உங்களது இந்த பழக்கவழக்கங்கள் உங்கள் சருமத்திற்கு எதிரி.. உடனே அவற்றை விட்டு விடுங்கள்..

First Published | Nov 23, 2023, 7:06 PM IST

உங்கள் சருமம் ஆரோக்கியமற்றதாக இருந்தால் அவற்றிற்கு உங்களது இந்த பழக்க வழக்கங்களே காரணம். எனவே அவற்றிலிருந்து விலகி இருங்கள். அவை...

வயதாகும்போது முகத்தில் சுருக்கங்கள் ஏற்படுவது சகஜம். ஆனால் சிலருக்கு இளம் வயதிலேயே முகத்தில் சுருக்கம் ஏற்படுகிறது. உங்களிடம் இருக்கும் சில கெட்ட பழக்கங்களே இதற்கு காரணம் என்கின்றனர் சுகாதார நிபுணர்கள். உங்களிடம் உள்ள கெட்ட பழக்கங்கள் உங்கள் சருமத்திற்கு நிறைய பாதிப்பை ஏற்படுத்தும். அவற்றிடமிருந்து விலகி இருங்கள். அவை..

அதிக சூரிய ஒளி முகத்தில் சுருக்கங்களை ஏற்படுத்தும். எனவே, தோல் பராமரிப்பில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என சுகாதார நிபுணர்கள் விரும்புகின்றனர். வெளியில் செல்லும் போதெல்லாம் சன்ஸ்கிரீன் தடவுவது அவசியம். ஏனெனில் சூரிய ஒளியை அதிகமாக வெளிபடுத்துவது சருமத்திற்கு அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது.

Tap to resize

புகைபிடித்தல் மற்றும் குடிப்பழக்கம் உங்கள் உடலையும் ஆரோக்கியத்தையும் கடுமையாக பாதிக்கிறது. இந்த பழக்கங்கள் உங்கள் இரத்த ஓட்டத்தை மெதுவாக்கும். இது சருமத்தின் வயதான செயல்முறையை மேலும் துரிதப்படுத்துகிறது.

இதையும் படிங்க:  முக சுருக்கத்தால் அவதிப்படுறீங்களா? கவலையை விடுங்க..இந்த ஃபேஸ் பேக்குகளை ட்ரை பண்ணுங்க!

கோபம் மற்றும் அதிக மன அழுத்தம் ஆகியவை சருமத்தை சேதப்படுத்தும். இவை அனைத்தும் உங்கள் ஆரோக்கியத்திற்கு மிகவும் ஆபத்தானவை. மன அழுத்தம் கார்டிசோல் என்ற ஹார்மோனை அதிகமாக உற்பத்தி செய்கிறது.

இதையும் படிங்க:  Youthful Wrinkles: இளம் வயதிலேயே முகச் சுருக்கமா? இனி கவலைப்படாம இந்த டிப்ஸ் ஃபாலோ பன்னுங்க!

அழகுக்காகப் பயன்படுத்தப்படும் ரசாயன அடிப்படையிலான அழகுசாதனப் பொருட்களும் உங்கள் சருமத்திற்கு தீங்கு விளைவிக்கும்.. மேலும் இதனை நீங்கள் அதிகமாகப் பயன்படுத்துவதால், சருமம் வறண்டு இறந்துவிடும்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

உங்கள் சருமம் எப்பொழுதும் வறண்டு இருந்தால், அதன் விளைவு உங்கள் சருமம் விரைவில் சுருக்கமடைய ஆரம்பிக்கும். எனவே, உங்கள் சருமத்தை எப்போதும் ஈரப்பதத்துடன் வைத்துக் கொள்ளுங்கள். அதற்கு நல்ல மாய்ஸ்சரைசர்களைப் பயன்படுத்துவது நல்லது.

Latest Videos

click me!