தயிரில் கிஸ்மிஸ் பழத்தை போட்டு சாப்பிட்டால் எவ்வளவு நல்லது தெரியுமா? இத்தனை நன்மைகள் இருக்கு!!

First Published | May 19, 2023, 3:26 PM IST

கிஸ்மிஸ் பழத்தை தயிருடன் கலந்து உண்பதால் உடலுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கின்றன. 

தயிரில் உள்ள புரோபயாடிக்ஸ் உடலுக்கு நன்மை செய்கிறது. குடலில் நல்ல பாக்டீரியாவை ஆதரித்து குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். உங்களுடைய செரிமானம் கட்டுக்குள் இருக்கும். இவ்வளவு நன்மைகள் கொண்ட கிஸ்மிஸுடன், தயிர் கலந்து உண்பதால் பல நன்மைகள் கிடைக்கும். இவை இரண்டிலும் கால்சியம் நிறைந்துள்ளது. இந்த கால்சியம் நமது எலும்புகள் மற்றும் மூட்டுகளை ஆரோக்கியமாக வைக்கிறது.

கிஸ்மிஸ் என்பது உலர் திராட்சைகள் தான். இதையும், தயிரையும் கலந்து உண்பதால் எலும்புகள் வலுப்படும். எலும்பின் அடர்த்தியை அதிகரிக்கலாம். நம்முடைய உடலில் கால்சியம் சத்து குறைவாக இருந்தால் ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற நோய்களின் அபாயத்தை அதிகரிக்கிறது. தயிர் மற்றும் உலர் திராட்சையை சேர்த்து சாப்பிட்டால் எலும்புகள் வலுவடையும்.

Tap to resize

உலர் திராட்சையில் போரான் உள்ளது. இந்த தாது எலும்புகள் மற்றும் மூட்டுகளை ஆரோக்கியமாகவும் வலுவாகவும் வைத்திருக்க உதவுகிறது. அது மட்டுமின்றி இரண்டு மூட்டுகளுக்கு இடையே இயக்கத்தை மேம்படுத்துகிறது. இது அறிவாற்றல் செயல்பாட்டையும் மேம்படுத்துகிறது. தயிருடன் கிஸ்மிஸ் ஆகியவை சேர்த்து உண்பதால் மூட்டு பிரச்சனைகள் குறையும் என்கின்றனர் நிபுணர்கள்.  

தயிர், உலர் திராட்சையை ஒன்றாக எடுத்துக்கொள்வது நமது ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். தயிரை உறைய வைக்கும் போது உலர் திராட்சையை சேர்க்கவும். அல்லது உலர் திராட்சையுடன் தயிர் கலந்தும் சாப்பிடலாம். மதிய உணவு அல்லது காலை உணவில் இதை உண்ணுங்கள்.  

இதையும் படிங்க: இந்த பழத்தை சாப்பிட்டால் ஆயுசுக்கும் சுகர், மாரடைப்பு பிரச்சனையே வராது

தயிர் ஒரு புரோபயாடிக் உணவாகும். உலர் திராட்சை கரையக்கூடிய நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது ப்ரீபயாடிக் ஆக செயல்படுவதாக நிபுணர்கள் கூறுகின்றனர். புரோபயாடிக்குகள், ப்ரீபயாடிக்குகளின் கலவையானது கெட்ட பாக்டீரியாவை நடுநிலையாக்கும். இதனால் ஆரோக்கியமான குடல் இயக்கம் உண்டாகும். இது நல்ல பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. குடல் அழற்சியைக் குறைக்கிறது. பற்கள், ஈறுகளை ஆரோக்கியமாக வைத்திருக்கும். எலும்புகள், மூட்டுகளுக்கும் நல்லது. அதனால் கிஸ்மிஸ், தயிர் கலந்து உண்ணுங்கள். 

இதையும் படிங்க: வெறும் தரையில் படுத்து தூங்கினால் பறந்து போகும் முதுகு வலி! இன்னும் நம்ப முடியாத நன்மைகள் இருக்கு!

Latest Videos

click me!