ஆரோக்கியமான முறையில் உடல் எடையைக் குறைப்பது என்பது பலருக்கும் ஒரு சவாலான விஷயமாகவே உள்ளது. ஆனால், எவ்வித தீவிரமான குறுக்கு வழிகளும் இன்றி, தினசரி பழக்கவழக்கங்களை மாற்றுவதன் மூலம் 20 கிலோ எடையைக் குறைத்து காட்டியுள்ளார் ஒரு பெண்.
உடலை எப்போதும் சுறுசுறுப்பாக வைப்பதற்கு நடைபயிற்சி சிறந்த வழியாகும். தினமும் 10,000 அடிகள் நடப்பதன் மூலம் தோராயமாக 300 முதல் 500 கலோரிகள் வரை எரிக்க முடியும். சரியான உணவுத் திட்டத்துடன் (Caloric Deficit) இதைத் தொடர்ந்து செய்து வரும்போது எடை குறைப்பு எளிதாகிறது.
26
வாரத்திற்கு 4 நாட்கள் வலிமைப் பயிற்சி :
வெறும் கார்டியோ (Cardio) பயிற்சிகள் மட்டும் செய்யாமல், வாரத்தில் 4 நாட்கள் வலிமைப் பயிற்சிகளை (Strength Training) மேற்கொள்வது தசை வலிமையை அதிகரிக்கும். தசைகள் அதிகரிக்கும் போது, ஓய்வில் இருக்கும் நேரத்திலும் உடல் அதிக கலோரிகளை எரிக்கும் (Metabolism rate).
36
போதுமான தண்ணீர் அருந்துதல் :
தினமும் 2.5 முதல் 3 லிட்டர் வரை தண்ணீர் குடிப்பது மிகவும் அவசியம். பல நேரங்களில் நமது உடல் தாகத்தை பசி என்று தவறாகப் புரிந்து கொண்டு அதிக உணவை உட்கொள்ளத் தூண்டும். போதுமான தண்ணீர் குடிப்பது கலோரி குறைந்த பானங்களை நாடுகின்ற பழக்கத்தையும் தவிர்க்க உதவும்.
நாம் உட்கொள்ளும் ஒவ்வொரு வேளை உணவிலும் புரதச்சத்து (Protein) நிறைந்து இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். இது வயிற்றை நீண்ட நேரம் நிறைவாக வைத்திருப்பதுடன், எடை குறையும் காலத்தில் தசைகள் பலவீனமடையாமல் பாதுகாக்கிறது.
56
8 மணி நேர ஆழ்ந்த தூக்கம் :
உடல் எடை குறைப்பில் தூக்கத்தின் பங்கு மிக முக்கியமானது. தினமும் குறைந்தபட்சம் 8 மணி நேரம் தூங்குவது பசியைக் கட்டுப்படுத்தும் ஹார்மோன்களைச் சீராக வைத்திருக்க உதவும். தூக்கமின்மை தேவையற்ற நொறுக்குத் தீனிகள் மீதான ஆசையை அதிகரிக்கும்.
66
சீரான தன்மை :
எடை குறைப்பு என்பது ஒரே நாளில் நடக்கும் அற்புதம் அல்ல. தற்காலிக டயட்டுகளை விட நீண்ட காலம் பின்பற்றக்கூடிய ஆரோக்கியமான பழக்கங்களை வழக்கமாக்கிக் கொள்வதே நிலையான முடிவுகளைத் தரும்.