துள்ள கருவேப்பிலை–மசாலா விழுதை சேர்க்கவும். தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கலக்கவும். மிதமான தீயில் குழம்பு நன்றாகக் கொதித்து எண்ணெய் மேலே பிரிந்து வரும் வரை சமைக்கவும்.
45
சுவையாக இருக்க இந்த டிப்ஸ்
  • கருவேப்பிலையை அதிகமாக கருகும் அளவுக்கு வறுக்க வேண்டாம், கசப்பு ஏற்படலாம்.
  • மசாலாவை மிதமான தீயில் வறுப்பது நல்ல மணத்தைக் கொடுக்கும்.
  • குழம்பு சற்று கெட்டியாக இருந்தால் சாதத்துடன் பிசைந்து சாப்பிட நன்றாக இருக்கும்.
  • செய்த உடனேயே சாப்பிடுவதைக் காட்டிலும் சில மணி நேரம் கழித்து சாப்பிடும்போது சுவை மேலும் ஊறியிருக்கும்.
  • நல்லெண்ணெய் பயன்படுத்தினால் பாரம்பரிய சுவை கிடைக்கும்
55
கருவேப்பிலை குழம்பு சாப்பிடுவதால் என்ன பலன்?

கருவேப்பிலையில் நார்ச்சத்து, வைட்டமின் C, கரோட்டினாய்டுகள் மற்றும் பல தாவரச் சேர்மங்கள் உள்ளன. இதனால் கருவேப்பிலையை உணவில் சேர்ப்பது மொத்த உணவின் ஊட்டச்சத்து மதிப்பை அதிகரிக்க உதவும்.

எதனுடன் சாப்பிடலாம்?

கருவேப்பிலை குழம்பு குறிப்பாக,

  • சூடான சாதம் + நல்லெண்ணெய்
  • இட்லி
  • தோசை
  • கஞ்சி
  • தயிர் சாதம் ஆகியவற்றுடன் நன்றாக இருக்கும்.

ஒரே குழம்பில் மணம், புளிப்பு, காரம், மசாலா சுவை என அனைத்தும் சேர வேண்டும் என்றால் கருவேப்பிலை குழம்பை ஒருமுறை வீட்டிலேயே செய்து பாருங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories