மூட்டு வலிக்கு நிரந்தர தீர்வு கிடைக்க! பிரண்டையை எவ்வாறு பயன்படுத்தணும் தெரியுமா?

First Published | May 17, 2023, 12:21 PM IST

பிரண்டை உண்பதால் நரம்புத் தளர்ச்சி நீங்கும், ஆண்மையைப் பெருக்கும் என்று அறிந்திருப்பீர்கள். இதில் அது தவிரவும் பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் காணப்படுகின்றன. 

கிராமங்களில் தோட்டங்களின் வேலிகளில், கருவேல மரங்களின் பக்கவாட்டில் பிரண்டை கொடி படர்ந்து காணப்படும். நகரங்களில் சில கடைகளில் பிரண்டையை விற்கிறார்கள். சிலர் வீட்டில் வளர்க்கிறார்கள். இப்படி பிரண்டையை எங்கு கண்டாலும் வாங்கி உண்பதே பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள். இதில் உடலுக்கு நன்மை செய்யும் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் காணப்படுகின்றன. 

இதய ஆரோக்கியம் 

பிரண்டையை சிறு துண்டுகளாக நறுக்கி ரசத்தில் கொதிக்க வைத்து தினம் ஒரு டம்ளர் குடித்து வந்தால் எலும்புகள் வலுவாகும். முறிந்த எலும்புகளுக்கு பிரண்டை ரசம் மிகவும் நல்லது. உடலில் கெட்ட கொழுப்புகள் இருந்தால் பிரண்டை ரசம் அதனை விரைவில் குறைக்கும்.

ரத்த ஓட்டத்தில் வேகத்தை சீராக மாற்றும். கெட்ட கொழுப்பை குறைத்து ரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதால் இதய ஆரோக்கியம் மேம்படும். பிரண்டையை துவையலாக செய்து அடிக்கடி உண்டு வந்தால் இதயத்தை நோய்களிலிருந்து பாதுகாக்கலாம்.

Tap to resize

மாதவிடாய் வலி நிவாரணி 

மாதவிலக்கு காலத்தில் முதுகு வலி, இடுப்பு வலி, வயிற்று வலியால் அவதிப்படும் பெண்கள் பிரண்டையை துவையலாக செய்து சாப்பிட்டு வரலாம். பிரண்டை உடலில் இருக்கும் தேவையில்லாத நீரை வெளியேற்றும் பண்புகளை கொண்டுள்ளது. மாதவிலக்கு காலத்தில் ஏற்படும் வலிகளை குறைக்கும் பண்புகளும் இதில் காணப்படுகின்றன. 

எலும்பு வலுவாகும் 

இளம் பிரண்டையை சிறு துண்டுகளாக நறுக்கி சிறிது நெய் விட்டு நன்கு வதக்கி பின்னர் அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். இதனை காலை, மாலை ஆகிய இரு நேரங்களிலும் நெல்லிக்காய் அளவில் சாப்பிட்டு வர எலும்புகள் பலப்படும். மூல நோய் இருப்பவர்கள் இதனை ஒரு மண்டலம் உண்டு வந்தால் அந்த நோய் குணமாகும். பிரண்டையை பேஸ்ட் போல அரைத்து எலும்பு முறிவு ஏற்பட்ட இடத்தில் வைத்து கட்டினால் விரைவில் குணமாகும. பிரண்டை துவையல் உண்பதால் எலும்பு முறிவின் வலி, வீக்கம் சரியாகும். உடைந்த எலும்புகள் கூட விரைவில் குணமடையும். 

ஆண்மையை தூண்டும்! 

நரம்புத் தளர்ச்சியை போக்குவதில் பிரண்டைக்கு நிகர் பிரண்டை தான். நல்ல சக்தி வாய்ந்தது. அடிக்கடி பிரண்டை துவையல் உண்பதால் செரிமான கோளாறுகள் நீங்கி, மலச்சிக்கல் மாயமாகும். உங்களுடைய குடலில் புழுக்கள் இருந்தால் பிரண்டை துவையல் அதனை நீக்கிவிடும். ஆண்களின் பாலியல் திறனை மேம்படுத்தும். ஆண்மை பெருகும். 

இதையும் படிங்க: எள்ளோட வெல்லம் சேர்த்து சாப்பிட்டால்.. எத்தனை நோய்களை விரட்டும் தெரியுமா?

உடல் எடை 

உடல் எடை அதிகம் இருப்பவர்கள் பிரண்டை உப்பை இரண்டு முதல் மூன்று கிராம் பாலில் கலந்து குடித்து வர இரண்டு மாதங்களில் உடல் பருமன் நன்கு குறையும். ஊளை சதை கரையும். 

ஆஸ்துமா நிவாரணம்

பிரண்டை துவையல் உண்பவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். உடலும் பலம் கொண்டதாக மாறும். கொஞ்சம் நெய்யில் பிரண்டை துண்டுகளை வறுத்து துவையல் செய்து உண்பதால் வயிற்றுப் பொருமல், குடல் புண் நீங்கும். இதனால் பசி உணர்வு தூண்டப்படும். கொஞ்சம் மிளகு அதனுடன் பிரண்டை துண்டுகள் ஆகியவற்றை அரைத்து தினமும் உண்பதால் ஆஸ்துமா தீவிரம் குறையும். 

இதையும் படிங்க: கொத்தவரங்காயில் கொட்டி கிடக்கும் நன்மைகள்!!

Latest Videos

click me!