Expiry Date vs Best Before : எக்ஸ்பயரி டேட், பெஸ்ட் பிபோர் இரண்டும் ஒன்றா? உணவுப் பொருட்கள் வாங்கும் முன் தெரிஞ்சுக்கோங்க!

Published : Oct 25, 2026, 10:21 AM IST

Expiry Date vs Best Before : உணவுப் பொருட்களில் உள்ள காலாவதி தேதி, பெஸ்ட் பிபோர் ஆகிய தேதிகளுக்கு என்ன வித்தியாசம்? பால், பிஸ்கட், பிரெட் உள்ளிட்ட பொருட்களை வாங்கும்போது எந்தத் தேதியைப் பார்க்க வேண்டும் என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.

PREV
16
உணவுப் பொருட்கள் வாங்கும்போது கவனிக்க வேண்டிய முக்கிய வித்தியாசங்கள்

கடையில் பொருட்கள் வாங்கும்போது விலை எவ்வளவு, ஆஃபர் இருக்கிறதா, எடை சரியாக இருக்கிறதா என்று பார்க்கும் நாம், அந்தப் பொருளின் பாக்கெட்டில் அச்சிடப்பட்டுள்ள தேதிகளைச் சரியாகப் பார்க்கிறோமா? குறிப்பாக, காலாவதி தேதி (Expiry Date) உணவின் தரத்தைக் குறிக்கும் தேதி (Best Before) ஆகிய இரண்டு வார்த்தைகளுக்கும் ஒரே அர்த்தம் கிடையாது என்பது பலருக்கும் தெரிவதில்லை.

மளிகைப் பொருட்கள் முதல் பால், பிஸ்கட், பிரெட், சமையல் எண்ணெய், பாக்கெட் உணவுகள் வரை ஒவ்வொன்றையும் வாங்கும்போது இந்தத் தேதிகளைக் கவனிப்பது அவசியம்.

சில பொருட்கள் தரத்தை இழக்கக்கூடும். சில பொருட்களை குறிப்பிட்ட தேதிக்குப் பிறகு உட்கொள்வது உடல்நல ஆபத்தை ஏற்படுத்தலாம். அதேநேரத்தில், தேதிகளைப் புரிந்துகொள்ளாமல் நல்ல நிலையில் உள்ள சில பொருட்களையும் முன்கூட்டியே தூக்கி எறிவதால் உணவு வீணாகும் நிலையும் ஏற்படுகிறது.

அப்படியானால், இந்த மூன்று தேதிகளுக்கும் என்ன வித்தியாசம்? எந்தத் தேதியைப் பார்த்து உணவுப் பொருட்களை வாங்க வேண்டும்? காலாவதியான உணவுகளைச் சாப்பிடலாமா? இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையமான FSSAI வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்களின் அடிப்படையில், ஒவ்வொரு குடும்பத்துக்கும் பயனுள்ள இந்தத் தகவல்களைத் தெரிந்துகொள்வோம்.

26
காலாவதி தேதி (Expiry Date) என்றால் என்ன?

Expiry Date (காலாவதி தேதி) என்பது ஒரு உணவுப் பொருளை அதன் லேபிளில் குறிப்பிடப்பட்டுள்ள சேமிப்பு நிபந்தனைகளுக்கு உட்பட்டு, எப்போது வரை பயன்படுத்த வேண்டும் என்பதைக் குறிக்கும் முக்கியமான தேதியாகும்.

இந்தத் தேதியைக் கடந்த பிறகு அந்த உணவுப் பொருளைச் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில், உணவின் தோற்றம், நிறம், வாசனை ஆகியவை இயல்பாக இருந்தாலும், அதில் தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிரிகள் இருக்க வாய்ப்புள்ளது.

உதாரணமாக, ஒரு பால் பாக்கெட்டில் Expiry Date: 25/10/2026 என்று குறிப்பிடப்பட்டிருந்தால், அந்தத் தேதிக்குப் பிறகு அதைப் பயன்படுத்தக் கூடாது.

அதேபோல், உணவுப் பொருளைத் திறந்த பிறகு எத்தனை நாட்களுக்குள் பயன்படுத்த வேண்டும் என்ற வழிமுறைகள் இருந்தால் அவற்றையும் பின்பற்ற வேண்டும். உணவுப் பொருளை வாங்குவதற்கு முன்பு அதன் லேபிளில் உள்ள தேதியை மட்டும் பார்க்காமல், சேமிப்பு வழிமுறைகளையும் சரிபார்ப்பது அவசியம்.

36
பெஸ்ட் பிபோர் (Best Before) என்றால் என்ன?

கடைகளில் வாங்கும் பிஸ்கட், சாக்லேட், தின்பண்டங்கள் உள்ளிட்ட பல பொருட்களில் Best Before என்ற குறிப்பைப் பார்த்திருப்போம். ஆனால், இந்தத் தேதிக்கும் காலாவதி தேதிக்கும் என்ன வித்தியாசம் என்பது பலருக்கும் தெரிவதில்லை.

Best Before என்பது உணவுப் பொருளின் சிறந்த தரத்தைக் (Quality) குறிக்கும் தேதி. அதாவது, உணவுப் பொருட்கள் எந்த தேதி வரை அதன் அசல் தரம், சுவை, பதம் மற்றும் நறுமணத்துடன் இருக்கும் என்பதைக் குறிக்கும் காலக்கெடு ஆகும்.

