குளிர்காலத்தில் முடி உதிர்தல், சரும பாதிப்பு, சளி, காய்ச்சல் போன்ற பல பிரச்சனைகள் வரும். இவை அனைத்தையும் ஒரே ஜூஸில் சரிசெய்யலாம். அந்த ஜூஸ் என்ன, அதை எப்படி குடிப்பது என பார்ப்போம்.
24
ABC Juice
ABC ஜூஸ் ஆப்பிள், பீட்ரூட், கேரட் கலந்து தயாரிக்கப்படுகிறது. இதில் ஜிங்க், பொட்டாசியம், வைட்டமின் A, B6, C போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இவை உடலுக்கு பல நன்மைகளை வழங்கும். குறிப்பாக குளிர்காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும்
34
முடி உதிர்தலை தடுக்க ABC ஜூஸ் எப்படி குடிக்க வேண்டும்?
ABC ஜூஸுடன் இஞ்சி, நெல்லிக்காய், கொத்தமல்லி சேர்த்தால் முடி உதிர்வு நிற்கும். செரிமான பிரச்சனை வராமல் இருக்க, வேகவைத்த பீட்ரூட், கேரட் பயன்படுத்துவது நல்லது. இந்த ஜூஸை தினமும் குடித்தால் சருமம் பொலிவு பெறும்.
வேகவைத்த பீட்ரூட், கேரட் ஜூஸ் எளிதில் ஜீரணமாகும். இதனால் சத்துக்கள் உடலால் முழுமையாக உறிஞ்சப்படும். 15 நாட்களில் முடி உதிர்வு நிற்பதை கவனிக்கலாம். மூட்டுவலி உள்ளவர்கள் நெல்லிக்காய், எலுமிச்சை சேர்க்க வேண்டாம் என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள்.