சரும பராமரிப்புக்கு ரோஸ் வாட்டர் பல நூற்றாண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதில் காணப்படும் பாக்டீரியா எதிர்ப்பு பண்பு நமது சருமத்தை கிருமிகளிடம் இருந்து பாதுகாக்கும். ரோஸ் வாட்டரை சரும ஈரப்பதம், புத்துணர்ச்சி ஆகியவற்றுக்காக பயன்படுத்துவார்கள்.
கோடை காலத்தில், ரோஸ் வாட்டர் நம்ப முடியாத அற்புத பலன்களை கொடுக்கும். இதனால் சருமம் வறண்டு போகாமல் நீரேற்றமாகவும் குளிர்ச்சியாகவும் இருக்கும். பளபளப்பான சருமத்திற்கு ரோஸ் வாட்டர் மிகவும் பயனுள்ளதாக பெண்களால் ஏற்று கொள்ளப்பட்டு பரவலாக பயன்படுத்தப்படுகிறது. வெயில் காலத்தில் தினமும் முகத்தில் ரோஸ் வாட்டர் தடவலாமா? இந்தக் கேள்வி பலரது மனதிலும் ஓடிக்கொண்டே இருக்கிறது.
ரோஸ் வாட்டர் பொதுவாக சருமத்தை பராமரிக்க மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. இதில் ஏராளமான ஆன்டிஆக்ஸிடன்ட்கள் காணப்படுகின்றன. இதனால் சருமத்தை பாதிக்கும் பாக்டீரியாவில் இருந்து பாதுகாப்பு கிடைக்கும். தினமும் ரோஸ் வாட்டர் பூசுவதால் சரும ஆரோக்கியம் மேம்படும்.
கோடைக்காலத்தில் ரோஸ் வாட்டரை தினமும் சருமத்தில் தடவினால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள், வெண்புள்ளிகள், முகப்பருக்கள் ஆகியவை நீங்கும். இது முகத்தில் உள்ள சுருக்கங்களை எதிர்த்துப் போராட உதவுகிறது. தோல் நிபுணர்களின் கூற்றுப்படி, சோர்வாக இருக்கும்போது, புத்துணர்வு பெற கொஞ்சம் ரோஸ் வாட்டர் கலந்த பேஸ் பேக் போட்டு கொள்ளலாம்.
இதையும் படிங்க: Vitamin E! பேரழகுக்கு ஆசைப்பட்டு அடிக்கடி வைட்டமின் ஈ ஆயில் முகத்தில் தடவுகிறீர்களா? அதனால் இவ்ளோ பாதிப்புகள்!
வெயில் காலத்தில் நமது உச்சந்தலையில் வறட்சி ஏற்படும். இதனால் பொடுகு பிரச்சனையும், முடி உதிர்வும் ஏற்படும். ரோஸ் வாட்டரை கூந்தலில் பயன்படுத்தினால் பொடுகு பிரச்சனை விரைவில் நீங்கும். இது கூந்தலை ஈரப்பதமாகவும், மென்மையாகவும் மாற்றும்.
ரோஸ் வாட்டர், தேன் பேஸ் பேக்
கோடைகாலத்தில் ரோஸ் வாட்டர் பயன்படுத்தி பேஸ் பேக் போட வேண்டும் என்றால், இந்த எளிய முறையை பின்பற்றுங்கள். ஒரு கிண்ணத்தில் தேன், 1 ஸ்பூன் ரோஸ் வாட்டர் ஆகியவற்றை கலந்து கொள்ளுங்கள். இதை முகத்தில் தடவி 15 முதல் 20 நிமிடங்கள் விடவும். பின்னர் மசாஜ் செய்து குளிர்ந்த நீரில் முகம் கழுவவும். இந்த பேஸ் பேக் உங்கள் சருமத்தை ஈரப்பதமாக வைக்கும்.
ரோஸ் வாட்டர், தயிர் பேஸ் பேக்
இரண்டு ஸ்பூன் தயிர், ஒரு ஸ்பூன் ரோஸ் வாட்டர் ஆகியவற்றை ஒரு கிண்ணத்தில் எடுத்து நன்கு கலந்து கொள்ளுங்கள். இதனை முகத்தில் தடவி 15 முதல் 20 நிமிடங்கள் அப்படியே விடுங்கள். பின்னர் முகத்தை நன்கு மசாஜ் செய்து குளிர்ந்த நீரில் கழுவுங்கள். உங்களுடைய சருமம் பளபளப்பாக மாறும்.
இதையும் படிங்க: Vaseline: வாஸ்லின் இருந்தால் இவ்வளவு விஷயங்களை செய்யலாமா? நம்ப முடியாத பலன்கள்!!