ஜப்பானிய நடைபயிற்சி பற்றி தெரியுமா? 30 நிமிடங்களில் ஏராளமான நன்மைகள்!!

Published : May 20, 2025, 08:25 AM IST

ஜப்பானி நடைபயிற்சி குறித்த பல சுவாரசியமான தகவல்களை இங்கு காணலாம்.

PREV
15
Japanese Walking Tricks

நடைபயிற்சி உடற்பயிற்சிகளே மிகவும் எளிமையானது. ஒரு நாளைக்கு 5 ஆயிரம் அடிகளுக்கு மேல் நடந்தாலே ஏராளமான நன்மைகள் கிடைக்கும். ஜப்பானிய விஞ்ஞானிகள் வெறும் நடைபயிற்சி அல்லாமல் வயதுக்கு ஏற்ற உடற்பயிற்சிகளை பரிந்துரைத்துள்ளனர். இதனை இடைவெளி நடைப்பயிற்சி பயிற்சி (IWT) என்பார்கள்.

25
ஜப்பான் ரகசியம்

ஜப்பானில் தோன்றிய இந்த இடைவெளி நடைப்பயிற்சி பயிற்சி மூன்று நிமிட விறுவிறுப்பான நடைபயிற்சியும், மூன்று நிமிட எளிதான வேகப் பயிற்சியும் மாறி மாறி செய்யக் கூடியது. வெறும் 30 நிமிடங்கள் 5 முறை மீண்டும் மீண்டும் செய்தால் போதுமானது.

35
பலன்கள்

இப்படி விறுவிறுப்பாகவும், மெதுவாகவும் மாறி மாறி நடப்பதால் ஆரோக்கியமான இதயம், வலிமையாம கால்கள் கிடைப்பதோடு உங்களுடைய உயிரியல் கடிகாரத்தை சீர் செய்யும் வாய்ப்பாகவும் அமையும். வளர்சிதை மாற்றம் அதிகரிப்பதால் எடையும் கட்டுக்குள் இருக்கும். அதிகபடியான கொழுப்பு எரிப்புக்கு ஒரு மணிநேரம் வரை இந்த பயிற்சியை செய்யலாம்.

45
எத்தனை நாட்கள்?

வாரத்தில் நான்கு முறை இப்படி நடக்கலாம். தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு செய்தால் நல்ல பலன்களை காணலாம். தொடர்ச்சியாக செய்யும்போது கொழுப்பு, இரத்த அழுத்தம், இரத்த சர்க்கரை அளவுகள் கட்டுப்பாடு, தசை வலிமை போன்றவை மேம்படும்.

55
இந்த முறை ஏன் சிறந்தது?

இந்த முறையை பின்பற்றினால் சுவாச முறை மாறுகிறது. வேகமாகவும், மித வேகமாகவும் மாறி மாறி நடப்பதால் இதயத் துடிப்பை அதிகரிக்கும். தசை ஒருங்கிணைப்பை மேம்படுத்தும். உடலின் சமநிலை மேம்படுத்த உதவுவதால் வயதானவர்களுக்கு நல்லது. உடலில் உள்ள நச்சுக்களை நீக்க உதவும். உணவில் உள்ள ஊட்டச்சத்து உறிஞ்சுதலை மேம்படுத்த உதவுகிறது. படைப்பாற்றலை மேம்படுத்தி மனத் தெளிவை கூர்மைப்படுத்தும். நிச்சயம் அனைத்து வயதினரும் செய்யலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories