
வீக்கெண்ட் வந்தாலே போதும், நம்மில் பல பேர் வீட்ல சிக்கன், மட்டன் வாசனை கமகமக்கும். ஆனா, நாம சாப்பிடுற கறி சத்தானதா, சுத்தமானதா, ஃப்ரெஷ்ஷானதா இருக்க வேண்டியது ரொம்ப முக்கியம். அதனால, கறிக்கடைக்குப் போகும்போது நல்ல கறியை எப்படித் தேர்ந்தெடுக்கிறதுன்னு இங்க விரிவாகப் பார்க்கலாம்.
Fridge : சிக்கன், மட்டன், மீன் எத்தனை நாட்கள் ஃபிரிட்ஜில் ஃப்ரெஷ்ஷாக இருக்கும்?
ஒரு கறியோட தரத்தை அதோட நிறத்தை வெச்சே பெரும்பாலும் கண்டுபிடிச்சிடலாம். ஆட்டுக்கறி (மட்டன்) இளஞ்சிவப்புல இருந்து நல்ல அடர் சிவப்பு நிறத்துல இருக்கணும். அதுவே ஊதா, பிரவுன் இல்ல சாம்பல் நிறத்துல இருந்தா, அது தரம் குறைஞ்ச கறியா இருக்கலாம். சிக்கனைப் பொறுத்தவரை, இளஞ்சிவப்பு அல்லது வெள்ளை நிறத்துல இருக்கணும். இந்த நிறங்கள்ல மாற்றம் தெரிஞ்சா, அது பழைய கறியா இருக்க வாய்ப்பிருக்கு. அதனால கறி வாங்கும்போது நிறத்தை நல்லா செக் பண்ணுங்க.
கறி ஃப்ரெஷ்ஷா இருக்கான்னு தெரிஞ்சுக்க, அதோட அமைப்பையும் வாசனையையும் கவனிக்கணும். ஃப்ரெஷ்ஷான கறி பார்க்க கொஞ்சம் பளபளப்பாகவும், மென்மையாகவும் இருக்கும். உங்க விரலால அழுத்திப் பார்த்தா, அது சாஃப்டா உள்ள போயிட்டு உடனே பழைய நிலைக்குத் திரும்பணும். அப்படித் திரும்பாம குழி விழுந்தா, அது பழைய கறியா இருக்கலாம். அதே மாதிரி, கறியில இருந்து எந்தவிதமான கெட்ட வாசனையும் வரக்கூடாது. லேசான கறி வாசனை இருக்கலாம், ஆனா ஒரு மாதிரி மோசமான வாசனை அடிச்சா, அதை வாங்கவே வாங்காதீங்க.
நல்ல ஃப்ரெஷ் கறியில லேசான ஈரப்பதம் இருக்கும். தொட்டுப் பார்க்கும்போது ரொம்ப ஈரமாகவோ அல்லது வறண்டோ இருக்கக் கூடாது. கறியில ஈரப்பதம் அதிகமா இருந்தா, அதுல செயற்கையா தண்ணி சேர்த்திருக்கலாம். ரொம்ப வறண்டு இருந்தா, அது பழைய கறியா இருக்க வாய்ப்பிருக்கு. இந்த ரெண்டு விஷயத்தையும் வாங்குறதுக்கு முன்னாடி கவனிங்க.
நல்ல கறியைத் தேர்ந்தெடுக்க, அதுல இருக்க கொழுப்பையும் பார்க்கணும். கறித் துண்டுல இருக்க கொழுப்பு, ஒரு மெல்லிய லேயர் மாதிரி கறியோட சேர்ந்தே இருக்கணும். கொழுப்புத் துண்டுகள் தனியா தெரிஞ்சா, அது நல்ல தரமான கறி இல்லை. இளஞ்சிவப்பு நிற கறியில கொழுப்பு குறைவா இருக்கும். அதனால, மெலிசான, லைட் கலர்ல இருக்க கறித் துண்டுகளைத் தேர்ந்தெடுக்கிறது நல்லது.
கறி வாங்கும்போது, தோலோட வாங்கவா வேண்டாமான்னு ஒரு கேள்வி வரும். தோல் இல்லாத கறியில கொழுப்பு குறைவு, சீக்கிரம் வெந்துடும், கையாளவும் ஈஸியா இருக்கும். ஆனா தோலோடு இருக்கிற கறி நல்ல மணத்தையும், ஈரப்பதத்தையும் கொடுக்கும். குறிப்பா, எலும்போடு சேர்ந்த தோல் கறிக்கு கூடுதல் சுவையையும் மென்மையையும் கொடுக்கும். உடல்நலத்துக்காக கொழுப்பைக் குறைக்க நினைச்சா, தோல் இல்லாத கறியை வாங்குங்க. நல்ல டேஸ்ட் வேணும்னா, தோலோடு இருக்கிற கறியை வாங்குறது பெஸ்ட்.
கறி ஃப்ரெஷ்ஷா இல்லைன்னா, அது மேல பாக்டீரியா உருவாகும். இந்த பாக்டீரியா கறியை ஒரு மாதிரி பிசுபிசுன்னு ஆக்கிடும். அப்படிப்பட்ட கறியை ஒருபோதும் வாங்காதீங்க. கறியோட நிறம் மாறி, பச்சை, பிரவுன் அல்லது சாம்பல் நிறத்துக்கு மாறினா, அது கெட்டுப்போச்சுன்னு அர்த்தம். புளிச்ச அல்லது கெட்ட வாசனை வந்தாலும் அது பாக்டீரியா வளர்ந்துருச்சுன்னு அர்த்தம். இதெல்லாம் உடம்புக்கு ரொம்ப ஆபத்தானது. இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கிட்டா, நாம தரமான, ஆரோக்கியமான கறியைத் தேர்ந்தெடுக்கலாம். இது சமையலை ருசியா மாத்துறது மட்டுமில்லாம, நம்ம ஆரோக்கியத்தையும் பாதுகாக்கும்.