1 ஸ்பூன் ஓட்கா போதும்! தலைமுடி உதிர்வு இளநரை பொடுகு என அனைத்து பிரச்சனைக்கும் ஒரே தீர்வு!

First Published | Apr 14, 2023, 6:41 PM IST

ஓட்காவை குடிப்பதை தான் நாம் அறிந்திருப்போம். ஆனால் அதை கூந்தலுக்கு பயன்படுத்தினால் பல்வேறு முடி பிரச்சனைகளில் இருந்து விடுபட முடியும். 

வோட்காவை தலைமுடிக்கு பயன்படுத்தினால் பொடுகு தொல்லை நீங்கி, முடி உதிர்வும் குறையும். ஓட்கா நம் முடியை பட்டுப் போல மென்மையாகவும், பளபளப்பாகவும் மாற்றுகிறது. வோட்காவின் நன்மைகள் குறித்து இங்கு காணலாம். 

ஓட்கா சிறந்த ஹேர் வாஷ். இதை பயன்படுத்தினால் தலைமுடியில் உள்ள அழுக்குகளை அகற்றிவிடும். இதற்கு ஒரு கப் தண்ணீரில் இரண்டு தேக்கரண்டி ஓட்காவை ஊற்றி எடுத்து கொள்ளுங்கள். உங்கள் தலைமுடிக்கு ஷாம்பு போட்டு கழுவிய பின்னர், இறுதிக் கழுவலாக ஓட்காவை பயன்படுத்தலாம். ஓட்காவில் உள்ள ஆல்கஹால் முடியில் உள்ள மற்ற அழுக்குகளை அகற்ற உதவுகிறது. உங்கள் தலைமுடியை சுத்தமாகவும் பளபளப்பாகவும் மாற்றுகிறது. 

Tap to resize

உங்களுக்கு பொடுகு தொல்லை இருக்கிறதா? நீங்கள் கண்டிப்பாக ஓட்காவைப் பயன்படுத்த வேண்டும். ஓட்கா மற்றும் தண்ணீரை சம அளவில் கலந்து, அப்படியே உங்கள் உச்சந்தலையில் தடவி மசாஜ் செய்யுங்கள். நன்கு மசாஜ் செய்துவிட்டு 30 நிமிடம் அப்படியே விட்டுவிடுங்கள். பின்னர் குளிர்ந்த நீரில் கழுவுங்கள். அடிக்கடி செய்யும்போது மாற்றத்தை உணருவீர்கள். 

ஓட்காவை பயன்படுத்தி உங்கள் தலைமுடிக்கு ஊட்டமளிக்கலாம். இதனால் முடி உடையாமல் வலுவாகும். ஒரு கிண்ணத்தில் 1 முட்டையின் மஞ்சள் கரு, ஒரு ஸ்பூன் தேன், கொஞ்சம் வோட்கா கலந்து எடுங்கள். இதை தலைமுடி, உச்சந்தலையில் தடவி 20 நிமிடங்கள் அபப்டியே விட்டு பின் வெதுவெதுப்பான நீரில் கழுவி கொள்ளுங்கள். 

முடியை அழகாக மாற்றவும் ஓட்கா உதவும். இதற்கு 2 டேபிள்ஸ்பூன் ஓட்காவை, 1 கப் தண்ணீரில் கலந்து முடியின் வேர்களில் தடவுங்கள். ஓட்காவில் உள்ள ஆல்கஹால் முடியின் வேர்களை மேம்படுத்த உதவுகிறது. இது உங்கள் தலைமுடியை அடர்த்தியாகவும், அழகாகவும் மாற்ற உதவுகிறது.  

இதையும் படிங்க: நகங்களின் நிறத்தை என்ன நினைச்சிங்க! அதை வைத்தே உங்க ஆரோக்கியத்தை சொல்லலாம்.. உங்க நகம் எப்படி இருக்கு பாருங்க!

வோட்காவை ஆமணக்கு எண்ணெயுடன் பயன்படுத்தினால் முடி உதிர்வுக்கு நல்ல பலன் கிடைக்கும். ஒரு டீஸ்பூன் ஓட்காவுடன், 2 ஸ்பூன் ஆமணக்கு எண்ணெய் கலந்து அதை உச்சந்தலையில் நன்கு மசாஜ் செய்யவும்.1 மணி நேரம் அப்படியே விட்டு, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவவும். இப்படி செய்தால் முடி உதிர்வு பிரச்சனை நீங்கி மிருதுவான கூந்தல் பெறுவீர்கள். வோட்கா உடலுக்கு தீங்கு செய்யலாம். ஆனால் முடிக்கு நன்மை தான் பயக்கிறது. 

குறிப்பு: இந்த டிப்ஸை சில முறை பயன்படுத்தி பாருங்கள். உங்கள் முடிக்கு ஒத்து வராவிட்டால் ரிஸ்க் எடுக்காதீர்கள்! 

இதையும் படிங்க: கொசு கடியால் ஏற்படும் தடுப்பு சொறி! வெறும் 5 நொடிகளில் முகம் கை கால்களில் தடுப்பு மறையும்! இதை டிரை பண்ணுங்க!!

Latest Videos

click me!