பெஸ்ட் பிபோர் தேதி முடிந்த பிறகு உணவு உடனடியாகக் கெட்டுவிடும் என்று அவசியமில்லை. அந்த உணவை சாப்பிடலாம். ஆனால், அதன் அசல் சுவை அல்லது மொறுமொறுப்புத் தன்மை சற்று குறைந்திருக்கலாம்.

உதாரணமாக, ஒரு பிஸ்கட் பாக்கெட்டில் Best Before: October 2026 என்று குறிப்பிடப்பட்டிருந்தால், 2026 அக்டோபர் மாதம் வரை அந்தப் பிஸ்கட் அதன் சிறந்த தரத்தில் இருக்கும். அந்தத் தேதிக்குப் பிறகும் அதைச் சாப்பிடலாம். ஆனால், அதன் சுவை அப்படியே இருக்கும் என்று உருதியாக சொல்ல முடியாது.

குறிப்பு : Best Before தேதி கடந்த பிறகு அதன் நிறமும், வாசனையும் மாரி இருந்தால் அதை உட்கொள்வதை ்விப்பது நல்லது.குறிப்பாக, விரைவில் கெட்டுப்போகக்கூடிய உணவுப் பொருட்களில் லேபிளில் உள்ள பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றுவது அவசியம்.

காலாவதி தேதி Expiry Date)

தேதிக்குப் பிறகு உணவை உட்கொள்ள வேண்டாம். கடைகளிலும் விற்பனை செய்யக் கூடாது.

சிறந்த தரத்திற்கான காலக்கெடு (Best Before)

தேதிக்குப் பிறகு சுவை, மணம், பதம் போன்றவை குறையலாம். பாதுகாப்பானதா என்பதை சரிபார்க்க வேண்டும்.

46
உணவுப் பொருட்கள் வாங்கும்போது எப்படிப் பார்க்க வேண்டும்?

கடையில் பொருட்களை வாங்கும்போது விலையை மட்டும் பார்த்தால் போதாது.

தயாரிப்பு தேதி (Manufacturing Date): பொருள் எப்போது தயாரிக்கப்பட்டது அல்லது பேக் செய்யப்பட்டது என்பதைப் பாருங்கள்.

காலாவதி தேதி ( Expiry Date ) : பொருளின் இறுதித் தேதியைச் சரிபார்க்கவும். ஏற்கெனவே தேதி கடந்த பொருட்களை வாங்காதீர்கள்.

சிறந்த தரத்திற்கான காலக்கெடு (Best Before) : எவ்வளவு காலம் சிறந்த தரத்தில் இருக்கும் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.

பாக்கெட்டின் நிலை: கிழிந்த, கசிந்த, வீங்கிய அல்லது சீல் சேதமடைந்த பாக்கெட்டுகளை வாங்காதீர்கள்.

சேமிப்பு வழிமுறைகள்: குளிர்சாதனப் பெட்டியில் வைக்க வேண்டுமா, திறந்த பிறகு எத்தனை நாட்களுக்குள் பயன்படுத்த வேண்டும் என்பதைப் படியுங்கள்.

தள்ளுபடி பொருட்கள்: குறைந்த விலை என்பதற்காக மட்டும் வாங்காதீர்கள். மீதமுள்ள காலத்திற்குள் பயன்படுத்த முடியுமா என்பதைச் சிந்தியுங்கள்.

இந்த அம்சங்களைச் சரிபார்க்க வேண்டும் என்று FSSAI-யின் Eat Right India வழிகாட்டுதலும் வலியுறுத்துகிறது.

56
கூடுதல் கவனம் தேவை?

எந்தெந்த பொருட்களை வாங்கும்போது கூடுதல் கவனம் தேவை?

பால், தயிர், பிரெட், கேக், பிஸ்கட், சிப்ஸ், இறைச்சி, மீன், உறைந்த உணவுகள், எண்ணெய், மசாலாப் பொருட்கள், குழந்தைகளுக்கான உணவுகள் வாங்கும்போது கூடுதல் கவனம் தேவை.

உணவுப் பொருளில் இந்தத் தேதிகள் எங்கே இருக்கும்?

தேதி எல்லா பாக்கெட்டுகளிலும் ஒரே இடத்தில் இருக்காது. பின்புறம், அடிப்பகுதி, பாட்டிலின் மூடி அருகில், சீல் பகுதியில் அல்லது பாக்கெட்டின் ஓரத்தில் அச்சிடப்பட்டிருக்கலாம்.

MFG / MFD - தயாரிப்பு தேதி

PKD - பேக்கிங் தேதி

EXP - காலாவதி தேதி

USE BY - பயன்படுத்த வேண்டிய இறுதித் தேதி

BEST BEFORE - சிறந்த தரத்திற்கான காலக்கெடு

66
இறுதியாக

சில பொருட்களில் Best Before 6 Months from Packaging என்று இருக்கலாம். அப்படியென்றால் பேக்கிங் தேதியிலிருந்து ஆறு மாதங்களைக் கணக்கிட வேண்டும்.

உணவுப் பொருட்கள் வாங்கும்போது விலை, எடை, சலுகை ஆகியவற்றைப் பார்ப்பதுடன் Expiry Date, Best Before ஆகியவற்றின் வித்தியாசத்தையும் தெரிந்துகொள்வது அவசியம். இதனால் உணவுப் பாதுகாப்பை மேம்படுத்தவும், தேவையற்ற உணவு வீணாவதைத் தவிர்க்கவும் முடியும்.

Read more Photos on
click me!

Recommended Stories