Bad Cholesterol: கெட்ட கொலஸ்ட்ராலை எகிற வைக்கும் 5 தினசரி பழக்கங்கள்!

Published : May 07, 2026, 10:58 PM IST

Bad Cholesterol: அதிக கொலஸ்ட்ரால் அளவு, மாரடைப்பு அல்லது பக்கவாதம் போன்ற தீவிரமான உடல்நலப் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். கெட்ட கொலஸ்ட்ராலை எகிற வைக்கும் 5 தினசரி பழக்கங்கள் குறித்து பார்ப்போம்.

PREV
17
கெட்ட கொலஸ்ட்ராலை அதிகரிக்கச் செய்யும் 5 தினசரி பழக்கங்கள்
அதிக கொலஸ்ட்ரால், மாரடைப்பு அல்லது பக்கவாதம் போன்ற கடுமையான பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். பல சமயங்களில், நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்கள், எப்படி தூங்குகிறீர்கள் என்பது போன்ற உங்கள் அன்றாடப் பழக்கவழக்கங்கள் இதில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. காலப்போக்கில், இந்த சிறிய, தொடர்ச்சியான தேர்வுகளே உங்கள் கொலஸ்ட்ரால் அளவை உயர்த்திவிடும்.
27
கல்லீரல் உற்பத்தி செய்யும் ஒரு கொழுப்புப் பொருள்.
கொலஸ்ட்ரால் என்பது நமது கல்லீரல் உருவாக்கும் ஒருவித கொழுப்புப் பொருள். செல் உருவாக்கம், ஹார்மோன் உற்பத்தி போன்ற அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு உடலுக்கு இது தேவை. ஆனால், இரத்தத்தில் கொலஸ்ட்ரால் அதிகமானால், அது தமனிகளின் சுவர்களில் படிந்து, இரத்தக் குழாய் அடைப்புக்கு (Atherosclerosis) காரணமாகிறது. இதில் HDL (நல்ல கொலஸ்ட்ரால்) மற்றும் LDL (கெட்ட கொலஸ்ட்ரால்) என இரண்டு வகை உண்டு. கெட்ட கொலஸ்ட்ராலை அதிகரிக்கும் சில பழக்கங்களைப் பற்றிப் பார்ப்போம்.
37
காலை உணவைத் தவிர்ப்பது

காலை உணவைத் தவிர்ப்பது, வளர்ச்சிதை மாற்றத்தைப் பாதிக்கலாம். இது, நேரம் தவறி சாப்பிடுவதற்கும், பின்னர் அதிகமாகச் சாப்பிடுவதற்கும் வழிவகுக்கும். இதனால், உடலில் அதிகமான‌ கொழுப்புகள் அதிகரித்து, காலப்போக்கில் LDL கொலஸ்ட்ரால் அளவு உயரும். தினமும் சரியான நேரத்தில் சாப்பிடுவது, கொழுப்பைக் கட்டுப்படுத்த உதவும்.

47
நொறுக்குத்தீனிகள்
சிப்ஸ், பிஸ்கட், ஃபிரோஸன் ஸ்நாக்ஸ் போன்ற உணவுகளில் டிரான்ஸ் கொழுப்பு மற்றும் பதப்படுத்தப்பட்ட கார்போஹைட்ரேட்டுகள் அதிகம் உள்ளன. இவை கெட்ட கொலஸ்ட்ராலை அதிகரிப்பது மட்டுமல்லாமல், நல்ல கொலஸ்ட்ராலையும் குறைக்கின்றன. இந்த உணவுகளைத் தொடர்ந்து சாப்பிடுவது இதய ஆரோக்கியத்தைக் கடுமையாகப் பாதிக்கும்.
57
உடற்பயிற்சி இல்லாதது
நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்திருப்பது, உடலில் உள்ள கொழுப்பைக் கையாளும் திறனைக் குறைக்கிறது. உடற்பயிற்சி இல்லாதது HDL (நல்ல கொலஸ்ட்ரால்) அளவைக் குறைத்து, தமனிகளில் அடைப்பு உருவாகும் அபாயத்தை அதிகரிக்கும் என 'இன்டர்நேஷனல் ஜர்னல் ஆஃப் மாலிகுலர் சயின்சஸ்' இதழ் ஆய்வு கூறுகிறது. தினமும் 30 நிமிட வேகமான நடைப்பயிற்சி கூட கொலஸ்ட்ரால் சமநிலையை மேம்படுத்தும்.
67
சர்க்கரை பானங்கள், இனிப்புகள்
சர்க்கரை கலந்த பானங்கள் மற்றும் இனிப்புகள் உடல் எடையை அதிகரித்து, இன்சுலின் எதிர்ப்புத்தன்மைக்கு வழிவகுக்கும். இந்த மாற்றங்கள் மறைமுகமாகக் கொலஸ்ட்ரால் அளவை உயர்த்தி, இதய நோய் அபாயத்தை அதிகரிக்கின்றன.
77
மன அழுத்தம்

போதுமான தூக்கமின்மை மற்றும் தொடர்ச்சியான மன அழுத்தம், ஹார்மோன் சமநிலையை சீர்குலைத்து கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மன அழுத்தம் மோசமான‌ உணவுப் பழக்கங்களுக்கு வழிவகுத்து, பிரச்சனையை மேலும் மோசமாக்கும். தினமும் 7-8 மணி நேரம் நல்ல உறக்கம் கொள்வது மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவும்.

Read more Photos on
click me!

Recommended Stories