சிலருக்கு அவர்களின் முழங்கைகள் மற்றும் முழங்கால்கள் கருப்பாக இருக்கும். இதன் காரணமாக, எவ்வளவு பிடித்த ஆடைகள் இருந்தாலும், முழங்கைக்கு மேலே உள்ள ஆடையை ஒதுக்கி வைக்கின்றன. இது மட்டுமல்லாமல், அவர்களின் தன்னம்பிக்கையும் இதனால் குறைகிறது. இவை வருவதற்கு பல காரணங்கள் இருந்தாலும், சில எளிய வீட்டு வைத்தியமூலம் இந்த பிரச்சனையை நீக்கலாம். இப்போது அது குறித்து இங்கே தெரிந்து கொள்வோம்..
தயிர் மற்றும் வினிகர்: ஒரு டீஸ்பூன் தயிர் மற்றும் ஒரு டீஸ்பூன் வினிகர் அல்லது எலுமிச்சை சாறு எடுத்து முழங்கைகளில் தடவவும். சிறிது நேரம் மசாஜ் செய்யவும். இப்படி தொடர்ந்து செய்து வந்தால் முழங்கையின் நிறம் வெண்மையாக மாறும்.
தயிர் மற்றும் மஞ்சள்: ஒரு டீஸ்பூன் தயிரில் ஒரு சிட்டிகை மஞ்சள் சேர்த்து நன்கு கலக்கவும். இந்தக் கலவையை கருமையான முழங்கையில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்யவும். 20 நிமிடம் கழித்து கழுவவும்.
தேங்காய் எண்ணெய்: தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெயை கருப்பாக இருக்கும் உங்கள் முழங்கைகள் மற்றும் முழங்கால்களில் தடவலாம். இவை கருப்பு நிறத்தை நீக்கி உடல் நிறமாக மாற்ற உதவுகிறது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
பாதாம்: பாதாமை பச்சையாகப் பாலில் அரைத்து முழங்கைகளில் தடவினால் முழங்கையின் கருமையும் நீங்கும்.
எலுமிச்சை பழம் மற்றும் சர்க்கரை: எலுமிச்சம்பழத்தை இரண்டாக வெட்டி அதில் சர்க்கரையை தூவி சிறிது நேரம் ஊறவைத்து முழங்கைகளில் தேய்க்கவும். இது முழங்கையின் கருப்பு நிறத்தையும் நீக்குகிறது.