பீட்சாவில் இவ்வளவு விஷயம் இருக்கா! அடிக்கடி பீட்சா சாப்பிட்டால் உங்க உடம்புக்கு என்னாகும் தெரியுமா?

First Published | May 18, 2023, 2:12 PM IST

வாராவாரம் பீட்சா உண்பதால் உடலுக்குள் சில தர்ம சங்டகமான மாற்றங்கள் ஏற்படுகின்றன. 

பீட்சா உண்ணும் கலாசாரம் இப்போது பெருகி வருகிறது. இது சுவையானது. சீஸ் உள்ளிட்ட ஏராளமான பொருள்கள் போட்டு தயார் செய்யப்படுகிறது. ஆனால் பீட்சா நம் உடல்நலத்திற்கு அவ்வளவு ஏற்றது அல்ல. அடிக்கடி உண்பதால் உடலில் சில பிரச்சனைகள் ஏற்படும். 

பீட்சாவில் உள்ள சீஸ், பதப்படுத்தப்பட்ட இறைச்சி டாப்பிங்ஸில் நிறைவுற்ற கொழுப்புகள் அதிகம் உள்ளது. இதனால் கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கலாம். இதய நோய்க்கான ஆபத்தை அதிகரிக்கும். ஒருவர் 3 அல்லது 4 பீட்சா துண்டுகள் அல்லது அதற்கு மேல் சாப்பிடுவது உடலுக்கு கேடு விளைவிக்கும்.  

Latest Videos


நீங்கள் உண்ணும் ப்ளைன் சீஸ் பீஸ்ஸாவின் ஒரு துண்டில் சுமார் 400 கலோரிகள் காணப்படுகின்றன. அதில் 2 அல்லது 3 பீட்சா துண்டுகளை சாப்பிடுவது கூட உங்கள் உணவில் 800 முதல் 1,200 கலோரிகளை சேர்க்கும். இதனால் உடல் எடை கிடுகிடுவென உயரும். ஒரு நபர் ஒரு நாளைக்கு சராசரியாக 2 ஆயிரம் கலோரிகளை உண்ண வேண்டும். ஆனால் சில பீட்சா துண்டுகளில் கூட அதிக கலோரி காணப்படுகிறது. தினசரி கலோரிகளில் 40 முதல் 60% வரை பீட்சா எடுத்துக்கொள்ளும். அன்றைய தினம் மற்ற உணவுகளையும் சேர்க்கும்போது, எடை அதிகமாகும். ​​

இதையும் படிங்க: பறவைகள் நம் வீட்டிற்கு வந்தால் இத்தனை அர்த்தங்களா?

பெப்பரோனி, பன்றி மாமிசம் போன்ற அதிக கொழுப்புள்ள பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளை பீட்சாவில் மேல்புறமாக தூவி சாப்பிடுவதால் குடல், வயிற்று புற்றுநோய் போன்ற சில வகையான புற்றுநோய்களை உருவாக்கும் அபாயம் உள்ளது. பீட்சாவைச் சாப்பிடுவது குற்றமல்ல. ஆனால் அளவாக உண்ண வேண்டும். பீட்சாவை அதிகமாக சாப்பிடுவது செரிமானத்தை மெதுவாக்கும். அத்துடன் மந்தமான வளர்சிதை மாற்றத்தை உருவாக்கும். 

பீட்சாவை ஆரோக்கியமான வழியில் ருசிக்க அதை வீட்டில் செய்யுங்கள். அதில் சேர்க்கும் சீஸ் அளவை கட்டுப்படுத்தலாம். மைதாவிற்குப் பதிலாக, கோதுமை மாவில் தயாரிக்கலாம். உணவகத்தில் வாங்கி பீட்சா சாப்பிடுவதை மட்டுமே நீங்கள் விரும்பினால், அளவாக உண்ணுங்கள்.  

இதையும் படிங்க: வெறும் தரையில் படுத்து தூங்கினால் பறந்து போகும் முதுகு வலி! இன்னும் நம்ப முடியாத நன்மைகள் இருக்கு!

click me!