How Long Can Raw Meat Store in the Fridge : சிக்கன், மட்டன், மீன் போன்ற இறைச்சிகளை சமைக்காமல் எத்தனை நாட்களுக்கு ஃபிரிட்ஜில் ஃப்ரெஷ்ஷாக வைக்கலாம் என்பதைப் பற்றி பார்க்கலாம்.
இன்றைய வாழ்க்கை முறையில் ஃபிரிட்ஜ்பெரும்பாலான வீடுகளில் அத்தியாவசிய மின்சாதனமாக மாறியுள்ளது. குறிப்பாக கோழிக்கறி, மட்டன், மீன் போன்ற விரைவில் கெட்டுப்போகக்கூடிய உணவுப் பொருட்களை பாதுகாப்பாக வைத்திருக்க இது உதவுகிறது. ஆனால், ஃபிரிட்ஜ்-ல் வைத்தாலே எந்த உணவும் நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும் என்பது தவறான எண்ணமாகும். ஒவ்வொரு உணவுப் பொருளுக்கும் தனித்தனி சேமிப்பு காலம் உள்ளது.
பச்சைக் கோழிக்கறியை சாதாரணமாக ஃபிரிட்ஜில் வைத்தால், 1 முதல் 2 நாட்களுக்குள் சமைத்து பயன்படுத்துவது நல்லது. அதற்கு மேல் வைத்தால் அதன் தரம் குறையத் தொடங்கும். நீண்ட நாட்கள் சேமிக்க வேண்டுமெனில், காற்றுப் புகாத வகையில் சீல் செய்யப்பட்ட பையில் வைத்து ஃபீசரில் வைக்கலாம். கோழிக்கறியில் துர்நாற்றம், நிறமாற்றம் அல்லது பிசுபிசுப்பான தன்மை இருந்தால் அதை பயன்படுத்தக் கூடாது.
35
மட்டனை எவ்வளவு நாட்கள் சேமிக்கலாம்?
மட்டனை ஃபிரிட்ஜில் பொதுவாக 3 முதல் 5 நாட்கள் வரை பாதுகாப்பாக வைத்திருக்கலாம். இருப்பினும், அதை கசிவு ஏற்படாத வகையில் நன்றாக மூடி வைப்பது மிகவும் அவசியம். மட்டனில் உள்ள கொழுப்பு மற்ற உணவுகளின் வாசனையை எளிதில் உறிஞ்சும் தன்மை கொண்டது. துர்நாற்றம் வீசுவது, நிறம் மாறுவது அல்லது பிசுபிசுப்பாக இருப்பது போன்ற அறிகுறிகள் இருந்தால் அந்த இறைச்சியை உடனே அகற்ற வேண்டும்.
மீன் மிகவும் விரைவாக கெட்டுப்போகும் உணவுப் பொருளாகும். வாங்கிய அதே நாளிலோ அல்லது அடுத்த நாளிலோ சமைத்து சாப்பிடுவது சிறந்தது. சேமிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால், ஃபிரிட்ஜில் உள்ள ஃபிரீசரில் வைத்திருப்பது நல்லது. மீனில் கடுமையான துர்நாற்றம், பிசுபிசுப்பான தன்மை அல்லது நிறமாற்றம் ஏற்பட்டிருந்தால் அதை சாப்பிடக் கூடாது. உடனே தூக்கிவீசி விடுங்கள்.
55
உணவு பாதுகாப்பு ஏன் முக்கியம்?
ஃபிரிட்ஜ் உணவை ஒரு குறிப்பிட்ட காலம் வரை மட்டுமே பாதுகாக்கும். காலாவதியான அல்லது கெட்டுப்போன இறைச்சி மற்றும் மீனை சாப்பிடுவது வயிற்றுப்போக்கு மற்றும் பிற உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும். எனவே, இறைச்சி மற்றும் கடல் உணவுகளை சரியான முறையில் சேமித்து, பரிந்துரைக்கப்பட்ட காலத்திற்குள் பயன்படுத்துவது ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியம்