தன்னுடைய 80 வயதிலும் அதே இளமையுடன் இருக்கும் அமிதாப் பச்சன்..அவரின் ஃபிட்னஸ் சீக்ரெட் என்ன தெரியுமா..?

Published : Oct 11, 2022, 09:52 AM ISTUpdated : Oct 11, 2022, 09:59 AM IST

Beauty and Fitness Secret of Amitabh Bachchan: அமிதாப் தனது 80 வயதிலும் தன்னைத்தானே கட்டுக்கோப்பாக வைத்துள்ளார். இதற்காக அவர் பின்பற்றும் ஃபிட்னஸ் சீக்ரெட் பற்றி தெரிந்து வைத்து கொள்வோம்.

PREV
15
தன்னுடைய 80 வயதிலும் அதே இளமையுடன் இருக்கும் அமிதாப் பச்சன்..அவரின் ஃபிட்னஸ் சீக்ரெட் என்ன தெரியுமா..?

இந்தி திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வந்தவர் அமிதாப் பச்சன். அமிதாப் 11 அக்டோபர் 1942 அன்று உத்தரபிரதேசத்தில் பிறந்தார். 1969ல் வெளியான சாத் இந்துஸ்தானி என்ற படம் மூலம் திரைத்துறையில் அறிமுகமான இவர் தொடர்ந்து இந்தியில் பல படங்கள் நடித்துள்ளார்.

மேலும் படிக்க...ரூ.3500 கோடி சொத்துக்கு அதிபதி.. 7 பங்களா, 11 சொகுசு கார்கள் என ராஜ வாழ்க்கை வாழும் அமிதாப் பச்சனின் மறுபக்கம்

25

பின்னர், பாலிவுட்டின் சூப்பர் ஸ்டார் நடிகராக விளங்கிய அமிதாப் பச்சன், தனது 80-வது பிறந்த நாளை  இன்று கொண்டாடி வருகிறார். ஆனால், இவரை பார்க்கும் போது, எப்படி இவர் இவ்வளவு ஃபிட்டாகவே இருக்கின்றார். இதற்காக அவர் என்ன தான் செய்கிறார் என்ற கேள்வி நம்மில் பலருக்கு இருக்கும். அமிதாப் பச்சனின், இந்த பிட்னஸ் டயட் ரகசியங்கள் பற்றி நாம் இந்த பதிவில் பார்க்கலாம்.

35

 அமிதாப் பச்சனின் உணவு திட்டம் பற்றி அவரது  சமையல்காரர் பகிர்ந்த விஷயங்களை பற்றி பார்ப்போம்:

அமிதாப் பச்சனின் காலை உணவில் முட்டை பஜ்ஜியும், ஒரு கிளாஸ் பாலும் உள்ளதாக கூறப்படுகிறது.

காலை உணவுக்குப் பிறகு, மதியம் உணவுக்கு இடையே ஸ்நாக்ஸாக தேங்காய் தண்ணீர், நெல்லிக்காய் சாறு, வாழைப்பழம், பேரீச்சம்பழம், துளசி இலைகள் அல்லது பாதாம் போன்றவற்றை எடுத்து கொள்வாராம். 

45

அமிதாப் பச்சனின் மதிய உணவில், காய்கறிகள், ரொட்டி வகைகள், ஆம்லெட், தயிர் ஆகியவை அடங்கும். பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பிக்கும் முன்பு அசைவ உணவுகளை சாப்பிட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, கடந்த 2000 ஆம் ஆண்டில் அவர் முற்றிலும் சைவமாகிவிட்டார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இரவு உணவைப் பற்றி பேசுகையில், மிகவும் லேசான உணவு எடுத்துக் கொள்பவராம். குறிப்பாக, கொஞ்சம் சூப் சாப்பிட விரும்புவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

மேலும் படிக்க...ரூ.3500 கோடி சொத்துக்கு அதிபதி.. 7 பங்களா, 11 சொகுசு கார்கள் என ராஜ வாழ்க்கை வாழும் அமிதாப் பச்சனின் மறுபக்கம்

55

அமிதாப் பச்சன் பல ஆண்டுகளுக்கு முன்பே மது குடிப்பதை நிறுத்திவிட்டார். இப்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் டீ, காபி, குளிர் பானம் உள்ளிட்ட எந்த பானங்களையும் எடுத்துக் கொள்வதில்லையாம். 


அமிதாப் பச்சனின் உடற் கட்டுக்கோப்பாக இருப்பதற்கு மிகப்பெரிய சீக்ரெட் அவரின் நடைபயிற்சி ஆகும். தகவலின் படி, அவர் ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கும், ஒருமுறை சிறிது நேரம் நடப்பாராம்.

Read more Photos on
click me!

Recommended Stories