Fluffy Omelette: முட்டைகளை வைத்து பஞ்சு போல மென்மையான கேக் ஆம்லேட் செய்வது எப்படி? தேவையான பொருட்கள், எளிய செய்முறை மற்றும் சுவையான ஆம்லேட் தயாரிக்க உதவும் குறிப்புகளை இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.
எப்போதும் ஒரே மாதிரி ஆம்லேட் சாப்பிட்டு சலிப்பாக இருக்கிறதா? அப்படியானால், வீட்டில் இருக்கும் முட்டைகளை வைத்து பஞ்சு போன்ற மென்மையான, பார்க்கவே கேக் போல இருக்கும் புசுபுசு கேக் ஆம்லேட்டை செய்து பாருங்கள். முட்டை மட்டும் இருந்தால் போதும், எளிதாக இந்த கேக் ஆம்லேட்டை வீட்டிலேயே செய்யலாம்.
தேவையான பொருட்கள்
முட்டை
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – சிறிதளவு (கடாயில் தடவ)
26
கேக் ஆம்லேட் செய்முறை - படி 1
தேவையான முட்டைகளையும் உடைத்து, வெள்ளைக் கரு மற்றும் மஞ்சள் கருவைத் தனித்தனியாக இரண்டு பாத்திரங்களில் பிரித்து எடுத்துக்கொள்ளவும். இரண்டிலும் சிறிதளவு உப்பு சேர்க்கவும்.
36
படி 2
வெள்ளைக் கருவை நன்றாக அடிக்கவும்
வெள்ளைக் கருவை விஸ்க் அல்லது முட்டை அடிக்கும் கருவியால் நன்றாக அடிக்கவும். தொடர்ந்து அடிக்கும்போது அது நுரைபோலப் பொங்கி, பஞ்சுபோன்ற பதத்திற்கு வரும். இதுதான் ஆம்லேட் புசுபுசுவென வருவதற்கான முக்கியமான படி.
ஒரு நான் ஸ்டிக் கடாயில் சிறிதளவு எண்ணெய் தடவி, மஞ்சள் கருவை ஊற்றவும். மிதமான தீயில் சிறிது நேரம் வேகவிடவும்.
வெள்ளைக் கருவைச் சேர்க்கவும்
மஞ்சள் கரு ஓரளவு வெந்ததும், அடித்து வைத்துள்ள வெள்ளைக் கருவை அதன் மேல் சேர்த்து மெதுவாகப் பரப்பவும்.
56
படி 4
மூடி வைத்து வேகவிடவும்
கடாயை மூடி வைத்து, குறைந்த தீயில் சில நிமிடங்கள் வேகவைத்தா்் புசுபுசுவென இருக்கும் கேக் ஆம்லேட் தயார். சூடான புசுபுசு கேக் ஆம்லேட்டை அப்படியே பரிமாறலாம். விருப்பப்பட்டால் மிளகுத்தூள் தூவியும் சாப்பிடலாம்.
66
படி 5
சுவையான கேக் ஆம்லேட் செய்ய சில குறிப்புகள்
வெள்ளைக் கருவை அடிக்கும் பாத்திரத்தில் தண்ணீர் அல்லது எண்ணெய் இல்லாமல் பார்த்துக்கொள்ளவும்.
வெள்ளைக் கருவை நன்றாக நுரை வரும் வரை அடிப்பதுதான் ஆம்லேட் உயரமாகவும் மென்மையாகவும் வர உதவும்.
அதிக தீயில் வேகவைத்தால் அடிப்பகுதி கருகிவிடலாம்; எனவே குறைந்த தீயைப் பயன்படுத்தவும்.
முட்டை முழுமையாக வேகியுள்ளதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளவும்.